முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போட வேண்டுமா? இத தினமும் செய்யுங்க...

Posted By:
Subscribe to Boldsky

முதுமை என்பது இயற்கை செயல்முறையாக இருக்கலாம். அதனை முறையான சரும பராமரிப்பினால் தடுக்க முடியும். மேலும் நமது பழக்கவழக்கங்களும் சருமத்திற்கு அழுத்தத்தை அதிகம் அழுத்தி, சுருங்க வழிவகுக்கும். அதுமட்டுமின்றி மன அழுத்தம், மாசுக்கள், சூரியக்கதிர்களின் நேரடித் தாக்கம் போன்றவற்றாலும் சருமம் வேகமாக முதுமைத் தோற்றத்தைப் பெறும்.

இப்படி சருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் பராமரித்து வந்தால் போதும். சரி, இப்போது முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போட உதவும் பொருட்கள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்து, வறட்சியானது சருமம் சுருங்குவதை தடுக்கலாம்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள் சரும செல்கள் உறிஞ்சி, முதுமை தோற்றத்தைப் பெறுவது தள்ளிப் போடப்படும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் சருமம் விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறுவதைத் தடுக்கும். அதற்கு விளக்கெண்ணெயைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்யுங்கள்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் உள்ள வைட்டமின் ஈ சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. எனவே தினமும் இரவில் படுக்கும் போது ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் கழுவுங்கள். இதனால் முதுமை தள்ளிப் போடப்படும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயிலும் வைட்டமின் ஈ உள்ளது. இந்த எண்ணெயைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலும், சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லியை தினமும் கை, கால்களுக்கு தடவி வந்தால், சருமம் வறட்சியடைந்து முதுமையுடன் காணப்படுவது தடுக்கப்படும். மேலும் பெட்ரோலியம் ஜெல்லி சருமத்தை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயின் வாசனை நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதனை சருமத்தில் தடவி வந்தால், சூரியக்கதிர்களால் சரும செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். எனவே தினமும் தவறாமல் கடுகு எண்ணெயைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Natural Ingredients To Delay Ageing

Here are the best natural ways to delay ageing. Read on to know more...
Story first published: Wednesday, September 28, 2016, 16:50 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter