முகத்தில் அசிங்கமா மேடு பள்ளங்கள் உள்ளதா? அதை மறைக்க இதோ சில அற்புத வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

சிலருக்கு முகத்தில் அசிங்கமாக பள்ளங்கள் இருக்கும். இவை ஒருவரின் அழகை படு மோசமாக வெளிக்காட்டும். இப்படி ஒருவருக்கு முகத்தில் உள்ள சருமத்துளைகள் விரிவடைந்து மேடு பள்ளங்கள் வருவதற்கு வயது, ஹார்மோன் சமநிலையின்மை, அதிகப்படியான மேக்கப், தரமற்ற பொருட்களை சருமத்தில் பயன்படுத்துவது போன்றவை தான்.

இப்படி முகத்தில் இருக்கும் மேடு பள்ளங்களை சரிசெய்வதற்கு எந்த ஒரு சரும பராமரிப்பு பொருட்களும் உதவாது. ஆனால் நம் சமையலறையில் உள்ள குறிப்பிட்ட பொருட்கள் நம் சருமத் துளைகளை சுருங்கச் செய்து, மேடு பள்ளங்களை மறைக்கும்.

சரி, இப்போது முகத்தில் இருக்கும் மேடு பள்ளங்களை சரிசெய்ய உதவும் அந்த பொருட்கள் என்னவென்றும், அவற்றை எப்படி பயன்படுத்துவது என்றும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை 20-30 நொடிகள் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் சருமம் இறுக்கமடைந்து, திறந்துள்ள சருமத்துளைகள் மூடப்படும்.

தக்காளி ஸ்கரப்

தக்காளி ஸ்கரப்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்துளைகள் சுருங்கச் செய்வதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும்.

செய்முறை #1

செய்முறை #1

முதலில் தக்காளியை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை சர்க்கரையில் தொட்டுக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

பின்பு அந்த தக்காளி துண்டை சருமத்தில் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் திறந்துள்ள சருமத்துளைகள் மூடப்படுவதோடு, இறந்த செல்களும் முழுமையாக வெளியேற்றப்படும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா சருமத்தில் இருக்கும் பிம்பிளை சுருங்கச் செய்வதோடு, விரிவடைந்த சருமத்துளைகளின் அளவு குறையும்.

செய்முறை #1

செய்முறை #1

பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

பின்பு அந்த பேக்கிங் சோடா கலவையை சருமத்தில் தடவி 30 நொடிகள் மென்மையாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்களுக்கு மிகவும் சென்சிடிவ் சருமம் என்றால் இந்த முறையை தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Herbal Remedies To Treat Skin Pores

Listed in this article are herbal remedies to treat open skin pores. Take a look.
Story first published: Saturday, October 8, 2016, 11:32 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter