For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சருமத்திற்கு பொலிவு வேணுமா? மஞ்சள் பூசுங்க!

By Mayura Akilan
|

Sneha
உடல் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் இயற்கை அளித்த வரம் மஞ்சள். எந்த வகை சருமத்தினரும் மஞ்சளை உபயோகிக்கலாம். சருமத்திற்கு அழகூட்ட சந்தையில் விற்பனை செய்யப்படும் விலை அதிகமான ரசாயன பொருட்களை வாங்கி உபயோகிப்பதை விட விலை குறைந்த மஞ்சளை உபயோகிப்பது சரும அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்றது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

எண்ணெய் பசை சருமம்

எண்ணெய் வழியும் சருமத்தினை கொண்டவர்கள் 2 டேபிள் ஸ்பூன் சந்தனம், ஒரு ஸ்பூன் பால், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை அலச முகம் பளிச்தான்.

வறண்ட சருமம்

ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக்கொள்ளவும், அதில் இரண்டு துளி ஆலிவ் எண்ணெயை விடவும். அதில் சிறிதளவு மஞ்சள், எலுமிச்சை சாறு, பன்னீர் கலக்கவும். இந்த கலவையை முகம், கழுத்து, காது பகுதிகளில் நன்றாக பூசி உலரவிடவும். பதினைந்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும் சரும வறட்சி போகும்.

சராசரி சருமம்

ஸ்ட்ராபெரி பழத்தை நன்றாக மசித்து அதில் ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம் முகம் பொலிவுறும்.

சரும சுறுக்கம் போக

மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர் நீரில் கழுவினால் முகப்பருவில் ‌சீ‌ழ் பிடிக்காது. மஞ்சளை அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும்.

தேவையற்ற முடிகள் உதிர

முகத்தில் சருமம் சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி குளிக்கவும். இதனால் மென்மையான சருமம் கிடைக்கும்.

மஞ்ச‌ள் இலை மற்றும் குப்பைமேனி இலை இர‌ண்டையு‌ம் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும்.

கழுத்து, கணுக்கால்களில் தோல் கருப்பாக இருந்தால் மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வரவும் கருமை மறையும். மஞ்சள் கிழங்கு ஒன்றுடன் ஒரு எலுமிச்சை இலையை சேர்த்தரைத்துப் பூசினால் முகம் பளிச்செ‌ன்று மாறு‌ம்.

மஞ்சள் நீராவி

மஞ்சளை அரைத்துப் பூசத் தேவையில்லை, மஞ்சள் கலந்த நீராவி கூட அழகை கூட்டும். நன்றாக கொதிக்க வைத்த நீரில் ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து ஆவி பிடிக்கவும். சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும். பொலிவு கிடைக்கும்.

குண்டு மஞ்சள் கிழங்கு, கெட்டி‌க் கிழங்கு முக அழகை கூட்டி அதிக நிறம் கொடுக்கும். பாதங்களில் பித்த வெடிப்பு ஏற்பட்டால் குண்டு மஞ்சள் கிழங்கை அரைத்துப் பூ‌சி வ‌ந்தா‌ல் போது‌ம் வெடிப்பு குணமாகும்.

English summary

Turmeric Beauty Benefits | சருமத்திற்கு பொலிவு வேணுமா? மஞ்சள் பூசுங்க!

Turmeric is an inexpensive beauty aid for cleansing skin clean and bringing a lifelong natural glow. So before you go to buy an expensive beauty product in the market, try these turmeric beauty tips.
Story first published: Tuesday, April 3, 2012, 13:39 [IST]
Desktop Bottom Promotion