இந்த ஒரு ஃபேஸ் பேக் ஒரே இரவில் முகத்தை வெள்ளையாக்கும் எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

மாசற்ற அழகிய சருமத்தைப் பெற தான் ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும். இருப்பினும், அம்மாதிரியான சருமத்தைப் பெறுவது என்பது கடினம். அதிலும் இன்றைய மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழலால் சரும பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

This 1 Mask Can Give Your Skin Golden Glow Overnight, Try It!

குறிப்பாக முகப்பருக்கள், சருமத்தில் ஆங்காங்கு கருமையான படலம், கண்களைச் சுற்றி முதுமைக் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற அழகை பாழாக்கும் பிரச்சனைகளைத் தான் அதிகம் சந்திக்க நேரிடுகிறது. இவைகளில் இருந்து விடுபட வேண்டுமானால், சருமத்திற்கு அவ்வப்போது முறையான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும்.

இங்கு ஒரே இரவில் சரும பிரச்சனைகளைப் போக்கி, சருமத்தை வெள்ளையாக்கும் ஓர் அற்புத ஃபேஸ் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி பின்பற்றி வந்தால், அழகிய மற்றும் பொலிவான சருமத்தைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செய்முறை #1

செய்முறை #1

முதலில் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் தூசிகளை மைல்டு கிளின்சர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதிலும் பாலை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

ஒரு பௌல் மற்றும் 1 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை ஒரு ஊசியால் துளையிட்டு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #3

செய்முறை #3

பின் ஒரு டேபிள் ஸ்பூன் கிளிசரினை பௌலில் சேர்த்து, ஸ்பூன் பயன்படுத்தி நன்கு கிளறி விட வேண்டும்.

செய்முறை #4

செய்முறை #4

பின்பு அதில் சிறிது ரோஸ் வாட்டர் துளிகளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #5

செய்முறை #5

பிறகு அதனை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி மென்மையாக 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக மசாஜ் செய்யும் போது மேல்நோக்கிய திசையிலேயே மசாஜ் செய்ய வேண்டும்.

செய்முறை #6

செய்முறை #6

இரவு முழுவதும் அப்படியே ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் முகத்தைப் பார்த்தால் முகம் பிரகாசமாக இருப்பதைக் காணலாம்.

குறிப்பு

குறிப்பு

* அளவுக்கு அதிகமாக வறட்சியான சருமம் கொண்டவர்கள், தினமும் இரவில் படுக்கும் முன், இந்த மாஸ்க்கை போடலாம்.

* எண்ணெய் பசை அல்லது காம்பினேஷன் சருமம் கொண்டவர்கள், வாரத்திற்கு 2 முறை போடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This 1 Mask Can Give Your Skin Golden Glow Overnight, Try It!

Listed in this article are glowing face mask recipes. For clear and supple skin, try this herbal mask.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter