முகத்தில் எண்ணெய் வழிகிறதா? இந்த ஸ்கரப் ட்ரை பண்ணுங்க... நல்ல மாற்றம் தெரியும்!

Posted By:
Subscribe to Boldsky

சிலருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியும். இப்படி முகத்தில் எண்ணெய் அதிகம் வழிபவர்களுக்கு, முகப்பரு அதிகம் வரும். எனவே எண்ணெய் பசை சருமத்தினர், தங்களது சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசையின் அளவைக் கட்டுப்படுத்தும், செயல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

சருமத்தில் எண்ணெய் பசையின் அளவைக் கட்டுப்படுத்த கிளின்சிங், ஸ்கரப்பிங் போன்ற செயல்கள் உதவியாக இருக்கும். இப்படி செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் போன்றவை முழுமையாக நீக்கப்படுவதோடு, பருக்கள் வருவது தடுக்கப்படும்.

இப்போது நாம் சருமத்துளைகளை சுத்தம் செய்து, எண்ணெய் பசையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஒரு ஸ்கரப் பற்றி தான். இது முழுமையாக இயற்கையான பொருட்களைக் கொண்டு செய்வதால், எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

நாட்டுச் சர்க்கரை - 3-4 டேபிள் ஸ்பூன்

ஓட்ஸ் பவுடர் - 3-4 டேபிள் ஸ்பூன்

ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2-3 டீஸ்பூன்

செய்யும் முறை:

செய்யும் முறை:

* முதலில் ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு, ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்னர் அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.

செய்யும் முறை:

செய்யும் முறை:

* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவவும்.

* இறுதியில் மறக்காமல் மைல்டு மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.

எத்தனை முறை செய்ய வேண்டும்?

எத்தனை முறை செய்ய வேண்டும்?

இந்த ஸ்கரப்பை வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களின் தேக்கத்தைக் குறைத்து, பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.

இதர நன்மைகள்

இதர நன்மைகள்

இந்த ஸ்கரப் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி, முகப்பரு வருவதைத் தடுப்பதோடு மட்டுமின்றி, இந்த ஸ்கரப் சருமத்தின் பொலிவை மேம்படுத்தி, பிரகாசமாகவும், புத்துணர்ச்சியையும் வழங்கும். முக்கியமாக இந்த ஸ்கரப் கரும்புள்ளிகளையும் போக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Have You Heard Of This Amazing Homemade Scrub For Oily Skin?

Take a look at the recipe of this amazing homemade scrub for oily skin that can prevent acne, breakouts and blemishes.
Story first published: Wednesday, June 29, 2016, 17:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter