பிட்டத்தில் உள்ள பருக்கள் மற்றும் கொப்புளங்களைப் போக்க சில எளிய வழிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

பிட்டத்தில் பருக்கள் மற்றும் கொப்புளங்கள் வந்தால் கடுமையான வலியை ஏற்படுத்தும். இதனால் நம்மால் சரியாக உட்காரவே முடியாமல் பெரும் தொந்தரவாக இருக்கும். குறிப்பாக உடலில் சூடு அதிகமானால் தான் கொப்புளங்கள் மற்றும் பருக்கள் உடலில் அதிகம் வரும். அதுமட்டுமின்றி அழுக்கு உடைகளை அணிவதன் மூலமும் அப்பகுதியில் தொற்றுக்கள் ஏற்பட்டு, பருக்கள் மற்றும் கொப்புளங்கள் வரும்.

அப்படி பிட்டத்தில் வரும் கொப்புளங்கள் மற்றும் பருக்களை போக்கவே முடியாதா என்று பலர் நினைப்பார்கள். நிச்சயம் உடலில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வுகள் உள்ளது. அதைத் தெரிந்து கொண்டு பின்பற்றினால், உடனே பிட்டத்தில் உள்ள பருக்கள் மற்றும் கொப்புளங்களை நீக்குவதோடு, அவற்றை வராமல் தடுக்கவும் முடியும்.

இங்கு பிட்டத்தில் உள்ள பருக்கள் மற்றும் கொப்புளங்களைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்ப்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஸ்பிரின் மாஸ்க்

அஸ்பிரின் மாஸ்க்

4 அஸ்பிரின் மாத்திரைகளை பொடி செய்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, பிட்டத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், பருக்கள் மற்றும் கொப்புளங்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, விரைவில் குணமாகும்.

எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்

எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்

1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி தினமும் அந்த கலவையைக் கொண்டு பிட்டத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம், பிட்டத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கும்.

டீ ட்ரீ ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய்

டீ ட்ரீ ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய்

டீ ட்ரீ ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக கலந்து, அதனை தினமும் இரவில் படுக்கும் முன் பிட்டத்தில் தடவி வந்தால், பிட்டத்தில் உள்ள தொற்றுகள் அகற்றப்பட்டு, பிட்டம் மென்மையாகவும், அழகாகவும் இருக்கும்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகள்

பிட்டத்தில் பருக்கள் அல்லது கொப்புளங்கள் இருந்தால், ஐஸ் கட்டிகளைக் கொண்டு 5 நிமிடம் மசாஜ் செய்து வாருங்கள். இப்படி செய்வதன் மூலம், அவ்விடத்தல் உள்ள வலி நீங்கி, மெதுவாக குணமாகவும் ஆரம்பிக்கும்.

ஓட்ஸ் ஸ்கரப்

ஓட்ஸ் ஸ்கரப்

உங்கள் பிட்டத்தில் பரு அல்லது கொப்புளங்கள் இருந்தால், ஓட்ஸ் பொடி மற்றும் சர்க்கரையை ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு ஸ்கரப் செய்து வர, பிட்டத்தில் உள்ள இறந்த செல்கள், அழுக்குகள், நோய்த்தொற்றுகள் போன்றவை நீங்கி, பிட்டம் அழகாக இருக்கும்.

உள்ளாடையை அடிக்கடி மாற்றுங்கள்

உள்ளாடையை அடிக்கடி மாற்றுங்கள்

உடுத்தும் உள்ளாடை சுத்தமாக இல்லாவிட்டால், பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதனாலேயே பருக்கள் மற்றும் கொப்புளங்கள் வரும். அதுமட்டுமின்றி உள்ளாடையில் வியர்வை அதிகம் இருந்தால், அதன் காரணமாகவும் பருக்கள் வரும். எனவே உங்கள் பிட்டத்தில் பருக்கள், கொப்புளங்கள் வராமல் இருக்க வேண்டுமெனில், தினமும் நல்ல சோப்பு போட்டு துவைத்து உலர வைத்த சுத்தமான உள்ளாடையை அணிவதோடு, அடிக்கடி பிட்டத்தை நீரில் கழுவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies For Acne And Boils On The Buttocks

The best home remedies for acne and boils on buttocks are here. Know how to treat boils on buttocks at home. Read on to remove boils and acne on buttocks.
Story first published: Saturday, December 12, 2015, 11:43 [IST]
Subscribe Newsletter