For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் இருக்கும் தழும்புகளை நீக்குவதற்கான சில எளிய வழிகள்!

By Maha
|

சிலருக்கு முகத்தில் பருக்கள் அதிகம் வந்து கருமையான தழும்புகள் அதிகம் இருக்கும். அப்படி வரும் தழும்புகள் அவ்வளவு எளிதில் மறையாது. அதிலும் நீங்கள் பருக்களை கையால் கிள்ளிவிட்டு ஏற்படும் தழும்புகள் மறைய பல நாட்கள் ஆகும். இப்படி அழகைக் கெடுக்கும் தழும்புகளை நீக்க வழியே இல்லையா என்று பலரும் விடை தெரியாமல் ஏங்குவதுண்டு.

பருக்கள் வராமல் இருக்க ஆயுர்வேதம் சொல்லும் முக்கிய குறிப்புகள்!!!

அத்தகையவர்களுக்கு இந்த கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் இங்கு மிகவும் எளிய வழியில் முகத்தில் இருக்கும் தழும்புகளை நீக்குவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் முகம் பளிச்சென்று பொலிவோடு அழகாக மாறும்.

முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சந்தனம்

சந்தனம்

முகத்தில் உள்ள தழும்புகளை நீக்குவதில் சந்தனம் மிகவும் சிறப்பான பொருள். அதற்கு சந்தனப் பொடி அல்லது சந்தனத்தை பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள தழும்புகள் மட்டுமின்றி, வெயிலால் ஏற்பட்ட கருமையும் அகலும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

உங்கள் முகத்தில் தழும்புகள் அதிகம் இருப்பின், 15 நாட்கள் தினமும் 2-3 முறை சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடித்து வாருங்கள். இதன் மூலமும் முகத்தில் உள்ள தழும்புகள் மறையும்.

பாதாம்

பாதாம்

தினமும் 3-4 பாதாமை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தோலுரித்து பேஸ்ட் செய்து ரோஸ் வாட்டர் சிறிது சேர்த்து, முகத்தில் தடவ, தழும்புகள் மற்றும் முகத்தில் உள்ள கருமையும் நீங்கும்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, அதில் உள்ள புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் புதிய சரும செல்களை மறுஉற்பத்தி செய்து, தழும்புகளை மறையச் செய்யும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கும் முகத்தில் உள்ள தழும்புகளைப் போக்கும். ஏனெனில் அதில் பொட்டாசியம், சல்பர் போன்ற கனிமச்சத்துக்கள் உள்ளதால், உருளைக்கிழங்கின் சாற்றனை முகத்தில் தினமும் தடவி வர தழும்புகள் விரைவில் மறையும்.

தக்காளி

தக்காளி

தக்காளியில் சருமத்தை புத்துணர்ச்சியூட்டும் வைட்டமின் ஏ மற்றும் லைகோபைன் அதிகம் உள்ளது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் ஏ பாதிக்கப்பட்ட சரும செல்களை விரைவில் குணமடையச் செய்வதோடு, புதிய சரும செல்களின் வளர்ச்சிக்கும் உதவும். எனவே தக்காளியின் சாற்றினை தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவுங்கள்.

கற்றாழை மற்றும் மஞ்சள்

கற்றாழை மற்றும் மஞ்சள்

கற்றாழை ஜெல்லுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, முகத்தில் இருக்கும் தழும்புகள் நீங்குவதோடு, முகம் பிரகாசமாக காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Remove Scars On Face

There are many home remedies to remove blemishes and scars from face. Some of these home remedies are as follows...
Desktop Bottom Promotion