தேங்காய் பால் ரெசிப்பிகள் எப்படி உங்கள் அழகை அதிகரிக்கச் செய்யும் என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தேங்காய் பால் மிக சத்து நிறைந்தது. சுவையும் அலாதியானது. அது அழகிற்கும் அற்புதமான நன்மைகளை தரும் என்பது தெரியுமா?

தேங்காய் பால் ஸ்கால்ப்பிற்கு ஊட்டம் அளிக்கும். அரிப்பை போக்கும். நல்ல கூந்தல் வளர்ச்சியை தூண்டும். அதுபோலவே சருமத்திலுள்ள பாதிப்புகளை சரிப்படுத்தும்.

Beauty benefits of coconut milk

வறட்சியை போக்கும், அழகு சருமத்தை தரும். அப்படியான தேங்காய் பாலைக் கொண்டு எப்படி அழகை மேம்படுத்தலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூந்தல் வளர்ச்சிக்கு :

கூந்தல் வளர்ச்சிக்கு :

தேங்காய் பாலி சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து தலையில் தடவுங்கள். 15- 20 நிமிடம் கழித்து தலைக்கு மைல்ட் ஷாம்பு போட்டு குளியுங்கள். இது கூந்தல் கற்றைகளுக்கு பலமளிக்கிறது.

கண்டிஷனர் :

கண்டிஷனர் :

தலைக்கு குளித்தபின் கண்டிஷனர் போல் தேங்காய் பாலிலால் கூந்தலை அலசி 5 நிமிடம் கழித்து தலைக்கு குளித்தால் அதிகப்படியான எண்ணெய் அல்லது வறட்சியை தடுத்து கூந்தலை போஷாக்குடன் வைத்துக் கொள்ள உதவும்.

மேக்கப் ரிமூவர் :

மேக்கப் ரிமூவர் :

மேக்கப்பை எடுக்க தேங்காய் பாலை உபயோகிக்கலாம். தேங்காய் பாலில் சிறிது எண்ணெய் கலந்து ஒரு பஞ்சினால் முகத்தை துடைத்தால் அழகு சாதனங்களில் இருக்கும் ரசாயனம் , நச்சு, அழுக்கு ஆகியவை அடியோடு வந்து விடும்.

முகப்பருக்களை தடுக்கும் :

முகப்பருக்களை தடுக்கும் :

தேங்காய் பால் கிளென்ஸராக செயல்படுகிறது. அதனைக் கொண்டு முகத்தை கழுவினால் சரும துவாரங்களில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி சருமம் சுவாசிக்கும்.

 ஃபேஸியல் ஸ்க்ரப் :

ஃபேஸியல் ஸ்க்ரப் :

தேங்காய் பாலில் 2 ஸ்பூன் ஓட்ஸை ஊற வைத்து அதனை முகத்தில் தேய்த்து கழுவினால் அழுக்குகள் , இறந்த செல்கள் வெளியேறி சருமம் பளிச்சிடும். இளமையான சருமம் கிடைக்கும்.

 சரும அலர்ஜி :

சரும அலர்ஜி :

வெயிலினால் உண்டாகும் சன் பர்ன் எனப்படும் அலர்ஜிக்கு சிறந்த மருந்தாக இது பயன்படுகிறது. சருமத்தில் தேங்காய் பாலை தடவினால் சிவந்து போவது தடுக்கப்பட்டு எரிச்சல் குணமாகும்.

சரும ஈரப்பதத்தை தரும் :

சரும ஈரப்பதத்தை தரும் :

1 கப் தேங்காய் பாலில் அரை கப் ரோஸ் வாட்டர் கலந்து சருமத்தில் தடவி காய்ந்த பின் குளித்தால் சருமம் மின்னும். அதோடு மிருதுவாகி மென்மையை தரும்.

 சரும வியாதிகளுக்கு :

சரும வியாதிகளுக்கு :

சருமத்தில் உண்டாகும் எக்சீமா, டெர்மடைடிஸ் போன்ற வியாதிகளுக்கு மருந்தாக தேங்காய் பால் பயன்படும். எரிச்சலைந்த சருமத்தை சாந்தப்படுத்தி, பேக்டீரியாக்களை அழிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Beauty benefits of coconut milk

8 Beauty hacks using coconut milk for both skin and hair care
Please Wait while comments are loading...
Subscribe Newsletter