For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முழங்காலில் உள்ள கருமையை போக்க சில அற்புத வழிகள்!

By Maha
|

சிறுவயதில் பள்ளியில் செய்த சேட்டையினால் பலமுறை முட்டி போட்டிருப்போம். அதுமட்டுமின்றி, அதிகமான அளவில் முழங்காலில் சூரியக்கதிர்கள் படுவது, அதிகப்படியான உராய்வு, வறட்சி, அழுக்குகள், மரபணுக்கள் போன்றவற்றினாலும் முழங்கால் கருமையாகும்.

முழுங்கால் கருப்பாக உள்ளது என்று ஆண்களை விட பெண்களே அதிகம் வருத்தப்படுவார்கள். இதற்கு பெண்கள் உடுத்தும் உடைகளே காரணம். இப்படி கருமையாக உள்ள முழங்காலை வெள்ளையாக்க பல க்ரீம்களை பெண்கள் வாங்கிப் பயன்படுத்துவார்கள்.

ஆனால் இதனால் எம்மாற்றமும் தெரிந்திருக்காது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை முழங்காலில் உள்ள கருமையைப் போக்க சில எளிய அற்புத வழிகளைக் கொடுத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேக்கிங் சோடா மற்றும் பால்

பேக்கிங் சோடா மற்றும் பால்

பேக்கிங் சோடா சருமத்தை நன்கு சுத்தம் செய்யும். மேலும் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும். எனவே இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து, முழங்காலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், முழங்காலில் உள்ள கருமையைப் போக்கலாம்.

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி சருமத்தின் நிறம் மேம்பட்டு காணப்படும். அதிலும் அதனை தேனுடன் சேர்த்து கலந்து, முழங்காலில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, முழங்காலின் நிறம் சீக்கிரம் அதிகரிக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயும் முழங்கால் கருமையைப் போக்கும். இது சருமத்தின் ஈரப்பசையை மேம்படுத்தி, சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்ற உதவும். மேலும் இது சருமத்திற்கு குளிர்ச்சித்தன்மையை வழங்கும்.

கடலை மாவு மற்றும் பால்

கடலை மாவு மற்றும் பால்

கடலை மாவுடன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முழங்காலில் தடவி உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வினிகர் மற்றும் தயிர்

வினிகர் மற்றும் தயிர்

வினிகர் மற்றும் தயிரை ஒன்றாக கலந்து, முழங்காலில் தடவி சில நேரம் ஊற வைத்து, பின் கழுவவும். இப்படி தினமும் செய்தால் முழங்காலில் உள்ள கருமை வேகமாக நீங்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள், முழங்கால் கருமையை சீக்கிரம் போக்கும். அதற்கு தினமும் கற்றாழை ஜெல்லை முழங்காலில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Get Rid Of Dark Knees

In this article, we at Boldsky will be listing out some of the easy ways to get rid of dark skin on the knees. Have a look to know more.
Desktop Bottom Promotion