உங்களுக்கு அடிக்கடி முகப்பரு வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

சிலருக்கு முகப்பருக்கள் அடிக்கடி வரும். இதனால் முகத்தின் கன்னப் பகுதியில் எப்போதும் கருமையான முகப்பருத் தழும்புகள் இருக்கும். இந்த தழும்புகள் போவதற்குள்ளேயே மீண்டும் சிலருக்கு பருக்கள் வரும். இதனால் பலர் தங்களது முகத்தைக் காணவே வெறுப்பார்கள்.

Reasons You Have Random Acne And Skin Breakouts

மேலும் இந்த பருக்களைப் போக்க கண்டதை முயற்சிப்பார்கள். சரி, என்றாவது உங்கள் முகத்தில் பருக்கள் வருதற்கான காரணம் என்னவென்று யோசித்ததுண்டா? இல்லையெனில், இக்கட்டுரை அதற்கான விடையை அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால் அதிகம் குடிப்பது

பால் அதிகம் குடிப்பது

பால் குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். ஆனால் அதே பாலை அளவுக்கு அதிகமாக குடித்தால், பருக்கள் வரும் என பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு ஏற்கனவே பருக்கள் வருமாயின், பால் அதிகம் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

டயட்டில் மாற்றம்

டயட்டில் மாற்றம்

சரும ஆரோக்கியத்தில் டயட்டும் முக்கிய பங்கை வகிக்கிறது. சமீபத்தில் நீங்கள் சாப்பிடும் உணவில் மாற்றத்தைக் கொண்டு வந்தால், அதன் காரணமாகவும் பருக்கள் எட்டிப் பார்க்கக்கூடும். முக்கியமாக கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் நிறைந்த உணவுகள், கடினமான டயட் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவையும் சருமத்தில் பருக்களை உண்டாக்கும்.

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றமும் முகப்பருக்களை வரச் செய்யும். அதிலும் குளிர்ச்சியான காலநிலையில் இருந்துவிட்டு, திடீரென்று மிகவும் வெப்பம் நிறைந்த பகுதிக்கு சென்றால், அதன் காரணமாகவும் பருக்கள் சருமத்தில் இருந்து எட்டிப் பார்க்கும்.

தவறான சரும பராமரிப்பு

தவறான சரும பராமரிப்பு

சருமத்திற்கு ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் சருமம் ஆரோக்கியமாகலாம். ஆனால் அளவுக்கு அதிகமான எண்ணெயைத் தடவினால், அதனால் சருமத்தில் பருக்கள் வரக்கூடும். அதுமட்டுமின்றி, தவறான மேக்கப் மற்றும் சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தினாலும், சருமத்துளைகள் அடைக்கப்பட்டு, பருக்கள் வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons You Have Random Acne And Skin Breakouts

Here are some reasons you have random acne and skin breakouts. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter