15 நிமிடத்தில் முகத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்க வேண்டுமா?

Posted By:
Subscribe to Boldsky

தற்போது நிறைய பெண்கள் முகத்தில் ஆண்களைப் போல் முடி வளர்கிறது என்று அழகு நிலையங்களுக்கு ஒவ்வொரு மாதமும் தவறாமல் மொய் வைத்துக் கொண்டிருக்கின்றனர். சில பெண்களுக்கு ஆண்களைப் போல் மீசை காண ஆரம்பிக்கும். இதனைத் தடுக்க அப்பர்-லிப்ஸ் எடுப்பார்கள்.

அப்பர்-லிப்ஸ் செய்யும் போது கடுமையான வலியை உணரக்கூடும். இதனைத் தவிர்க்க வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் ஒன்றை தயாரித்துப் பயன்படுத்தினால், அதனால் உடனே முகத்தில் வளரும் தேவையற்ற முடியைப் போக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மத்திய கிழக்கில் பிரபலம்

மத்திய கிழக்கில் பிரபலம்

இந்த பேக் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள பெண்களால் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பேக் முடியை நீக்குவது மட்டுமின்றி, சருமத்தை பிரகாசமாகவும், மென்மையாகவும் வைத்துக் கொள்ளும். மேலும் இதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால், சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

தேன் - 2 டேபிள் ஸ்பூன்

ஓட்ஸ் பொடி - 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

செய்முறை:

ஓட்ஸ் பொடியுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தேவையற்ற முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். பின் அவ்விடத்தில் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

எத்தனை முறை செய்ய வேண்டும்?

எத்தனை முறை செய்ய வேண்டும்?

இந்த பேக்கை வாரத்திற்கு 2-3 முறை என ஒரு மாதம் செய்து வந்தால், சருமத்தில் வளரும் தேவையற்ற முடியின் வளர்ச்சி முற்றிலும் நின்றிருப்பதை நன்கு காண்பீர்கள்.

சென்சிடிவ் சருமமா?

சென்சிடிவ் சருமமா?

ஒருவேளை உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால், இந்த முறையை பின்பற்றும் முன் தோல் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் சருமம் மேலும் மோசமாவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

In Just 15 Minutes These 3 Ingredients Will Remove Facial Hair Forever

In this article we’ll share with you a natural recipe which will remove your facial hair in less than 15 minutes and leave your skin radiant and smooth.
Story first published: Wednesday, August 24, 2016, 17:16 [IST]
Subscribe Newsletter