வாரம் முழுவதும் சரியா தூங்காம கருவளையம் வந்துடுச்சா? அதைப் போக்க சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

வேலை அதிகம் உள்ளது என்று அதை முடிப்பதற்காக பலரும் அலுவலகத்தில் நீண்ட நேரம் செலவழிப்போம். சில நேரங்களில் இரவில் கூட விழிந்திருந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் சரியான தூக்கம் இல்லாமல், கண்கள் உள்ளே சென்று காணப்படுவதோடு, கருவளையங்களும் அழகை கெடுக்கும் வண்ணம் வந்திருக்கும்.

கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க 8 டிப்ஸ்...

இப்படி வாரம் முழுவதும் சரியாக தூங்காமல் வந்துள்ள கருவளையங்களை அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு மசாஜ் செய்து ஊற வைப்பதன் மூலம் போக்கலாம். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பின்பற்றினால் விரைவில் போக்குவதோடு, கண்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த பொருட்களை அப்படியே முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகமும் பொலிவோடு காணப்படும்.

கருவளையம் எதுக்கு வருகிறதென்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ அதிகம் உள்ளது. இவை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான வைட்டமின்கள். இந்த எண்ணெயைக் கொண்டு தினமும் இரவில் கண்களைச் சுற்றி மட்டுமின்றி, முகத்திற்கும் தடவி மசாஜ் செய்து வந்தால், கருவளையங்கள் நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் நேச்சுரலாக ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இதனை அரைத்தோ அல்லது சாறு எடுத்தோ கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

அழகு நிலையங்களில் ஏன் ஃபேஷியல் செய்தாலோ அல்லது ஃபேஸ் பேக் போட்டாலோ, கண்களில் வெள்ளரிக்காய் வைக்கின்றனர் என்று தெரியுமா? ஏனெனில் வெள்ளரிக்காய் கண்களைச் சுற்றியுள்ள இறந்த செல்கள் மற்றும் கருமைகளை நீக்கி, கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் என்பதால் தான். எனவே தினமும் 10 நிமிடம் கண்களின் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து வாருங்கள். இதனால் நிச்சயம் கருவளையங்களைப் போக்கலாம்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள டானிக் ஆசிட், கருவளையங்களைப் போக்கும். எனவே சில ஆப்பிள் துண்டுகளை எடுத்து அரைத்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்துமு வந்தாலே கருவளையங்களைப் போக்கலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. அத்தகைய எலுமிச்சையின் சாற்றினை, தக்காளி சாற்றுடன் கலந்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து கழுவி வந்தால், நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர் கூட கருவளையங்களைப் போக்கும். அதற்கு இரண்டு பஞ்சு துண்டுகளை எடுத்துக் கொண்டு, அவற்றை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களின் மேல் வைத்து 10 நிமிடம் உற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் மறையும்.

புதினா இலைகள்

புதினா இலைகள்

புதினாவில் குளிர்ச்சித்தன்மை மட்டுமின்றி, கருவளையங்களைப் போக்கும் குணமும் உள்ளது. எனவே சிறிது புதினா இலைகளை எடுத்து அரைத்து, அதில் சிறிது தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து, வாரம் ஒரு முறை கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

மஞ்சள் தூளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மையினால், கருவளையங்கள் விரைவில் போய்விடும். அதற்கு மஞ்சள் தூளை அன்னாசிப் பழச்சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Easy Home Remedies To Get Rid Of Dark Circles

In this article we will tell you how to reduce dark circles. Read on the article to find out how to reduce dark circles using home remedies.
Story first published: Saturday, August 22, 2015, 13:23 [IST]