ஒட்டிய கன்னங்கள் பூசிய கன்னங்களாக கிடைக்க என்ன செய்யலாம்?

Written By:
Subscribe to Boldsky

குளிர்காலத்தில் சருமத்தில் ஈரத்தன்மை குறைவதால் தோல் வறண்டு சுருக்கங்கள் வறட்சி உண்டாகும். லேசாக வெள்ளை செதிலாக தோலிருந்து வெளிவருவது மிக அதிக வறட்சியையின் அறிகுறி.

How to get rid of dryness of the skin

அதோடு கொலஜன் உற்பத்தியும் இந்த சமயத்தில் குறைவதால் கன்னங்கள் ஒட்டி இருப்பவர்களுக்கு இன்னும் ஒடுங்கி அசிங்கமாக இருக்கும்.

குளிர்காலத்தில் உங்கள் சருமம் பாதிக்கப்படாமலிருக்க இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகள் உபயோகமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாமந்தி இதழ்கள் :

சாமந்தி இதழ்கள் :

சாமந்தி சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும். சாமந்தி இதழ்களை அரைத்து முகத்தில் தடவுங்கள்.

காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தவறாமல் வாரம் இருமுறையாவது இப்படி செய்தால் சருமம் ஈரப்பதம் பெறும்.

தொடர்ந்து செய்தால் கன்னங்கள் ஒட்டிய கன்னங்கள் பூசிய கன்னங்களாக ஜொலிக்கும்.

கடுகு எண்ணெய் :

கடுகு எண்ணெய் :

கடுகு எண்ணெய் உடலிற்கு சூட்டை அளிக்கிறது. குளிர்காலத்தில் கடுகு எண்ணெய் உபயோகிப்பது நல்லது.

பார்லி பொடி 1 ஸ்பூன் எடுத்து அதனுடல் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

சோம்பு மற்றும் தனியா :

சோம்பு மற்றும் தனியா :

சோம்பு , தனியா விதை மற்றும் சீரகம் தலா ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் போட்டு 15 நிமிடம் கொதிக்கவையுங்கள். அதன் பின் ஆற வைத்து வடிகட்டி அந்த நீரினால் முகத்தை கழுவினால் நல்ல பலன்கள் தரும்.

பப்பாளி :

பப்பாளி :

பப்பாளி சரும வறட்சியை தடுக்கிறது. பழுத்த பப்பாளியை முகத்தில் பூசி 5 நிமிடங்களில் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

 கற்றாழை :

கற்றாழை :

இதுதான் உங்கள் கூந்தல் மற்றும் சருமத்திற்கான மிகச் சிறந்த பொருள். அனைத்துவித சரும பாதிப்புகளையும் சரி செய்யும். கற்றாழை பசையை கூழ் செய்து சிறிது பால கலந்து முகத்தில் போடுங்கள். காய்ந்ததும் கழுவவும். நல்ல பலனை தரும்.

 வாழைப்பழம் :

வாழைப்பழம் :

வாழைப்பழம் 2 ஸ்பூன் அளவு மசித்து அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் வறட்சி தடுக்கப்படும்.

ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம் :

ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம் :

சந்தனத்தை ரோஸ் வாட்டரில் கலந்து குழைத்து அதனை முகத்தில் போடுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். சந்தனம் வறட்சிக்கு எதிராக போராடும். சரும ஈரத்தன்மையை தக்க வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to get rid of dryness of the skin

Home remedies to protect your skin from extreme dryness during winter season.
Story first published: Monday, November 14, 2016, 10:46 [IST]
Subscribe Newsletter