சொரசொரவென கருப்பான முட்டியை மாற்றும் ஒரு எளிய வழி!! வாரம் ஒருமுறை செஞ்சு பாருங்க!!

Written By:
Subscribe to Boldsky

நமது உடலில் மற்ற பாகங்களை விட ஏன் முட்டி கருப்பாக இருக்கிறது என தெரியுமா? அங்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால் எளிதில் அழுக்குகள் உள்ளிழுக்கப்படுகின்றன. தானாக இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதில்லை.

அதனால்தான் முட்டியில் இறந்த செல்கள் அழுக்குகள் தேங்கி சொரசொரப்பாகவும் கருப்பாகவும் மாற்றுகின்றன.

How to get rid of dark knee using home remedies

அவ்வாறான கருப்படைந்த முட்டிகளை சாதரண நிறத்திற்கு கொண்டுவருவது எளிதல்ல. ஆனால் வாரம் ஒருமுறை இங்கு சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயனபடுத்திப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானவை :

தேவையானவை :

சமையல் சோடா - 1 ஸ்பூன்

தேன் - 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு - அரை மூடி

ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்.

செய்முறை :

செய்முறை :

முதலில் சமையல் சோடாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இது முட்டியிலுள்ள சொரசொரப்பை போக்க உதவும்.

செய்முறை :

செய்முறை :

சமையல் சோடவும் தேனை கலந்து நன்றாக கலக்குங்கள். இது முட்டிக்கு ஊட்டம் அளிக்கும். மிருதுத்தன்மை தரும்.

செய்முறை :

செய்முறை :

அவற்றுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து நன்றாக பேஸ்ட் போல் ஆனவுடன் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கலக்குங்கள்.

செய்முறை :

செய்முறை :

பின்னர் முட்டியில் இந்த கலவையை தேய்த்து அரை மணி நேரம் ஊற விடவும். அதன் பின் கழுவுங்கள்.

செய்முறை :

செய்முறை :

இதன் பின்னர் கற்றாழையின் ஜெல்லை முட்டியில் தடவி காயவிடவும். இவ்வாறு செய்தால் முட்டியின் நிறம் விரைவில் மாறி பளிச்சிடும். வாரம் ஒருமுறை ஒரு விடுமுறை நாளில் செய்து பாருங்கள். பலன் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to get rid of dark knee using home remedies

Here is the recipe to whiten your dark knees
Story first published: Tuesday, December 13, 2016, 12:30 [IST]
Subscribe Newsletter