ஆண்களே! ஷேவிங் செய்த பின் ரொம்ப எரியுதா? அப்ப இத ட்ரை பண்ணிப் பாருங்க...

Posted By:
Subscribe to Boldsky

ஷேவிங் செய்த பின் சருமம் எரிச்சலுடனும், மென்மையின்றியும் உள்ளதா? அப்படியெனில் ஆப்டர்ஷேவ் லோஷனைப் பயன்படுத்துங்கள். கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த ஆப்டர்ஷேவ் லோஷன் உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தினால், வீட்டிலேயே ஆப்டர் ஷேவ் லோஷனை தயார் செய்து பயன்படுத்துங்கள்.

Homemade Minty Aftershave For Men Who Like To Keep It Smooth!

வீட்டில் தயாரிக்கப்படும் ஆப்டர்ஷேவ் லோஷனில் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் ஏதும் இருக்காது. மேலும் அனைத்துவிதமான சருமத்தினருக்கும் பொருந்தும். சரி, இப்போது வீட்டிலேயே ஆப்டர்ஷேவ் லோஷனை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெப் #1

ஸ்டெப் #1

1/2 கப் வோட்காவை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆல்கஹாலில் 70-80% எத்தனால் உள்ளது. இது நல்ல தூய்மைப்படுத்தியாக செயல்படும்.

ஸ்டெப் #2

ஸ்டெப் #2

அத்துடன் 1/4 கப் விட்ச் ஹாசில் எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். இதில் டானின்கள் உள்ளது. இது ஷேவிங்கால் சரும்ம் சிவப்பாவதைத் தடுக்கும்.

ஸ்டெப் #3

ஸ்டெப் #3

பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின் சேர்க்க வேண்டும். கிளிசரின், சருமத்தை ஆழமாக ஈரப்பதமூட்டும்.

ஸ்டெப் #4

ஸ்டெப் #4

பிறகு 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். கற்றாழையில் குளிர்ச்சித்தன்மை இருப்பதால், சருமத்தில் உள்ள காயங்களை சரிசெய்யும்.

ஸ்டெப் #5

ஸ்டெப் #5

பின் அத்துடன் 2-5 துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

ஸ்டெப் #6

ஸ்டெப் #6

இறுதியில் ஒரு பாட்டிலில் அக்கலவையை ஊற்றி, நன்கு குலுக்க வேண்டும். பின் அதனை குளிர்ச்சியான மற்றும் உலர்ந்த இடத்தில் வைத்து பராமரிக்கவும்.

ஸ்டெப் #7

ஸ்டெப் #7

எப்போதும் போன்று ஷேவிங் செய்த பின், தயாரித்து வைத்துள்ள கலவையை சில துளிகள் கையில் விட்டு, ஷேவிங் செய்த இடத்தில் தடவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Homemade Minty Aftershave For Men Who Like To Keep It Smooth!

Homemade aftershave recipe to soothe, tone and calm your skin. Here is a step-by-step guide on making minty aftershave.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter