For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கை, கால் முட்டி கருப்பா இருக்கிறதா? இத ட்ரை பண்ணுங்க

|

சிலர் நல்ல நிறமாக இருந்தாலும், கால் கை முட்டிகள் கருப்பாக இருக்கும். நாம் ஒரே நிறத்தில் இருந்தால் இது தெரிவிக்காது.

ஆனால் கால் ஒரு நிறம், முட்டி ஒரு நிறமாக இருந்தால், பார்ப்பதற்கு நன்றாகவே இருக்காது. தவழும் பருவத்தில் அதிக அழுத்தம் கொடுப்பதால், சருமம் பாதிப்படைந்து அங்கே கருமை நிறம் ஏற்படுகின்றன.

Home remedy for dark knees and elbow

இறந்த செல்கள் அங்கே அதிகமாக தேங்கி கடினத்தன்மையையும் கருமையையும் ஒருசேர கொடுத்து அழகை கெடுக்கும் வகையில் அமையும்.

இதனை அகற்றுவது சற்று கடினம்தான். ஆனால் தவறாமல் அதனை போக்கும்விதத்தில் சிகிச்சை அளித்தால், ஒரு நாள் உங்கள் மூட்டு மென்மையாகி, கருமை அகன்று பார்க்க அழகாக இருக்கும்.

எப்படி கை கால் முட்டிகளில் இருக்கும் கருமையை போக்குவது எனபார்க்கலாம். கிளென்ஸர் மற்றும் டோனர் என இருவகையாக தயாரிக்கபோகிறோம்.

தேவையானவை :

கிளென்சர் :
வெங்காய சாறு -1 டீஸ்பூன்
பூண்டு சாறு - 1 டீஸ்பூன்

டோனர் :
ரோஸ்வாட்டர் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
கிளசரின் - அரை டீஸ்பூன்

முதலில் கிளென்சராக பயன்படுத்தப்போகும் வெங்காய சாறையும், பூண்டு சாறையும் கலந்து அதனை கை மற்றும் கால்களிலுள்ள கருமையான பகுதிகளில் போடுங்கள். 15 நிமிடங்கள் கழுவுங்கள். இவை அடர் கருமையையும் இறந்த செல்களையும் நீக்கும்.

பிறகு டோனர் உபயோகப்படுத்த வேண்டும். ரோஸ் வாட்டரில் எலுமிச்சை சாறு மற்றும் கிளசரின் ஆகியவற்றை கலந்து மூட்டுகளில் தடவுங்கள். இவை மூட்டுகளில் போஷாக்கும் மென்மையும் தரும்.
வாரம் மூன்று முறை இப்படி செய்யுங்கள். ஒரே மாதத்தில் நீங்கள் மாற்றத்தை காண்பீர்கள்.

English summary

Home remedy for dark knees and elbow

Home remedy for dark knees and elbow
Story first published: Saturday, August 6, 2016, 12:16 [IST]
Desktop Bottom Promotion