பாத வெடிப்பை எப்படி மாயமாக்குவது? இத ட்ரை பண்ணுங்க

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

பாதங்களில் வெடிப்பு என்பது நிறைய பெண்களின் பிரச்சனை. என்னதான் மருந்துகள் வாங்கி போட்டாலும், நிறுத்தியவுடன் மீண்டும் வந்துவிடும்.

பார்லருக்கு எத்தனை முறைதான் சென்று காசை விரயம் செய்வது இதெல்லாம் உங்களின் மனதில் ஏற்படும் புலம்பல்கள்தானே?

பாத வெடிப்பினை அப்படியே விட்டுவிட்டால், ஆழமாக வெடித்து, கரடுமுரடாக மாறிவிடும். அது உங்கள் கால் அழகையே முற்றிலும் கெடுத்துவிடும். அழகான செருப்புகள் போட கூச்சமாக இருக்கும்.

உடலின் மொத்த பாரத்தை தாங்குவது பாதங்கள்தான். அதனை தாங்க முடியாமல், பாதத்தின் அடியில் உள்ள கொழுப்புத் திட்டுகள் உடைந்து விரிகின்றன. சருமத்தை பிளவுப்படுத்துகின்றன. இதைத்தான் பாத வெடிப்பு என்று சொல்கிறோம்.

Home remedies for cracked heels

வெடிப்பு வராமல் எப்படி காக்கலாம்?

பாத வெடிப்பு வராமல் இருக்க எப்போது குதிகால் மூடிய செருப்பினை பயன்படுத்தினால், வெடிப்புகள் மறைவதை காண்பீர்கள். காரணம் குதிகால் மூடிவதால் கொழுப்புத் திட்டுக்கள் உடையாமல் இருக்கும். வீட்டினுள் இருக்கும்போது சாக்ஸ் பயன்படுத்துங்கள்.

Home remedies for cracked heels

அது தவிர நீங்கள் பாதத்தை வாரம் தவறாமல் கவனித்தால் வெடிப்புகள் வராது. அவ்வப்போது, ஸ்க்ரப், எண்ணெய் போன்றவற்றை உபயோகிக்கும்போது, கால்கள் மிருதுத்தன்மை பெற்று மென்மையாகின்றன.

Home remedies for cracked heels

வெடிப்புகள் வராமலும் தடுக்கின்றன். அவற்றை நீங்கள் வெளியில் வாங்க தேவையில்லை. அவ்வாறான பாத அழகை பராமரிக்கும் ஸ்க்ரப்பினை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

கருமையைப் போக்கும் எலுமிச்சை மற்றும் சர்க்கரை :

மிகக் குறைவான நேரமே இதற்கு தேவைப்படும். எலுமிச்சை சாறில் சிறிது சர்க்கரை சேர்த்து, பாதம் முழுவதும் தேயுங்கள். குறிப்பாக குதிகால்களில் அழுந்த தேயுங்கள். இதனால் பாதம் நிறம்பெற்று அழுக்குகள் நீங்கி மென்மையாக இருக்கும். குதிகால்களில் தங்கப்படும் இறந்த செல்கள் நீங்கிவிடும்.

Home remedies for cracked heels

உங்கள் பாதத்திற்கான சிறந்த எண்ணெய் :

தேவையானவை :

விளக்கெண்ணெய் - 2 டீ ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் - 2 டீ ஸ்பூன்

பாதாம் எண்ணெய் - 2 டீ ஸ்பூன்

இந்த மூன்றையும் கலந்து, இவற்றுடன் சிறிது வாசலினை சேர்த்து, நன்றாக கலக்கி, கால்களுக்கு தேயுங்கள். நன்றாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் நனைத்து 15 நிமிடம் வைக்கவும்.

Home remedies for cracked heels

பின்னர் ஸ்க்ரப் செய்யுங்கள். வாரம் ஒருமுறை செய்தால் உங்கள் பாதம் மிருதுவாக பட்டுப்போன்று இருக்கும். வெடிப்புகள் வராது. அல்லது இந்த எண்ணெயை தினமும் தூங்குவதற்கு முன் உபயோகப்படுத்தலாம். எண்ணெய் தடவியபின் சாக்ஸ் அணிந்து கொண்டால், சரும பாதிப்பு விரைவில் குணமாகிவிடும்.

பாதங்களுக்கான சிறந்த ஸ்க்ரப் :

தேவையானவை :

ஓட்ஸ் - 1 கப்

பாதாம் எண்ணெய் - 100 மி.லி.

கடல் உப்பு - 2 ஸ்பூன்

தேன் - 2 ஸ்பூன்

அரிசி மாவு - 2 ஸ்பூன்

புதினா எண்ணெய் - 10 துளிகள்

Home remedies for cracked heels

இவற்றை எல்லாம் நன்றாக கலந்து, அவற்றை ஒரு ஜாரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். வாரம் இரு முறை இதனை பாதங்களுக்கு தேய்த்து, மசாஜ் செய்யுங்கள். மெத்தென்ற பாதம் கிடைக்கும். வெடிப்புகள் மறைந்து, பளபளப்பான பாதங்கள் உண்டாகும்.

English summary

Home remedies for cracked heels

Home remedies for cracked heels
Story first published: Friday, July 8, 2016, 17:30 [IST]
Subscribe Newsletter