முகத்தில் அசிங்கமாக இருக்கும் சொரசொரப்பைப் போக்க வேண்டுமா?

Posted By:
Subscribe to Boldsky

முகத்தில் மூக்கு, கன்னம், தாடை போன்ற இடங்கள் சொரசொரவென்று அசிங்கமாக காணப்படும். இத்தகைய சொரசொரப்பு கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகளால் தான் ஏற்படுகிறது. இவற்றைப் போக்க ஸ்கரப் சிறந்த வழி.

என்ன தான் கடைகளில் கெமிக்கல் கலந்த ஸ்கரப்புகள் விற்கப்பட்டாலும், இயற்கைப் பொருட்களைக் கொண்டு ஸ்கரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

சரி, இப்போது சருமத்தை சொரசொரப்பாக்கும் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகளைப் போக்கும் நேச்சுரல் ஸ்கரப்புகள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓட்ஸ் & தண்ணீர்

ஓட்ஸ் & தண்ணீர்

ஓட்ஸ் பொடியுடன் நீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

சர்க்கரை & எலுமிச்சை

சர்க்கரை & எலுமிச்சை

சர்க்கரையுடன் எலுமிச்சை சாற்றினை சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து குளிர்ந்த நீரில் கழுவி, பின் மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும். சென்சிடிவ் சருமத்தினர் இந்த முறையைத் தவிர்க்கவும்.

எலுமிச்சை & தேன்

எலுமிச்சை & தேன்

தேன் சருமத்தில் உள்ள இறந்த செல்களையும், எலுமிச்சை சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். ஆகவே இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய, சருமம் மென்மையுடனும், பொலிவோடும் இருக்கும்.

ஆலிவ் ஆயில் & ஓட்ஸ்

ஆலிவ் ஆயில் & ஓட்ஸ்

ஓட்ஸ் பொடியுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதோடு, சரும செல்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்தும் வழங்கப்படும்.

பேக்கிங் சோடா & தண்ணீர்

பேக்கிங் சோடா & தண்ணீர்

பேக்கிங் சோடா மற்றும் நீரை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய, சரும மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் எண்ணெய் பசை சருமத்தினர் இந்த முறையைப் பின்பற்றுவது, எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.

பட்டை & தேன்

பட்டை & தேன்

பட்டையில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. இது சருமத்திற்கு நல்லது. இத்தகைய பட்டை பொடியுடன் தேன் கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து கழுவி வர, சருமத்தின் மென்மை அதிகரிக்கும்.

காபி & ஆலிவ் ஆயில்

காபி & ஆலிவ் ஆயில்

காபி பொடியுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்றவை நீங்கி, சரும மென்மை மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Scrubs To Make Your Face Spot Free

Here are scrubs to ensure your skin looks best and spot free. Check out....
Story first published: Tuesday, October 4, 2016, 12:46 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter