For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உச்சந்தலையில் முடி உதிர்வு அதிகமாக உள்ளதா? அது எதோட அறிகுறி தெரியுமா?

உச்சந்தலையில் முடி உதிர்வு அதிகமாக உள்ளதா? ஆம் என்றால் நீங்கள் வழுக்கை அல்லது அன்ட்ரொஜெனிக் அலோபீசியா என்னும் பாதிப்பைக் கொண்டுள்ளீர்கள். பொதுவாக பல ஆண்கள் இந்த வகை வழுக்கையால் பாதிக்கப்படுகிறார்கள்.

|

உங்களுக்கு ஒரு நாளில் நூறு முடிக்கு மேல் உதிர்கிறதா? குறிப்பாக உச்சந்தலையில் முடி உதிர்வு அதிகமாக உள்ளதா? ஆம் என்றால் நீங்கள் வழுக்கை அல்லது அன்ட்ரொஜெனிக் அலோபீசியா என்னும் பாதிப்பைக் கொண்டுள்ளீர்கள். பொதுவாக பல ஆண்கள் இந்த வகை வழுக்கையால் பாதிக்கப்படுகிறார்கள்.

A Guide To Male Pattern Baldness

வழுக்கையின் பொதுவான அறிகுறி முடி இழப்பாகும். இந்த வகை வழுக்கையில் முடி இழப்பு எதற்காக ஏற்படும் என்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் சில வகை அறிகுறிகள் மற்றும் காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி இழைகள் குறைவது

முடி இழைகள் குறைவது

ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கையின் ஒரு முக்கிய அடையாளம் முடி இழைகள் குறைவது. இதனால் தலையின் இரண்டு பக்கமும் முடி குறைந்து முன்பக்கம் மட்டும் முடி இருக்கும் நிலை உண்டாகும். வழுக்கையை அனுபவிக்கும் எல்லா ஆண்களுக்கும் இதே போன்ற முடி உதிர்வு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலருக்கு தலையில் உள்ள எல்லா முடிகளும் உதிரும் நிலையும் ஏற்படலாம்.

உச்சந்தலையில் முடி மெலிவது

உச்சந்தலையில் முடி மெலிவது

அன்ட்ரொஜெனிக் அலோபீசியா வகை வழுக்கையின் மற்றொரு முக்கிய அடையாளம் உச்சந்தலையில் முடி மெலிந்து காணப்படுவது. முடி இழைகள் குறைவதை காணத் தவறிவிட்டால், உச்சந்தலையில் முடி இழப்பு ஏற்படுவது நிச்சயம். உச்சந்தலையில் முடி இழப்பு ஏற்படுவதை தொடக்கத்தில் உங்களால் அறிந்து கொள்ள முடியாது. இதற்கு காரணம் கண்ணாடியில் அந்தப் பகுதியை உங்களால் காணமுடியாது. அதிக முடி உதிர்ந்து போன நிலையில் மட்டுமே உங்களால் இந்த பாதிப்பை உணர முடியும்.

முடி மெலிதல்

முடி மெலிதல்

எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் தலை முடி மெலிவது ஒரு வகை பாதிப்பாகும். உச்சந்தலை முழுவதும் பாதிக்கப்பட்டு முடி இழப்பு உண்டாகும்.

வழுக்கைக்கான காரணங்கள்:

வழுக்கைக்கான காரணங்கள்:

வழுக்கைக்கான மூன்று முக்கிய காரணங்கள் வயது, ஹார்மோன்கள் மற்றும் மரபணு ஆகும்.

* உங்கள் தந்தை, தாத்தா அல்லது உங்கள் மூதாதையர் யாரேனும் இந்த நிலையால் பாதிக்கப்பட்டால், உங்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

* ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் தலை முடியில் பாதிப்பு உண்டாகலாம்.

* இந்த வகை வழுக்கையால் முடியின் வேர்க்கால்கள் படிப்படியாக சுருங்கும். நாட்கள் செல்ல செல்ல முடி குறுகியதாகவும் மெல்லியதாகவும் வளரத் தொடங்குகின்றன. புதிய முடிகள் வளராத வரை இது தொடர்கிறது.

இதர காரணங்கள்

இதர காரணங்கள்

இந்த காரணங்களைத் தவிர, வேறு பல காரணங்களும் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கலாம். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை சில கடுமையான உடல்நல நோய்களுக்கு ஒரு காரணம் அல்ல. ஆண்களின் வழுக்கைக்கான பிற காரணங்கள் பின்வருமாறு:

* அதிகரித்த மனஅழுத்தம்

* இரும்பு சத்து குறைபாடு அல்லது இரத்தசோகை

* உயர்அதிக வைட்டமின் ஏ சத்து

* நீரிழிவு

* லூபஸ்

* ஊட்டச்சத்து குறைபாடு

* பூஞ்சை தொற்று

* தைராய்டு

* சில மருந்து உட்கொள்ளல்

சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கை

சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கை

எவ்வளவு விரைவில் நீங்கள் மருத்துவரை அணுகுகிறீர்களோ அவ்வளவு நன்மை உங்களுக்கு கிடைக்கும். விரைவில் மருத்துவ தீர்வு எடுத்துக் கொள்வதால் மேலும் முடி இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பாதிப்பை எதிர்த்துப் போராடவும் உதவும் சில மருந்துகளை மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைப்பார். முடி மறு வளர்ச்சி ஏற்பட சில மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. ஆனால் இவற்றின் முழு பலனைப் பெறுவதற்கு பிரச்சனையின் தொடக்க நிலையில் மருத்துவ உதவி பெறுவது அவசியம். முடி இழப்பு பாதிப்பு அடுத்த நிலைக்கு செல்வதால், முடி மாற்று அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே தலைமுடியை திரும்பப் பெற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Guide To Male Pattern Baldness

Are you losing more than 100 hair strands in a day? Especially, at the crown of your head? If yes, you might be suffering from a condition male pattern baldness or androgenic alopecia. Read on to know more...
Desktop Bottom Promotion