கற்றாழையுடன் எதை சேர்த்தால் அட்டகாசமான சருமப் பொலிவை தரும்?

Written By:
Subscribe to Boldsky

சோற்றுக் கற்றாழை சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது. சுருக்கம், முகப்பரு, இன்னும் பல பிரச்சனைகளை போக்கிவிடும்.

ஆனால் கற்றாழையை அப்படியே நேரடியாக உபயோகிப்பது நல்லதல்ல. சரும எரிச்சல் உண்டாகும்.

Beauty benefits of Aloe vera

அதனுடன் சில பொருட்களை கலந்து உபயோகிக்கும்போது கற்றாழையின் முழுப்பலன் கிடைப்பதோடு அழகை அதிகரிக்கச் செய்யும்.

அவ்வாறு கற்றாழையுடன் எந்த பொருளை சேர்த்தால் என்ன பயன் தரும் எனப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் :

மஞ்சள் :

இந்த குறிப்பு அதிக எண்ணெய் மற்றும் முகப்பருக்கள் இருப்பவர்களுக்கு உபயோகமானது.

கற்றாழையுடன் சிறிது மஞ்சல் குழைத்து முகத்திற்கு போட்டு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் எண்ணெய் வழியாது. முகப்பருக்களின் தீவிரம் குறைந்து சருமம் பொலிவாகும்.

வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காய் :

சுருக்கம் இருப்பவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் ஏற்றதாகும். கற்றாழையுடன் சிறிது வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள்.

20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். வாரம் 3 முறை செய்தால் நுண்ணிய சுருக்கங்களும் காணாமல் போய்விடும்.

 தக்காளி :

தக்காளி :

முகம் கருமை படர்ந்து இருந்தால் அல்லது அதிக எண்ணெய் இருந்தாலும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம்.

தக்களியின் சதைப் பகுதியை மசித்து அதனுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் போடவும். இது நிறத்தை பொலிவு படுத்தும்.

அரிசி மாவு :

அரிசி மாவு :

முகம் மரும் கழுத்துப் பகுதியில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்களை அகற்ற இந்த குறிப்பு மிகவும் ஏற்றது.

அரிசி மாவு 1 ஸ்பூன் எடுத்து அதில் கற்றாழையை கலந்து முகம் கழுத்தில் மென்மையாக தேய்க்கவும். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

பால் :

பால் :

வறண்ட சருமம் இருப்பவர்கள் இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். பாலில் சிறிது கற்றாழை கலந்து முகத்தில் தடவவும்.

10 நிமிடத்திற்கு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். முகம் மென்மையாகும். மினுமினுப்பை தரும். ஈரப்பதம் அளிக்கும்.

வாழைப் பழம் :

வாழைப் பழம் :

சருமம் தொங்கி வயதான தோற்றம் இருப்பவர்கள் இந்த குறிப்பை செய்து பாருங்கள்.

வாழைப்பழத்தை மசித்து அதனுடன் கற்றாழையின் சதைப் பகுதியை கலந்து முகத்தில் போடவும் 20 நிமிடம் கழித்து கழுவவும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் சருமம் இறுகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Beauty benefits of Aloe vera

Ingredient that you can mix with aloe vera to get amazing skin tone
Subscribe Newsletter