முகத்தில் உடனடி பொலிவு வேண்டுமா? இரண்டே நிமிடத்தில் !!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

முகம் எல்லா சமயங்களிலும் புத்துணர்வுடன் இருக்காது. சில சமயங்களில் மிகவும் களைப்பாக இருக்கும். பொலிவின்றி ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்று சொல்ல தோன்றும்.

அதுவும் திருமணம், போன்ற விசேஷங்களுக்கு செல்லும்போதுதான் முகம் சோர்வாக தெரியும். அலைச்சல் சரியான தூக்கம் இல்லாதது என பல காரணங்கள் இருக்கலாம்.

அந்த மாதிரியான சமயங்களில் கைகொடுக்கும் இங்கே சொல்லப்பட்டிருக்கும் ஒரு குறிப்பு. செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும். ஒரு முறை செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் போதும். வேண்டும் பொழுதினில் இதனை உபயோகித்தால் உடனடியாக புத்துணர்வு தரும்.

 Instant Mist for Rejuvenate the

இதில் உபயோகிக்கும் பொருட்கள் வெள்ளரிக்காய் சாறு, விட்ச் ஹாஜல் (கடைகளில் கிடைக்கும்), ரோஸ் வாட்டர் மற்றும் இன்னும் பல ஆர்கானிக் பொருட்கள் உள்ளது.

ரோஸ் வாட்டர் உங்கள் சருமத்தின் அமில காரத்தன்மையை சமன்படுத்துகிறது. சருமத்தை சரி செய்யும். கற்றாழை சுருக்கங்களை போக்கும். மென்மையான சருமத்தை தரும்.

விட்ச் ஹாஜல் சருமத்தை இறுக்கும். சரும துளைகளை சுருக்கும். இந்த பொருட்களைக் கொண்டு எப்படி உங்கள் சருமத்தை பொலிவாக்கலாம் என பார்க்கலாம்.

 Instant Mist for Rejuvenate the

தேவையானவை :

ரோஸ் வாட்டர் - அரை கப்

கற்றாழை சதைப்பற்று - 1 டீ ஸ்பூன்

விட்ச் ஹாஜல் - 1 டீ ஸ்பூன்

வெள்ளரிக்காய் சாறு - 2 டேபிள் ஸ்பூன்

லாவெண்டர் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்

 Instant Mist for Rejuvenate the

வெள்ளரிக்காயை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் மற்ற எல்லா பொருட்களையும் கொடுக்கப்பட்ட அளவில் கலந்து ஒரு சுத்தமான பாட்டில் அல்லது ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக குலுக்க வேண்டும்.

 Instant Mist for Rejuvenate the

பின்னர் அதனை 1 மணி நேரத்திற்கு ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். மேக்கப்பை அகற்றியவுடன் ராசயனங்கள் சருமத்தில் தங்கியிருக்கும்.

அந்த மாதிரியான சமயங்களில் இதனை முகத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள் அல்லது மிகவும் சோர்ந்துள்ள சமயங்களில், முகம் வறண்ட போது, அல்லது பொலிவின்றி இருக்கும்போது இந்த கலவையை முகத்தில் தடவி விட்டால் உடனடி புத்துணர்ச்சி, பொலிவு கிடைக்கும். முயன்று பாருங்கள். நல்ல ரிசல்ட் கிடைத்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

English summary

Instant Mist for Rejuvenate skin

Instant Mist for Rejuvenate the
Story first published: Thursday, August 18, 2016, 12:30 [IST]