Just In
- 4 hrs ago
இந்த ராசிக்காரங்க பணத்தை நிர்வகிப்பத்தில் சுத்தமா பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்...!
- 5 hrs ago
இந்த 5 ராசிக்காரங்கள காதலிக்கிறவங்க ரொம்ப பாவம்... ஏனா இவங்க சைக்கோத்தனமா காதலிப்பாங்களாம்...!
- 6 hrs ago
மாரடைப்பு ஏற்படாம தடுத்து உங்க இதயத்தை பாதுகாக்க இந்த எண்ணெய் உதவுமாம்..!
- 7 hrs ago
ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபி
Don't Miss
- News
எல்லோரையும் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு எப்படி பேரம் பேச முடியும்... உருக்கமாக பேசிய திருமாவளவன்!
- Movies
பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது!
- Automobiles
கொளுத்தும் வெயில்! வாகனங்களை பத்திரமா பாத்துக்கோங்க... நடுரோட்டில் கால் வாராம இருக்க என்ன செய்ய வேண்டும்?
- Sports
அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்ஷர் பட்டேல்
- Finance
டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தலைமுடிக்கும் தன்னம்பிக்கைக்கும் தொடர்பு இருக்குது தெரியுமா? எப்படின்னு இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க..
ஒரு நபரின் சுய விழிப்புணர்வு மற்றும் சுயமரியாதை போன்றவை தனது சொந்த உடல் குறித்த விழிப்புணர்வில் மிக இளம் வயதிலேயே தொடங்குவதாக ஆரம்ப கால குழந்தை உளவியல் குறித்த ஆய்வுகள் கூறுகின்றன. இதுவே வளர்ந்த பின் தன்னம்பிக்கையாக மாற்றம் பெறுகிறது. தனது தோற்றத்தை வைத்து ஒரு நபர் கொள்ளும் உணர்வு தன்மைபிக்கையாக வளர்கிறது. ஒரு நபர் வளர்ந்து பெரியவராகி, சமூகத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும்போது அவர் வெளிப்படுத்தக் கூடிய தன்னம்பிக்கையில் அவருடைய உடல் தொடர்பான சுயமரியாதை ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.
ஒரு நபரின் தலைமுடி உடலுக்கு கிரீடமாக விளங்குகிறது. தலைமுடி என்பது இளமையின் அடையாளம். தலைமுடி ஆண்மையை, கவர்ச்சியை குறிக்கும் ஒரு பகுதியாக உள்ளது. மனித தோற்றத்தில் தலைமுடியின் முக்கியத்துவத்தை அறிந்து தான் இதனை தக்க வைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மரபணு காரணிகள், உணவு, சுற்றுச்சூழல், வயது, நோய் போன்ற பல்வேறு காரணிகள் தலைமுடிக்கு எதிராக செயல்பட்டு வருவதால் முடி இழப்பு என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.
தலைமுடி என்பது ஒரு ஆண்மகனின் அடையாளமாக விளங்குகிறது என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. நல்ல தலைமுடி நம்மை மகிழ்ச்சியாக உணர வைக்கிறது, ஈர்ப்பு திறனை மேம்படுத்துகிறது, இதனால் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை வளர்கிறது.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் திடீரென்று முடி இழப்பு ஏற்பட்டு திட்டுக்கள் அல்லது பேட்ச் தோன்றுவது:
திடீர் முடி இழப்பு என்பது அதிர்ச்சி தரும் ஒரு நிகழ்வாகவே உள்ளது. முடி உதிர்தல் அல்லது முடி இழப்பு போன்றவை மனிதர்களின் தன்னம்பிக்கையை உலுக்கும் ஒரு விஷயமாகும். கலாச்சாரத்தின் மீது அதீத ஈடுபாடு உள்ளவர்கள் என்பதால் முடி இழப்பு பெண்களை அதிகம் பாதிக்கிறது, ஆனால் வழுக்கை போன்ற பாதிப்புகளால் அதிகம் வேதனைப்படுவது ஆண்கள் மட்டுமே. முடி உதிர்வதை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் பதட்டம், மன உளைச்சல், மனச்சோர்வு போன்றவற்றால் இருபாலினத்தவரும் பாதிக்கப்படுகின்றனர்.

தலைமுடி ஒருவரின் ஒட்டுமொத்த தோற்றத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
ஒரு நபரின் தோற்றம் உளவியல் ரீதியாக அவருடைய தனிப்பட்ட, சமூக, வேலைசார்ந்த வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். முடி உதிர்வு, முடி இழப்பு, முடி மெலிவு போன்றவற்றில் வயதின் தொடர்பும் உள்ளது. ஆகவே இந்த பாதிப்புகள் ஒரு நபரின் சுயமரியாதையில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தி சமூக பதட்டம், பாதுகாப்பின்மை, சுயவிமர்சனம், கவர்ச்சியின்மை போன்ற உணர்வுகளால் பாதிக்கப்பட நேரும்.
தலைமுடி என்பது ஆன்மாவுடன் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளது. எந்தவொரு உளவியலாளர், அழகு சாதன நிபுணர், தோல் மருத்துவர் அல்லது ட்ரைக்காலஜிஸ்ட் ஆகியோர் முடி இழப்பு அல்லது முடி உதிர்தல் என்ற பாதிப்புடன் செல்லும் நபருக்கு அதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவார்கள். ஆகவே தலைமுடி இழப்பை சந்திக்கும் நபர்கள் நல்ல மருத்துவரை அணுகி இதற்கான உதவியை பெறுவது அவசியம்.

மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்றவற்றின் காரணமாக முடி இழப்பு உண்டாகுமா?
QR 678 வகை சிகிச்சையை எடுத்துக் கொள்ளும் முடி இழப்பு நோயாளிகளில் முதல் கட்ட சிகிச்சையிலேயே பதட்ட அளவில் குறிப்பிட்ட குறைவு ஏற்படுவதாகவும் சிகிச்சையின் தாக்கம் அதிகரிக்கும் போது அந்த நபரின் தன்னம்பிக்கை அளவு அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
முடி இழப்பிற்கான பிரச்சனைகள் ஒரு புறம் இருக்க மறுபுறம் இந்த முடி இழப்பிற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வதில் உண்டாகும் குழப்பம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதிக அளவு பணம் மற்றும் நேரம் செலவழித்தும் தகுந்த விளைவுகள் ஏற்படாமல் போகுமோ என்ற அச்சத்தில் பதட்டம் மேலும் அதிகரிக்கலாம். ஆகவே இந்த வகை பதட்டத்தைத் தடுக்க ஒரு சரியான வழி உள்ளது. உங்கள் தேடலை சுருக்கிக் கொள்ளுங்கள். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட, தோல் சிகிச்சை மற்றும் அழகியல் துறையில் புகழ்பெற்ற சர்வதேச பத்திரிகைகளில் ஆவணங்களால் ஆதரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை பற்றி அறிந்து கொண்டு சிகிச்சையில் இறங்குங்கள்.

முடிவுரை:
சரியான சிகிச்சை மூலம் இழந்த உங்கள் தலைமுடியை மீண்டும் பெற முடியும். இதுமட்டுமில்லாமல் முடி இழப்புடன் தொடர்புள்ள பதட்டம், கவலை, தர்மசங்கடம் போன்றவற்றையும் உங்கள் வாழ்வில் இருந்து நீக்கிவிடலாம்.