தலைமுடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

ஆரோக்கியமான தலைமுடியின் வளர்ச்சிக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் மிகவும் முக்கியம். ஒருவருக்கு தலைமுடி உதிர ஆரம்பித்தாலோ, தலைமுடி அதிகமாக பாதிக்கப்பட்டாலோ அல்லது தலைமுடி மெதுவாக வளர்ச்சி அடைந்தாலோ, முதலில் கவனிக்க வேண்டியது உங்களது உணவுகளைத் தான். உடலிலேயே தலைமுடி தான் வேகமாக வளர்ச்சி பெறும் திசுக்களாகும். எனவே உணவுகளின் மூலம் தலைமுடியின் வளர்ச்சியில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம்.

ஆரோக்கியமான தலைமுடியின் வளர்ச்சிக்கு, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி5, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12, இரும்புச்சத்து, ஜிங்க், புரோட்டீன், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், சிலிகா, சல்பர் மற்றும் ஜெர்மானியம் போன்ற சத்துக்கள் அவசியமானவை ஆகும். இந்த அனைத்து சத்துக்களையும் உணவுகளின் மூலம் பெற முடியும். எனவே உங்கள் தலைமுடி கொட்ட ஆரம்பித்தால், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை கூர்ந்து கவனியுங்கள்.

இக்கட்டுரையில் ஒருவரது தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் நிச்சயம் தலைமுடி உதிர்வதை உடனே தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டைகள்

முட்டைகள்

தலைமுடியே புரோட்டீனால் ஆனது. முட்டைகளில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்குத் தேவையான புரோட்டீன் உள்ளது. அதோடு முட்டையில் பயோடின், இதர பி வைட்டமின்கள் போன்ற தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்த உதவும் சத்துக்களும் உள்ளன. முட்டையில் உள்ள உயர் தரமான புரோட்டீன், தலைமுடியின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு உதவி புரியும். ஆகவே தலைமுடி அதிகம் கொட்டுவது போன்று இருந்தால், தினமும் முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிடுங்கள். அதுவும் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்.

சால்மன்

சால்மன்

சால்மன் ஒரு வகையான கொழுப்பு மீன். இது மூளை, இரத்த நாளம், சருமம் மற்றும் தலைமுடிக்கு நல்லது. சால்மன் மீனில் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வளமான அளவில் உள்ளன. சால்மன் மீனில் புரோட்டீனுடன், பி வைட்டமின்கள், வைட்டமின் பி12 மற்றும் இதர கனிமச்சத்துக்களும் உள்ளன.

இச்சத்துக்கள் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அனைத்துவிதமான தலைமுடி பிரச்சனைகளையும் சரிசெய்யும். எனவே வாரத்திற்கு 2 முறை சால்மல் மீனை சாப்பிடுங்கள். ஒருவேளை இந்த மீன் கிடைக்காவிட்டால், கானாங்கெளுத்தி, மத்தி போன்றவற்றை சாப்பிடுங்கள்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

நல்ல தரமான முடியின் வளர்ச்சிக்கு புரோட்டீன் அவசியமானது. மாட்டிறைச்சியில் நல்ல அளவிலான புரோட்டீனுடன் பி வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்றவையும் உள்ளது. தோல் நீக்கப்பட்ட மாட்டிறைச்சியை வாரத்திற்கு 2 முறை உட்கொண்டு வந்தால், தலைமுடி நன்கு வளர்ச்சி பெறும். ஒருவேளை உங்களுக்கு உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், மாட்டிறைச்சியைத் தவிர்த்து, இதர புரோட்டீன் உணவுகளை உட்கொள்ளுங்கள்.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸ்களில் புரோட்டீன், நார்ச்சத்து, பி வைட்டமின்கள், வைட்டமின் சி, ஜிங்க் மற்றும் கனிமச்சத்து போன்ற தலைமுடி வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. மேலும் பீன்ஸில் நல்ல அளவில் இரும்புச்சத்து உள்ளது. எனவே பீன்ஸ் வகைகளைச் சேர்ந்த காராமணி, கருப்பு காராமணி, கொண்டைக்கடலை, சோயா பீன்ஸ் போன்றவற்றை சாப்பிடுங்கள்.

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகளில் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் ஊட்டச்சத்துக்களான புரோட்டீன், ஜிங்க், செலினியம், பயோடின், பொட்டாசியம், காப்பர், இரும்புச்சத்து, பி வைட்டமின்கள், வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவை உள்ளது. மேலும் சூரியகாந்தி விதைகளில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

இந்த சூரியகாந்தி விதைகளை ஒரு கையளவு தினமும் சாப்பிட்டு வந்தால், அது தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். வேண்டுமானால் சூரியகாந்தி விதைகளை உண்ணும் உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம். அதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். ஏனெனில் இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு அதிகம்.

நட்ஸ்

நட்ஸ்

நட்ஸ்களில் புரோட்டீன், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் போன்ற தலைமுடி உதிரும் பிரச்சனைக்குத் தேவையான அனைத்தும் நிரம்பியுள்ளன. ஒருவர் தினமும் நட்ஸ்களை சிறிது சாப்பிட்டு வந்தால், அது பல வருடங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும். எனவே நட்ஸ்களான பாதாம், வேர்க்கடலை, வால்நட்ஸ் மற்றும் முந்திரி போன்றவற்றை தினமும் சிறிது சாப்பிடுங்கள். அதிலும் இரவில் நீரில் ஊற வைத்து நட்ஸ்களை சாப்பிட்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

பசலைக் கீரை

பசலைக் கீரை

கீரைகளிலேயே பசலைக்கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் பி, சி, ஈ, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற தலைமுடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆகவே தலைமுடி அதிகம் உதிர ஆரம்பித்தால், பசலைக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடுங்கள் அல்லது பசலைக்கீரை ஜூஸ் குடியுங்கள்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

என்ன நம்ப முடியவில்லை தானே? ஓட்ஸில் பி வைட்டமின்கள், ஜிங்க், புரோட்டீன், காப்பர் போன்றவை அதிகம் உள்ளது. இவை தலைமுடியின் வளர்ச்சி அவசியமான சத்துக்களாகும். இதோடு பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவைகளும் உள்ளன. எனவே முடிந்தால் ஒரு பௌல் ஓட்ஸை தினமும் சாப்பிடுங்கள்.

கேரட்

கேரட்

கேரட்டுகளில் நல்ல அளவிலான பீட்டா-கரோட்டீன் என்னும் தலைமுடியின் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் ஏ, ஸ்கால்ப்பில் ஆரோக்கியமான அளவில் எண்ணெய் சுரப்பதற்கு உதவும். அதற்கு கேரட்டை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். கேரட்டை ஜூஸ் வடிவில் எடுப்பதாக இருந்தால், அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் தினமும் காலையில் கேரட் ஜூஸைக் குடியுங்கள்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

தலைமுடி உதிர்வதை எளிதில் தடுக்க வேண்டுமானால், சர்க்கரைவள்ளிக் கிழங்கை அடிக்கடி சாப்பிடுங்கள். இதில் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளது. இது உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ ஆக மாற்றமடைகிறது. வைட்டமின் ஏ ஆரோக்கியமான செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவும். அதோடு சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் சி, காப்பர், இரும்புச்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை அதிகம் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Superfoods To Stop Hair Loss

Here we lised some of the superfoods to stop hair loss. Read on to know more...
Story first published: Monday, April 16, 2018, 17:24 [IST]