முகத்தில் சொரசொரவென்று இருக்கும் கரும்புள்ளிகளை வேகமாக நீக்குவது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

ஆண்கள், பெண்கள் என இருவரும் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கரும்புள்ளிகள். இது சருமத்துளைகளில் அதிகப்படியான எண்ணெய் சுரந்து, இறந்த செல்களின் தேக்கத்தால் வரக்கூடியது. இந்த கரும்புள்ளிகள் மூக்கின் மேல் மற்றும் அதைச் சுற்றிய பகுதி, தாடைப் பகுதிகளில் ஏற்படும்.

இந்த செயல்கள் தான் முகப்பருவை அதிகம் வரவழைக்கும்- உஷார்!

கரும்புள்ளிகளால் முகத்தின் மென்மைத்தன்மை பாதிக்கப்படும். இந்த கரும்புள்ளிகளைப் போக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றினால், கரும்புள்ளிகளால் சரும மென்மைத்தன்மை பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.

கீழே கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்ற வாரத்திற்கு 2-3 முறை பின்பற்றி வந்தால், முற்றிலும் நீக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால் மற்றும் தேன்

பால் மற்றும் தேன்

பால் மற்றும் தேன் சருமத்திற்கு எப்போதும் நல்லது. 1 டேபிள் ஸ்பூன் தேனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அத்துடன் 1 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து 1 நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைத்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி அதன் மேல் ஒரு மெல்லிய காட்டன் துணியை வைக்கவும்.

பின் 15-20 நிமிடம் கழித்து, மெதுவாக உரித்து எடுத்த பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், கரும்புள்ளிகளை வேகமாக போக்கலாம்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவை கரும்புள்ளிகள் உள்ள இடத்தின் மேல் தடவி, அதன் மேல் ஃபேஷியல் டிஸ்யூ பேப்பர் கொண்டு அழுத்தி உலர்ந்ததும், அதன் மேல் மற்றொரு முறை வெள்ளைக்கருவை தடவி மீண்டும் டிஸ்யூ பேப்பரை வைத்து உலர்ந்ததும் மீண்டும் ஒருமுறை செய்ய வேண்டும்.

டிஸ்யூ பேப்பர் முழுமையான உலர்ந்த பின், அதனை உரித்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை என ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், கரும்புள்ளிகள் வருவதைத் தடுக்கலாம்.

தேன்

தேன்

சுத்தமான தேனை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

இந்த முறைக்கு இரவில் படுக்கும் முன் முதலில் முகத்தைக் கழுவி உலர்த்திக் கொள்ளவும். பின் ஒரு பௌலில் 1-2 எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்துக் கொண்டு, கரும்புள்ளிகள் உள்ள இடத்தைச் சுற்றி காட்டன் பயன்படுத்தி தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

ஒரு சிறிய பௌலில் 2-3 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தைச் சுற்றித் தடவி, விரலால் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின் அது நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

ஒரு சிறிய பௌலில் 2 டீஸ்பூன் க்ரீன் டீ இலைகளைப் போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி மென்மையாக 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள்

மஞ்சள்

ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் பொடி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் புதினா சாற்றினை சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இல்லாவிட்டால் மஞ்சள் பொடியுடன், சந்தன பொடி மற்றும் பால் சேர்த்து, பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவவும். இந்த முறையை 3-4 முறை செய்தால் கரும்புள்ளிகள் வருவதைக் குறைக்கலாம்.

தக்காளி சாறு

தக்காளி சாறு

தக்காளி சாற்றினை இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், கரும்புள்ளிகளை நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Get Rid Of Blackheads Fast?

Here are some home remedies that will provide you with a solution on how to get rid of blackheads fast. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter