முகத்தில் இருக்கும் நீங்கா கருமையை எளிதில் அகற்ற உதவும் சில வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

உங்களது முகத்தில் இருக்கும் கருமை போகமாட்டீங்குதா? எவ்வளவு க்ரீம்களைப் பயன்படுத்தினாலும், அந்த கருமை போனபாடில்லையா? கவலையை விடுங்கள். நம் வீட்டு சமையலறையில் எப்போதும் இருக்கும் பொருட்களைக் கொண்டே ஈஸியாக போக்கலாம்.

அதிலும் ப்ளீச்சிங் தன்மை கொண்ட பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, சரும பிரச்சனைகள் அகலுவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். இத்தகைய தன்மை தக்காளி, எலுமிச்சை, தயிர் போன்றவற்றில் உள்ளது.

Natural Tomato Facial Masks To Get Rid Of Pigmentation

இந்த பொருட்களை குறிப்பிட்ட சில பொருட்களுடன் சேர்த்து ஃபேஸ் பேக் போட வேண்டும். அதிலும் நல்ல சக்தி வாய்ந்த பண்புகளை உள்ளடக்கிய சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் மேம்படுவதை நன்கு காணலாம்.

இங்கு முகத்தில் இருக்கும் நீங்கா கருமையை எளிதில் அகற்ற உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி + தயிர்

தக்காளி + தயிர்

* 1 டீஸ்பூன் தக்காளி கூழுடன், 1 டேபிள் ஸ்பூன் நற்பதமான தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை செய்தால், முகத்தில் உள்ள கருமை மறைவதை நன்கு காணலாம்.

தக்காளி + ஓட்ஸ்

தக்காளி + ஓட்ஸ்

* நன்கு கனிந்த தக்காளியை அரைத்து, அத்துடன் 2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

* பின் அதை முகத்தில் தடவி, 10 நிமிடம் நன்கு காய வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தை தேய்த்து கழுவுங்கள்.

* இப்படி வாரத்திற்கு 2 முறை முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகத்தில் கருமை நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.

தக்காளி + உருளைக்கிழங்கு

தக்காளி + உருளைக்கிழங்கு

* 1 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழுடன், 1/2 டீஸ்பூன் உருளைக்கிழங்கு சாற்றினை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின்பு அதனை முகச் சருமத்தில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து நீரில் கழுவுங்கள்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை போட்டு வந்தால், முகம் பொலிவோடு இருப்பதைக் காணலாம்.

தக்காளி + நாட்டுச் சர்க்கரை

தக்காளி + நாட்டுச் சர்க்கரை

* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறுடன் 1 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் அந்த கலவையை சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை போட நல்ல பலன் கிடைக்கும்.

தக்காளி + முட்டை வெள்ளைக்கரு

தக்காளி + முட்டை வெள்ளைக்கரு

* ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டீஸ்பூன் தக்காளி கூழ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

* இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் நீங்கா கருமையும் நீங்கிவிடும்.

தக்காளி + ஆப்பிள் சீடர் வினிகர் + மஞ்சள்

தக்காளி + ஆப்பிள் சீடர் வினிகர் + மஞ்சள்

* 2 டீஸ்பூன் தக்காளி கூழுடன், 4 துளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் தயாரித்து வைத்துள்ள கலவையை கருமையாக உள்ள பகுதிகளில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவுங்கள்.

* இந்த மாஸ்க்கை மாதத்திற்கு ஒருமுறை போடுவதன் மூலம், கருமை சீக்கிரம் அகன்றுவிடும்.

தக்காளி + கற்றாழை ஜெல்

தக்காளி + கற்றாழை ஜெல்

* 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் தக்காளி கூழ் இரண்டையும் ஒன்றாக ஒரு பௌலில் கலந்து கொள்ளுங்கள்.

* பின் அந்த மாஸ்க்கை முகத்தில் தடவி, 10 நிமிடம் நன்கு காய வையுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

தக்காளி + தேன்

தக்காளி + தேன்

* 1 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழ் மற்றும் 1 டீஸ்பூன் தேனை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

* பின் அதை முகத்தில் சரிசமமாக தடவி, 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த, நல்ல தீர்வைக் காணலாம்.

தக்காளி + அவகேடோ

தக்காளி + அவகேடோ

* அவகேடோ பழத்தை மசித்து, அத்துடன் 2-3 டீஸ்பூன் தக்காளி கூழ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் மைல்டு கிளின்சர் பயன்படுத்தி குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

* இந்த மாஸ்க்கை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்த, முகத்தில் உள்ள கருமை சீக்கிரம் மறைந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Natural Ways To Remove Sun Tan Instantly

Here are some tips and ways to treat tan and get rid of it.
Story first published: Thursday, December 14, 2017, 16:30 [IST]
Subscribe Newsletter