Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும்
ஜொலிக்கிற சருமம் வேணும்னா சாமந்தி பூ ஃபேஸியல் பேக் ட்ரை பண்ணி பாருங்க!!
நமது இயற்கையான மூலிகை செடிகள் பல அற்புதங்கள் நமது அழகிற்கு தருகின்றன. இவை அழகை அதிகப்படுத்துவததோடு, சரும பாதிப்பிலிருந்து நம்மை காக்கின்ரன. அவ்வாறான குறிப்புகள் இங்கே காணலாம்.
சாமந்தி பூவின் இதழகளை அரைத்து பிறந்த குழந்தைக்கு பூசி குளிக்க வைக்கும் பழக்கம் இன்றக்கும் சில கிராமங்களில் வழக்கம் உள்ளது.பூவின் நிறத்திலேயே சரும நிறம் மாறும் என்பது கண்கூடான உண்மை.

அதுபோல் பல இயற்கை மூலிகைகள் நமது சருமத்திற்கு மாயாஜாலத்தை தருகிறது என்றால் அது மிகையாகாது. அவ்வாறானா பொருட்களை இங்கு காண்போம்.

சாமந்தி பூ ஃபேஸ் பேக் :
புதிதான சாமந்திப் பூ இதழ்கள் - கைப்பிடி
பால் - சிறிது
தேன் - 1 ஸ்பூன்
சாமந்தி இதழ்களை அரைத்து அதனுடன் 1 ஸ்பூன் அளவு பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

அரோமா ஃபேஸ் மாஸ்க் :
தேவையானவை :
சந்தனம் - 1 ஸ்பூன்
ரோஸ் எண்ணெய் - 2 துளி
லாவெண்டர் எண்ணெய் - 2 துளி
கடலைமாவு - 1 ஸ்பூன்
மோர் - சிறிது

அரோமா ஃபேஸ் மாஸ்க் :
மேலே சொன்னவற்றை எல்லாம் கலந்து கலக்கும் அளவிற்கு மோர் விட்டு குழைத்துக் கொள்ளுங்கள். வாரம் 3 நாட்கள் இரவு படுப்பதற்கு முன் இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் சுருக்கம், கருமை, பரு எல்லாம் மறைந்து முகம் பளபளக்கும்.

ஹெர்பல் ஸ்க்ரப் :
கோதுமை தவிடு
சந்தனம்
துளசி
கோதுமையை சலித்து அந்த தவிட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைத்த சந்தனம், துளசி சாறு கலந்து முகத்தில் தேய்த்து 10 நிமிடம் காய விட்டு கழுவினால், முகம் மின்னும்.

சந்தன பேக் :
சந்தனக் கல்லில் ரோஸ் வாட்டர் வொட்டு சந்தனத்தை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் இதனுடன் சிறிது பால் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் பொலிவு தெரியும்.



Click it and Unblock the Notifications
