முகத்தில் உண்டாகும் பருத் தழும்புகளுக்கு இலவங்கப்பட்டை ஃபேஸ் மாஸ்க்.

By: Srinivasan P M
Subscribe to Boldsky

மாதவிடாய் நெருங்கும்போது உங்களுக்கு சீழ் நிறைந்த பருக்கள் தோன்றக்கூடும். சில நேரங்களில் இது மிகவும் வெளிப்படையாகத் தெரியும். அதற்குதான் இந்த பட்டை மாஸ்க்

இலவங்கப்பட்டை மாஸ்கா? அது எப்படி வேலை செய்யும்? இது சருமத் துவாரங்களை சுத்தப்படுத்தி மாசுக்களை நீக்கி, இறந்த சருமச் செல்களைப் போக்கி சருமத்தில் புதிய திசுக்கள் உருவாக்கம் பெறுவதை ஊக்குவிக்கிறது. இதனால் இந்த தழும்புகள் மெல்ல மறையும்.

cinnamon face mask recipe for scars

இங்கே தரப்பட்டுள்ள மூலிகை இலவங்கப்பட்டை ஃபேஸ் மாஸ்கில் உள்ள பொருட்களில் இலவங்கப்பட்டை பவுடர், ஜாதிக்காய், தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவை அடங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செய்யும் முறை

செய்யும் முறை

ஒரு சிறு இலவங்கப்பட்டையை எடுத்து நன்றாக மென்மையான பவுடராக அரைத்துக் கொள்ளவும் உங்களுக்கு வெறும் அரை டீஸ்பூன் பவுடர் போதும். இதை ஒரு சிறிய பௌலில் போட்டு வைத்துக் கொள்ளவும்

செய்யும் முறை:

செய்யும் முறை:

அரை டீஸ்பூன் ஜாதிக்காய் பவுடரை அதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இவையெல்லாம் பயன்படுத்தும் முன் இது உங்கள் சருமத்திற்கு ஒத்துக் கொள்கிறதா அல்லது ஏதாவது பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

செய்யும் முறை:

செய்யும் முறை:

இயற்கையான தேன் ஒரு ஸ்பூன் எடுத்து கிண்ணத்தில் ஏற்கனவே உள்ள பொருட்களுடன் சேர்த்து ஒரு முட்கரண்டி மூலம் கெட்டியான பசையாக வரும்வரை கட்டிகளின்றி நன்கு கலக்கிக் கொள்ளவும்.

தேனில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்தில் உள்ள மாசுக்களை பிரித்து எடுத்து நச்சுக்களை நீக்கும்.

செய்யும் முறை:

செய்யும் முறை:

3 அல்லது 5 துளி எலுமிச்சை சாற்றை இந்த கலவையில் இட்டு மீண்டும் நன்கு கிளறவும். இப்போது சற்று மென்மையான கூழான கலவை உங்களுக்குக் கிடைக்கும். இது சற்று வறண்டு இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் சிறிதளவு பால் கூட இந்த மூலிகை மாஸ்கில் சேர்க்கலாம்.

செய்யும் முறை:

செய்யும் முறை:

தண்ணீரில் நன்கு சருமத்தை கழுவி அழுக்கு மற்றும் மாசுக்களை நீக்குங்கள். ஏதாவது மேக்கப் போட்டிருந்தால் கொஞ்சம் மென்மையான க்லென்சர் கொண்டு முகத்தை சுத்தம் செய்யவும்.

மீண்டும் ஒருமுறை குளிர்ந்த நீரில் கழுவி முகத்தை காயவைக்கவும். முகம் முற்றிலும் வறண்டு விடாமல் சற்று ஈரத்துடன் இருக்குமாறு வைத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் மாஸ்க் சரி சமமாக பரவ உதவும்.

செய்யும் முறை:

செய்யும் முறை:

இந்த மாஸ்க் ஒரு 20 முதல் 30 நிமிடங்கள் வரை இருக்குமாறு விட்டுவிடவும். இது சற்று வெம்மையான அல்லது எரிச்சல் தரக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அதிகம் அரிப்பு மற்றும் எரிச்சல் இருந்தால் உடனே இதை கழுவி ஐஸ் கட்டி கொண்டு தடவிவிடுங்கள்.

செய்யும் முறை:

செய்யும் முறை:

இந்த மாஸ்க் காய்ந்த பிறகு, முகத்தில் கொஞ்சம் தண்ணீர் ஸ்ப்ரே செய்யவும். மாஸ்க் நனைந்து தளர்வாகும்போது உங்கள் கைகளால் முகத்தை மென்மையாக சுழற்ச்சியாகத் தேய்த்துக் கொடுங்கள். இதை ஒரிரு நிமிடங்கள் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி சருமத்துளைகளை மூடச் செய்யவும்.

செய்யும் முறை:

செய்யும் முறை:

சருமத்தை காயவைத்து ஒரு பஞ்சுருண்டையில் ரோஸ்வாட்டர் விட்டு அதை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் மென்மையாகத் தேய்க்கவும்.

இந்த ரோஸ்வாட்டர் உங்கள் சருமத்தின் உள் ஆழ்ந்து இழுத்துக் கொள்ளுமாறு விடவும். இந்த ரோஸ்வாட்டர் சருமத்தை பொலிவாக்கி, ஊட்டமளித்து சருமத்திற்கு ஆறுதல் அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

cinnamon face mask recipe for scars

cinnamon face mask recipe for scars
Story first published: Sunday, December 18, 2016, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter