Just In
- 5 min ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க இரத்தத்தில் சர்க்கரை ஆபத்தான அளவில் இருக்குனு அர்த்தம்... உஷார்!
- 3 hrs ago
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி அவா்கள் எங்கு இருந்தாா் தெரியுமா?
- 7 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் யாரிடமும் எதையும் எதிர்பார்த்திட வேண்டாம்...
- 1 day ago
பாதாம் சிக்கன்
Don't Miss
- News
மாநகராட்சியில் சேலம், நகராட்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் டாப்! குடியாத்தம், தென்காசிக்கும் விருதுகள்
- Movies
ரஜினி முதல் ஆர்யா வரை...ராணுவ அதிகாரி ரோலில் கம்பீரம் காட்டிய ஹீரோக்கள்
- Technology
இந்த Realme மாடலின் விலையை சொன்னா.. 5G Phone வாங்குற ஆசை தானா வரும்!
- Finance
இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களின் பட்டியல்.. எந்த நிறுவனம் பர்ஸ்ட்!
- Sports
ட்ரேடிங் விண்டோ ரெடியா??.. பரபரப்பு கட்டத்தில் ஜடேஜா - சிஎஸ்கே பிரச்சினை.. என்னதான் நடக்கிறது?
- Automobiles
நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளில் எது சிறந்தது? ஹோண்டா சிபி300எஃப் vs டோமினார் 400 vs கேடிஎம் 250 ட்யூக்
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
பொடுகு மற்றும் முடி உதிர்தல் போன்ற தலைமுடி பிரச்சனை அனைத்தையும் தீர்க்க இந்த 4 ஹேர் பேக் போதுமாம்!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் பொதுவானது தலைமுடி பிரச்சனை. இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் தலைமுடி பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு பருவமும் நம் சருமம் மற்றும் தலைமுடிக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், மழைக்காலம் உச்சந்தலையில் தொற்று மற்றும் முடி பிரச்சனைகளை ஏற்படுத்தும். மழைக்காலத்தில், நீங்கள் எண்ணெய் பசையுள்ள உச்சந்தலைகள், க்ரீஸ் முடி மற்றும் கடுமையான பொடுகு மற்றும் அரிப்பு போன்றவற்றை அனுபவிக்கலாம். இது உங்கள் தலைமுடியின் வேர்களை வலுவிழக்கச் செய்து, அதிக முடி உதிர்தலை ஏற்படுத்தலாம். இந்நிலைக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கடுமையான முடி உதிர்வை ஏற்படுத்தும்.
வெப்பமான, ஈரப்பதமான நிலைகள் மழைக்காலத்தின் சிறப்பியல்பு. எனவே, இந்த பருவத்தில் உங்கள் முடி 150 சதவீதம் அதிகமாக உதிர வாய்ப்புள்ளது. பொதுவாக, பெண்கள் ஒரு நாளைக்கு 50 முடியை இழக்கிறார்கள். இருப்பினும், பருவமழையின் போது, அவர்கள் 150-200 முடிகளை இழக்க நேரிடும். மழைக்காலத்தில் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவும் சில எளிய ஹேர் மாஸ்க்குகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

வெந்தயம் மற்றும் எலுமிச்சை சாறு
வெந்தயத்தில் பொடுகு எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் லிமோனாய்டுகள் உள்ளன. அவை கிருமிகளுக்கு எதிராக செயல்படுகின்றன.

எப்படி செய்வது?
புதிதாகப் பிழிந்த எலுமிச்சையின் சாற்றை வெந்தயப் பொடியுடன் சேர்த்து ஹேர் பேக்கை தயாரிக்கவும். இந்த ஹேர் பேக்கை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் நன்றாக தடவும், அதை 30 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர், லேசான மூலிகை ஷாம்பு கொண்டு முடியை நன்கு அலசவும்.

மருதாணி மற்றும் கடுகு எண்ணெய்
ஹெர்பல் மருதாணி உங்கள் தலைமுடியின் தோற்றத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் இது ஒரு அடுக்கு பாதுகாப்பையும் வழங்குகிறது. மேலும், இது முடியை வலுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது நுண்ணறைகளில் ஊட்டச்சத்துக்கள் ஊடுருவுவதை எளிதாக்குகிறது. இதனால் உச்சந்தலை ஆரோக்கியம் மற்றும் முடி வளர்ச்சி மேம்படும்.

எப்படி செய்வது?
ஒரு கப் மருதாணி இலைகளை எடுத்து, 250 மில்லி கொதிக்கும் கடுகு எண்ணெயில் சேர்க்கவும். எண்ணெய் நிறம் மாறியதும், ஆறவிடவும். எண்ணெயை வடிகட்டிய பின், உங்கள் உச்சந்தலையில் தடவவும். அரை மணி நேரம் கழித்து, உங்கள் உச்சந்தலையை நன்கு மசாஜ் செய்து, லேசான ஷாம்பூவை கொண்டு தலைமுடியைக் கழுவவும்.

வேம்பு மற்றும் மஞ்சள் பேஸ்ட்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதோடு மட்டுமல்லாமல், இந்த ஹேர் மாஸ்க்கில் ஆண்டிமைக்ரோபியலும் உள்ளது. இது கிருமிகளை எதிர்த்துப் போராடவும், பொடுகு, தலையில் அரிப்பு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவும்.

எப்படி செய்வது?
புதிய வேப்ப இலைகள் மற்றும் மஞ்சள் வேர்களைப் பொடியாக்கி மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்து 20 முதல் 30 நிமிடங்கள் அப்படியே விடவும். மென்மையான ஷாம்பூவுடன் தலைமுடியை அலசிய பின் கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்.

தயிர் மற்றும் கற்றாழை
கற்றாழை ஜெல் எரிச்சல் மற்றும் அரிப்பு உச்சந்தலையை ஆற்றும் அதே வேளையில் தயிரின் லாக்டிக் அமிலம் அவற்றை மெதுவாக வெளியேற்றும். இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துவது, உங்கள் முடி வேர்களில் இருந்து செல் குப்பைகள், அழுக்கு மற்றும் பிற படிவுகளை அகற்ற உதவுகிறது. மேலும், உங்கள் தலைமுடி பளபளப்பாக இருக்க உதவுகிறது.

எப்படி செய்வது?
ஒரு தேக்கரண்டி புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட கற்றாழை ஜெல்லை தேவையான அளவு தயிருடன் கலக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடிக்கு தடவி உலர அனுமதிக்கவும். ஷாம்பூவை கொண்டு முடியை அலசவும்.