முகத்தில் தேவையற்ற முடியை நீக்குவது எப்படி? இந்த ஒரு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

நம்மில் பலருக்கு முகத்தில் தேவையற்ற முடி வளரும். மெல்லிய மீசை, தாடி போல் வளரும். இதனால் எத்தனை பேர் முகத்தை ஃபோட்டோ எடுக்கவோ, அல்லது, வெளிக்காட்டவோ வெட்கப்படுவதுண்டு.

இதற்காக வருத்தப்படத் தேவையில்லை. ஏனெனில் இது ஹார்மோன் சம நிலையில்லாததால் வரும் பிரச்சனை.

நீங்கள் தகுந்த மருத்துவரை நாடி, உடலில் ஏதேனும் பிரச்சனையுள்ளதா என பரிசோதித்து, தகுந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.

Natural tips for removal of facial hair

மேலும் இந்த முடிகளை அகற்ற, பார்லர் சென்று வேக்ஸிங் செய்ய விருப்பப்பட்டால், அந்த ஆசையை தள்ளிப் போடுங்கள். ஏனெனில் இவை, கூந்தல் செல்களை அதிகமாய் தூண்டி, இன்னும் வளரச் செய்துவிடும்.

ஆகவே இயற்கையாகவே இதனைப் போக்க முனைந்திருங்கள்.

கஸ்தூரி மஞ்சளை பொடித்து, தினமும் அதனை இரவில் பூசிக் கொண்டு வாருங்கள். விரைவில் முடி பலமிழந்து விடும். அதையும் தவிர்த்து, இப்போது சொல்லப்போகும் குறிப்பு மிகவும் உபயோகமானதாக இருக்கும். செலவும் இல்லை.

தேவையானவை :

காய்ந்த வால்நட் ஓடு - 1

அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்

Natural tips for removal of facial hair

இவை இரண்டுமே முகத்தில் வளரும் சிறு முடிகளை பலமிழக்கச் செய்துவிடும். மேலும் முடி மேற்கொண்டு வளராமல் கட்டுப்படுத்தும். மென்மையான சருமத்தை தரும்.

Natural tips for removal of facial hair

வால்நட் ஓட்டினை பொடி செய்து கொண்டு, அதனை 1 ஸ்பூன் எடுத்து, அதில் அரிசி மாவு கலந்து, நீர் கலந்து பேஸ்ட் போலச் செய்து முகத்தில் முடி இருக்கும் பகுதிகளில் தடவுங்கள். சில நிமிடங்களுக்கு மெதுவாக தேய்க்கவும். பின்னர் 15 நிமிடங்களுக்கு பின், குளிர்ந்த நீரில் கழுவுங்கள். தினமும் செய்தால் ஒரே வாரத்தில் முடி உதிர்ந்துவிடும்.

English summary

Natural home remdy for removal of facial hair

Natural home remdy for removal of facial hair
Subscribe Newsletter