For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகப்பருக்களை குணப்படுத்துவதற்கான முறையான பராமரிப்பு

By Maha
|

Skin Care Routine To Cure Acne
இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினர் பலர் முகப்பருக்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய முகப்பருக்களை சரிசெய்ய நிறைய வழிகள் உள்ளன. இருப்பினும், அந்த பருக்களை போக்க ஒருசிலவற்றை தொடர்ந்து செய்ய வேண்டியுள்ளது. அதை சரியாக செய்யவில்லையெனில், பருக்கள் முகத்தில் பரவி, பின் அவை நிறைய முகப்பருக்களை உண்டாக்கிவிடும். ஆகவே அவற்றை முறையாக போக்குவதற்கு சரியான பராமரிப்பு இருந்தால், எளிதில் போக்குவதோடு, அழகான சருமத்தை பெறலாம். இப்போது எந்த செயல்களை தினமும் செய்தால், பருக்களை போக்கலாம் என்று பார்ப்போமா!!!

* முகத்தில் பருக்கள் இருந்தால், தினமும் இரண்டு முறை கிளின்சிங் செய்ய வேண்டும். ஏனெனில் சருமத்தில் பருக்கள் இருந்து அழுக்குகள் அதிகம் படிந்தால், அவை பருக்களை இன்னும் அதிகமாக்கிவிடும். ஆகவே பருக்களை சரிசெய்ய தினமும் இரண்டு முறை கிளின்சிங் செய்ய வேண்டும். கிளின்சிங் செய்தால், அவை அழுக்குகள், அதிகமான எண்ணெய் போன்றவற்றை நீக்கிவிடும். ஆகவே கிளின்சிங் செய்ய வேண்டுமெனில், பால் அல்லது ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். ஒருவேளை பருக்கள் உடைந்துவிட்டால், அவை பரவாமல் இருக்க பென்சோயில் பெராக்சைடு இருக்கும் கிளின்சரைப் பயன்படுத்துவது நல்லது.

* பருக்களை அகற்றும் போது, வேரோடு அகற்றும் படியாக இருக்க வேண்டும். இதற்கு தினமும் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் இறந்த செல்கள், அதிகப்படியான எண்ணெய் போன்றவை நீங்கி, பருக்கள் குறைந்து, சருமம் மென்மையாகும்.

* எப்போது மேக்-கப் போட்டாலும், இரவில் படுக்கும் முன் அதனை நீக்கிவிட வேண்டும். இல்லாவிட்டால், பருக்கள் உடைந்து பரவி விடும். ஆகவே மேக்-கப்பை நீக்குவதற்கு, காட்டனில் டோனரை நனைத்து நன்கு துடைத்துவிட்டு, பின் தூங்க வேண்டும். அதிலும் டோனரில் ஆல்கஹால் ப்ரி டோனரைப் பயன்படுத்துவது நல்லது. ஆல்கஹால் இருக்கும் டோனரைப் பயன்படுத்தினால் அது சருமத்திற்கு வறட்சியை ஏற்படுத்தி, அரிப்பை உண்டாக்கும்.

* பருவநிலை மாறுபாட்டினாலும் சருமம் பாதிக்கப்படும். அதிலும் குளிர்காலம் என்றால், சருமத்தை எப்போதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவை சருமத்திற்கு பெரும் தொந்தரவை ஏற்படுத்திவிடும்.

* பருக்கள் உள்ளது என்று அதனை போக்குவதற்கு உடைக்க கூடாது. உடைத்தால், அதில் உள்ள நீர் போன்ற திரவம் முகத்தில் பரவி, அதிகமான பருக்களை உண்டாக்கிவிடும். பருக்கள் இயற்கையாக உடைந்தால், அதிலிருந்து வரும் திரவத்தை காட்டன் கொண்டு துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவிட வேண்டும்.

* எலுமிச்சை மிகச் சிறந்த பருக்களைப் போக்கும் ஒரு பொருள். எனவே எலுமிச்சையைக் கொண்டு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தேய்க்க வேண்டும். இதனால் பருக்கள், இறந்த செல்கள் போன்றவை போய்விடும். அதேசமயம் எலுமிச்சை சருமத்திற்கு பயன்படுத்தினால் வறட்சி ஏறப்டும். ஆகவே எலுமிச்சையை பயன்படுத்தியப் பின், மாய்ச்சுரைசரை மறக்காமல் தடவ வேண்டும்.

மேற்கூறியவையே பருக்களை போக்க முறையாக தினமும் செய்ய வேண்டிய செயல்கள். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

English summary

Skin Care Routine To Cure Acne | முகப்பருக்களை குணப்படுத்துவதற்கான முறையான பராமரிப்பு

If you have acne, here are the daily skin care routine tips that you should follow.
Story first published: Friday, January 4, 2013, 15:23 [IST]
Desktop Bottom Promotion