கருப்பா இருந்தாலும் களையா தெரிய டெய்லி 10 நிமிடம் செலவழிச்சா போதும்...

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்குமே நாம் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும் கருப்பாக இருப்பவர்கள், வெள்ளையாக மாற அழகு நிலையங்களுக்குச் சென்று நிறைய பணம் செலவழிப்பார்கள். அழகு என்பது வெளிப்புறத் தோற்றத்தில் இல்லாவிட்டாலும், இன்றைய காலத்தில் அழகாக காணப்படாவிட்டால், யாரும் மதிக்கவேமாட்டார்கள்.

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க...

மேலும் பலர் அழகு என்பது வெள்ளையாக இருந்தால் தான் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அழகு என்பது சருமத்தில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல், சருமத்தை அழகாக மென்மையாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளது. அதற்காக தினமும் 10 நிமிடம் செலவழித்தாலே போதும், சருமமானது அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.

வெள்ளையாக மாற பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம்களால் ஏற்படும் பக்க விளைவுகள்!

அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றை தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தாலே, நல்ல அழகான சருமத்தைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிளின்சிங்

கிளின்சிங்

இயற்கையாக வெள்ளையாக வேண்டுமானால், தினமும் இரவில் படுக்கும் முன் பாலை பஞ்சில் நனைத்து, முகத்தை நன்கு துடைக்க வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் வெளியேறி, சருமத்துளைகள் இரவில் தங்குதடையின்றி சுவாசித்து, நல்ல ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தைப் பெற உதவுகிறது.

மாய்ஸ்சுரைசிங்

மாய்ஸ்சுரைசிங்

முகத்தை பால் கொண்டு நன்கு துடைத்து எடுத்த பின்னர், இரவில் முதுமையை தடுக்கும் படியான மென்மையான மாய்ஸ்சுரைசரை தடவினால், பாதிப்படைந்த சரும செல்களானது புதுப்பிக்கப்படும்.

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி

முக்கியமாக இரவில் படுக்கும் முன் கண்களுக்கு மேலேயும், கண் இமைகளிலும் பெட்ரோலியம் ஜெல்லியை தடவி மசாஜ் செய்து, தூங்கினால், காலையில் எழும் போது கண்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

லிப் பாம்

லிப் பாம்

மறக்காமல் இரவில் உதடுகளுக்கு ஈரப்பசையூட்ட மறக்காதீர்கள். அதற்கு நல்ல தரமான லிப் பாம்களை இரவில் படுக்கும் முன் உதடுகளுக்கு தடவுங்கள். இதனால் உதடுகள் மென்மையாகவும், வறட்சியடையாமலும் அழகாக இருக்கும்.

குறிப்பு

குறிப்பு

மேற்கூறிய செயல்களை அன்றாடம் செய்து வந்தால், அழகாவதற்கு அழகு நிலையம் சென்று பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியமே இருக்காது. மேலும் இந்த சிறு பராமரிப்புக்களின் மூலமே சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Get the Flawless Look by Just Spending 10 Minutes a Day

Want to get the flawless look? The just spend 10 minutes a day. And you just need to follow these tips every night, before sleeping. இங்கு நல்ல அழகான சருமத்தைப் பெற சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 
Subscribe Newsletter