முகம் பொலிவாக இருக்க இயற்கை க்ரீம் வீட்டில் எப்படி செய்யலாம்?

By: Arunkumar P.M
Subscribe to Boldsky

முகப்பொலிவு க்ரீம் வகைகள் உங்கள் முக அழகை அதிகரிக்க உதவும். சந்தையில் பல்வேறு வகையான முகப்பொலிவு க்ரீம் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. அவை உடனடியாக அழகைக் கூட்ட முற்பட்டாலும் அவை உங்களுடைய உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும். கவலை வேண்டாம்.

10 homemade facecream recipes that will make your skin

ஒருவருடைய தோல் வகை தனிச்சிறப்புப் பெற்றதாகும். எனவே ஒரே வகைத் தீர்வு அனைவருக்கும் பொருந்தாது. எனவே தோல் வகையைப் பொருத்து நீங்கள் முகப்பொலிவு க்ரீமைத் தேர்வு செய்ய வேண்டும்.

உங்கள் முகம் முகப்பரு மற்றும் ஒவ்வாமைத் தன்மை உடையதாக இருந்தால் நீங்கள் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பொருத்தமான தீர்வின் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வீட்டிலேயே முகப்பொலிவுக்கான தீர்வுகளை இங்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கற்றாழை:

கற்றாழை:

கால் கப் கற்றாழைக் களிம்பு, 2 தேக்கரண்டி பாதாம் எண்ணை, 2 தேக்கரண்டி நறுமண மலர்ச்செடியின் சாறு போன்றவற்றைக் கலந்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் பூசி கழுவ வேண்டும். இதனால் முகம் பொலிவு பெறுகிறது.

ஓட்ஸ்:

ஓட்ஸ்:

இது பவுடர் வகையான முகப்பொலிவு தீர்வு வகையாகும். 1 தேக்கரண்டி ஓட்ஸ்சையும் 2 தேக்கரண்டி செவ்வந்திப் பூச் சாற்றையும் கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் பென்டோனைட் களிமண்ணை ஒரு கரண்டி அளவு கலந்து கொள்ள வேண்டும். இந்த பவுடருடன் சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் பூச வேண்டும்.

தேன் மற்றும் களிமண் கலவை:

தேன் மற்றும் களிமண் கலவை:

மிகவும் மிருதுவான தோல் வகைகளுக்கு இது சிறந்த தீர்வாகும். 2 தேக்கரண்டி களிமண்ணுடன் கால் கப் தேனை கலந்துகொள்ள வேண்டும். இதனுடன் நறுமண எண்ணெய் கலந்து முகத்தில் தடவ வேண்டும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்:

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்:

2 தேக்கரண்டி தேனுடன் கால் பகுதி தேங்காய் எண்ணெயைக் கலக்க வேண்டும். இதனுடன் இரண்டு சொட்டு லாவண்டர் நறுமண எண்ணெயைக் கலந்து கொள்ளவும். பின்னர் இதனை முகத்திற்குப் பூசினால் நல்ல தீர்வு கிடைக்கும்.

கட்டை கரி:

கட்டை கரி:

1 கப் தேங்காய் எண்ணையுடன் நன்கு தயாரிக்கப்பட்ட 6 கட்டை கரி காப்ஸ்யூல்களைக் கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் 5 சொட்டு லாவண்டர் எண்ணெய் அல்லது பன்னீரைக் கலந்து கொள்ளவும். இது உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற அசுத்தங்களை அகற்றும்.

 தக்காளி:

தக்காளி:

பொதுவாகவே தக்காளி சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தக்காளிச் சாறு 2 தேக்கரண்டி அளவு,1 தேக்கரண்டி பால் மற்றும் 1 கரண்டி லெமன் சாறு போன்றவற்றைக் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவை உடனடியாக முகப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

தயிர் மற்றும் ஸ்ட்ராபெர்ரி:

தயிர் மற்றும் ஸ்ட்ராபெர்ரி:

2 ஸ்ட்ராபெர்ரியுடன் 2 தேக்கரண்டி தயிரைக் கலந்து முகத்தில் பூச வேண்டும். இது முகத்திற்குச் சிறந்த பலனைக் கொடுக்கும்.

ஆப்பிள் பழச்சாறு வினிகர்:

ஆப்பிள் பழச்சாறு வினிகர்:

2 தேக்கரண்டி ஆப்பிள் பழச்சாற்றில் ஆன வினிகரைக் கொதிக்க வைத்த தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு சொட்டு 'கேஸ்டைல் சோப்பு" கலந்து பூசினால் முகப்பரு மறைந்து அழகைக் கொடுக்கும்.

தேன் மற்றும் லெமன்:

தேன் மற்றும் லெமன்:

நீங்கள் எண்ணெய் வழியும் தோலினைக் கொண்டிருந்தால் இந்தத் தீர்வு உங்களுக்குப் பொருந்தும். தேனுடன் லெமன் கலந்து உபயோகித்தால் முகம் பொலிவடையும். வேண்டுமெனில் சிறிது தண்ணீர் கலந்து உபயோகிக்கலாம்.

சமையல் சோடா மற்றும் தேன்:

சமையல் சோடா மற்றும் தேன்:

1 தேக்கரண்டி தேன், சிறிதளவு மஞ்சள்தூள், ½ தேக்கரண்டி அடு உப்பு போன்றவற்றை உள்ளங்கையில் வைத்துத் தேய்க்க வேண்டும். பின்னர் அதனை முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்துத் தண்ணீரில் கழுவி உலரவிட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 homemade facecream recipes that will make your skin

10 homemade facecream recipes that will make your skin
Story first published: Thursday, February 2, 2017, 11:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter