தூய்மையான முகம் எப்படி பெறலாம்? சில சிறந்த ஆயுர்வேத குறிப்புகள் !!

Written By:
Subscribe to Boldsky

மாசு, மருவின்றி, பளிங்கு போல் சருமம் எல்லாருக்கும் விருப்பமானதாகவே இருக்கும். ஆனால் உங்கல் சருமம் அத்தகையதாக எப்போதும் இருக்குமென் சொல்ல முடியாது.

How to protect your skin

உங்கள் வீட்டில் எப்போதும் இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை கைவசம் வைத்திருங்கள். இவை உங்கள் சருமத்தை மிக மிருதுவாகவும் பளிச்சென்றும் வைத்திருக்கும் பொருட்கள். அவை என்னவென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தங்கம் போல் தோற்றம் பெற :

தங்கம் போல் தோற்றம் பெற :

வேப்பிலையை அரைத்து உடல் முழுவதும் பூசி சரியாக 5 நிமிடம் ஊறவைத்த பிறகு நன்றாக தேய்த்து குளித்து பாருங்கள். அதன் பின் சோப் போடக் கூடாது.

நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள். சருமத் தோல் நிறமேறும். மிக மென்மையாக மாறும். தினமும் முடியாவிட்டாலும் வாரம் 3 நாட்கள் உபயோகியுங்கள். அற்புதமான மூலிகை மருந்து இது. குறிப்பாக வெயில் காலத்தில் பயன்படுத்துங்கள்.

வறண்ட சருமம் பெற்றவர்கள் :

வறண்ட சருமம் பெற்றவர்கள் :

வறண்ட சரும பெற்றவர்கள் ரோஸ் வாட்டரில் சிறிது தேன் கலந்து முகம் கழுத்தில் தேயுங்கள்.

10 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தின் ஆழமாக உள்ள அழுக்கு, இறந்த செல்கள் வெளிவந்துவிடும். ஈரப்பதமும் அளிக்கும். மற்ற அழகு சாதனங்கள் போல் முகத்தில் வறட்சியை ஏற்படுத்தாது

சரும பாதிப்பை குணப்படுத்துங்கள் :

சரும பாதிப்பை குணப்படுத்துங்கள் :

சருமத்தில் உண்டாகும் கரும்புள்ளி, வறட்சி மற்றும் புற ஊதாக்கதிர்கள் சரும செல்களை சிதைக்கும். இதனை தடுக்க இரவில் மஞ்சள் பூசிக் கொண்டால் அது பாதிக்கப்பட்ட செல்களை ரிப்பேர் செய்யும்.

அது போல் கற்றாழையை உபயோகப்படுத்தினால் வறட்சி மற்றும் கரும்புள்ளி மறையும்.

 சருமத்திற்கு போஷாக்கு அளிக்க:

சருமத்திற்கு போஷாக்கு அளிக்க:

சருமத்திற்கு ஊட்டம் அளிக்க எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கின்றது. தினமும் எண்ணெய் பூசுவதால் சருமம் வளம் பெறுகின்றது.

சருமத்தின் போஷாக்கு தக்க வைக்க முடியும். வயதாவதை தடுக்க முடியும். ஆகவே குளிக்குமுன் தேங்காய் எண்ணெய், ஆலிவ், நல்லெண்ணெய் போன்றவற்றை உபயோகியுங்கள்.

பாதுகாப்பு அளிக்க :

பாதுகாப்பு அளிக்க :

கிருமிகள் மற்றும் தூசுக்களிலிருந்து பாதுகாப்பு அளிக்க துளசி, நெல்லிக்காய் ஆகியவற்றை உபயோகப்படுத்துங்கள். இவை கிருமிகளை தடுப்பதால் முகப்பரு, அழுக்கு ஆகியவை இல்லாமல் முகம் தூய்மையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to protect your skin

Use these best ayurvedic tips to get radiant skin.
Story first published: Wednesday, October 26, 2016, 10:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter