For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடுகுத் தொல்லையை நிரந்தரமாக போக்க ஷாம்புவுடன் தேங்காய்ப்பாலை இப்படி தேய்ங்க...

பொடுகைப் போக்குவதற்காக உங்கள் ஷாம்புவுடன் தேங்காய் சேர்த்து பயன்படுத்துவது பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது.

|

கருப்பு நிற உடை பொதுவாக அனைவருக்கும் அழகாக இருக்கும். இப்படி கருப்பு உடையணிந்து வெளியில் செல்ல நினைக்கும்போது நமது தோளில் சிதறி இருக்கும் பொடுகை யாராவது கவனித்ததுண்டா?

Homemade Anti-Dandruff Shampoo with Coconut Milk

இது பலருக்கும் பொதுவாக இருக்கும் ஒரு பிரச்சனை தான். ஆம், தலையில் உள்ள பொடுகு தோள் பகுதி, முதுகு போன்ற இடங்களில் படர்ந்து காணப்படும். இது நமக்கு ஒருவித அசௌகரியத்தை தருவதோடு சமூகத்தில் இயல்பாக நம்மை இயங்க வைக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொடுகுக்கு தீர்வு

பொடுகுக்கு தீர்வு

பல முறை இந்த பொடுகைப் போக்க நாம் பலவேறு ஷாம்பூகளை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் அவற்றில் இருக்கும் ரசாயனம் மற்றும் ஆரோக்கியமற்ற மூலப்பொருள் காரணமாக அவை நல்ல பலனைத் தருவதில்லை. பொடுகைப் போக்குவதற்கான ஷாம்பூவைக் கண்டுபிடிப்பது நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமான விஷயம் இல்லை. ஆனால் அதனை வீட்டில் தயாரிக்க வேண்டும். இதனால் நீங்கள் விரும்பும் பலன் மிக எளிதில் கிடைக்கும்.

பொதுவாக அன்டி டான்ட்ரப் ஷாம்பூ நீங்கள் நினைத்த பலனைத் தராமல் போக என்ன காரணம் என்பதை நாம் அறிந்து கொள்வோம்.

சிகிச்சை

சிகிச்சை

பொடுகு என்பது மருத்துவ ரீதியாக பிட்டிரியாசிஸ் காப்டிசிஸ் அல்லது செபோரிக் டேர்மடிசிஸ் என்னும் உச்சந்தலையில் உண்டாகும் ஒரு வித நோயாகும். பல்வேறு சிகிச்சைகளுக்கு மத்தியில் இந்த நோய் பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் இருந்து வருகிறது. பரவலாகக் காணப்படும் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக ஒவ்வொரு நாளும் புது வித அன்டி டான்ட்ரப் ஷாம்பூக்கள் சந்தையில் வந்த வண்ணம் உள்ளன.

உலகம் முழுவதும் உள்ள ஷாம்பூவில், ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூ பொடுகைப் போக்கும் ஷாம்பூ விற்பனையில் முதலிடம் பிடிக்கிறது. இருப்பினும் தோல் சிகிச்சை நிபுணர்கள் இந்த பிரச்சனை குறித்து போதிய கவனம் செலுத்துவதில்லை. மக்கள் மத்தியில் இவ்வளவு தொந்தரவை உண்டாக்கும் பொடுகை ஏன் போக்க முடிவதில்லை?

MOST READ: ஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க... இந்த அற்புதமெல்லாம் உங்க உடம்புல நடக்கும்

ஷாம்பு

ஷாம்பு

உச்சந்தலையில் உண்டாகும் இந்த பாதிப்பு ஒரு பொதுவான பாதிப்பாகும். பொது ஜனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு பொடுகு பாதிப்பு இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. உலகம் முழுவதையும் பாதிக்கும் ஒரு பிரச்சனைக்கு நிச்சயம் ஒரு உபாயம் இருக்கவே செய்யும். ஆனால் ரசாயனம் மிகுந்து காணப்படும் இன்றைய ஷாம்பூக்களால் தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்க முடிகிறது.

காரணங்கள்

காரணங்கள்

டான்ட்ரப் என்ற வார்த்தையில் "டான்" என்பது தேமலைக் குறிப்பதாகவும் "ட்ரப்" என்பது அழுக்கைக் குறிப்பதாகவும் அமைகிறது. ஆகவே இந்த வார்த்தைக்கு இப்போது நமக்கு முழு அர்த்தம் புரிகிறது. இந்த அழுக்கைப் போக்கும் வகையில் சரியான ஷாம்பூவை பயன்படுத்துவது இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளியை வைக்கும். மேலும் பொடுகு உண்டாவதற்கான உண்மையான காரணங்களை நீங்கள் அறிந்து கொள்வதால் மேலும் இதன் பாதிப்பை நேராமல் கவனமாக இருக்கலாம்.

தீர்வுகள்

தீர்வுகள்

தீர்வு பொடுகு போக்கும் ஷாம்பூவை பயன்படுத்துவது மூலம் இதனைத் தடுக்கலாம். உடல் மற்றும் கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தும் பல மூலப்பொருட்கள் நச்சு அதிகம் உள்ள இரசாயனங்களைக் கொண்டது என்பது நம்மில் பலரும் அறிவோம். புற்றுநோயை உண்டாக்கும் இத்தகைய ரசாயனங்கள் சரியான தீர்வுகளை வழங்கத் தவறி விடுகின்றன. நச்சுப்பொருட்கள் உள்ள ஷாம்பூகள், உடலின் ஹார்மோன் வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்குகின்றன மற்றும் பல்வேறு உடல் உபாதைகளை உண்டாக்குகின்றன என்பது தெரிந்தும் இவை ஏன் சந்தையில் விற்கப்படுகின்றன என்ற கேள்வி நமக்கு எழுகின்றது. ஆனால் இன்றைய நாட்களில் ஒப்பனைப் பொருட்களுக்கான சந்தை பில்லியன் டாலர் தொழிற் களமாக மாறியிருப்பதை நாம் மறக்கக் கூடாது. இத்தகைய சூழ்நிலையில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வீட்டிலேயே உள்ள மூலப்பொருட்கள் கொண்டு ஷாம்பூவை நாமே தயாரித்துக் கொள்ளலாம்.

உச்சந்தலை

உச்சந்தலை

பொடுகு என்பது உச்சந்தலையில் உண்டாவது, முடியில் இருந்து அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஆகவே இப்போது தயாரிக்கும் ஷாம்பூவை உச்சந்தலையில் தினமும் மென்மையாக மசாஜ் செய்து பின்பு தலையை அலசுவதால் பொடுகு காணாமல் போகும்.

ஆன்டி டான்டிராஃப் ஷாம்பு

ஆன்டி டான்டிராஃப் ஷாம்பு

சந்தையில் கிடைக்கும் அன்டி டான்ட்ரப் ஷாம்பூவை தொடர்ந்து பயன்படுத்துவது கூந்தலுக்கு பாதிப்பை உண்டாக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கும் இந்த ஷாம்பூ வாரத்தில் பலமுறை பயன்படுத்தினாலும் கூந்தலுக்கு எந்த ஒரு எதிர்வினையையும் உண்டாக்குவதில்லை. இப்போது இதன் தயாரிப்பை பார்ப்போம்.

MOST READ: சர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் முருங்கை டீ... ட்ரை பண்ணிப் பாருங்க...

தேங்காய்ப் பால்

தேங்காய்ப் பால்

ஒரு அகலமான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணெய் மற்றும் காஸ்டில் சோப் ஆகியவற்றை சேர்க்கவும். ஊட்டச்சத்து மிகுந்த தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணெயில் இருந்து தலை முடி மற்றும் உச்சந்தலைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கிறது.

இந்த ஊட்டச்சத்துகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து தலைக்கு ஈரப்பதத்தைத் தருகிறது. காஸ்ட்யில் சோப்பு என்பது ஆலிவ் எண்ணெய், நீர் மற்றும் கடுங்கார நீர் ஆகியவற்றிலிருந்து பெறக்கூடிய மென்மையான காய்கறி சார்ந்த சோப்பு ஆகும், இது மக்கும் தன்மை உடையது, மற்றும் நச்சுத்தன்மையற்றது. காஸ்டில் சோப் மென்மையானதாக இருப்பதால் உச்சந்தலையை சுத்தப்படுத்தி அதிக எண்ணெய் மற்றும் அழுக்கைப் போக்க உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் காஸ்டில் சோப் ஆகியவை ஒன்றாகக் கலந்தவுடன் அதில் சிறிதளவு நீர், ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா சேர்க்கவும். ரசாயனத்தை தவிர்க்க , சுத்தீகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்துவது நல்லது. ஆப்பிள் சிடர் வினிகரில் சக்திமிக்க என்சைம்கள் இருப்பதால் பூஞ்சை மற்றும் கிருமிகளைப் போக்குவதில் சிறந்த பலன் அளிக்கிறது. பேக்கிங் சோடாவில் உள்ள சிராய்ப்பு தன்மை காரணமாக இறந்த அணுக்களை அகற்றி உச்சந்தலையை எக்ச்போலியெட் செய்து பூஞ்சையை அகற்றுகிறது.

டீ ட்ரி எண்ணெய்

டீ ட்ரி எண்ணெய்

இப்போது இதனுடன் ரோஸ்மேரி மற்றும் டீ ட்ரீ எண்ணெய்யை சேர்க்கவும். ரோஸ்மேரி எண்ணெய் ஒரு சிறந்த நறுமணத்தை வழங்குகிறது. பொடுகு, பூஞ்சை பாதிப்பால் உண்டாகும் காரணத்தால் பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கும் மூலப்பொருட்களை சேர்ப்பது மிகவும் அவசியம். அதனால் ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் டீ ட்ரீ எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இந்த எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு தன்மைகள் உள்ளதால் இவை முடி அடர்த்தி மற்றும் வளர்ச்சிக்கும் துணை புரிகின்றன.

வெந்தயம்

வெந்தயம்

இதன்பிறகு சேர்க்க வேண்டிய மூலப்பொருள் வெந்தயம். இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருள் வெந்தயம். இந்த வெந்தயம் கூந்தல் மற்றும் உச்சந்தலைக்கு பல்வேறு அற்புதங்களைச் செய்கிறது. புரதம் மற்றும் அமினோ அமிலத்தின் கலவை வெந்தயத்தில் உள்ளது. இந்த ஊட்டச்சத்து மிகுந்த பண்பு கொண்ட வெந்தயம் ஆரோக்கியமான கூந்தல், முடி வளர்ச்சி, போன்றவற்றை ஊக்குவித்து பொடுகைப் போக்க உதவுகின்றன. குறிப்பாக வெந்தயத்தில் உயர் செறிவு லெசித்தின் உள்ளது. இது ஒரு இயற்கை இலேபனம் ஆகும். இதனால் தலை முடி வலிமையாகவும் பட்டு போன்ற மென்மையுடனும் இருக்க முடிகிறது.

எல்லா மூலப்பொருட்களும் நன்றாகக் கலக்கும்படி பார்த்துக் கொள்ளவும். ஒரு ஷாம்பூ பாட்டிலில் அல்லது ஒரு கண்ணாடி ஜாரில் இந்த கலவையை ஊற்றிக் கொள்ளவும்.

MOST READ: ராகி யாரெல்லாம் சாப்பிடலாம்? காலை நேரத்தில் சாப்பிட்டால் என்ன ஆகும்?

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

எப்போதும் போல், தலையை ஈரமாக்கிக் கொள்ளவும். இப்போது உள்ளங்கையில் இந்த கலவையை சிறிய அளவு ஊற்றி தலையில் மென்மையாக தடவவும். மென்மையாக மசாஜ் செய்தவுடன் ஷாம்பூ போட்டு தலையை அலசவும். இந்த கலவையை ஊற்றி மசாஜ் செய்தபின் சில நிமிடங்கள் ஊற விடுவதால் பலன் இரட்டிப்பாகும்.

ஒருநாள் விட்டு ஒருநாள் இதனை பயன்படுத்துவதால் சிறந்த பலன் கிடைக்கும். ஒவ்வொரு முறை பயன்படுத்துவதற்கு முன்னர் பாட்டிலை நன்றாகக் குலுக்கிக் கொள்ளவும். இதனை பயன்படுத்துவதால் ஏதேனும் அசௌகரியம் அல்லது ஒவ்வாமை பாதிப்பு உண்டானால் இதனை பயன்படுத்துவதை தவிர்க்கவும். தலை முழுவதும் பயன்படுத்துவதற்கு முன் ஒரு சிறிய அளவு எடுத்து உடலில் பரிசோதித்து பின்பு பயன்படுத்தவும்.

தேங்காய் பால் ஷாம்பூ

தேங்காய் பால் ஷாம்பூ

தேவையான பொருட்கள்:

• 1-1/2 கப் தேங்காய் பால் (ஒரு கேன் )

• 1/2 கப் காஸ்டில் சோப் திரவ வடிவம்

• 1/2 கப் சுத்தீகரிக்கப்பட்ட நீர்

• 1/2 ஸ்பூன் சுத்தீகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய்

• 1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர்

• 1 ஸ்பூன் பேக்கிங் சோடா

• 20 துளிகள் ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய்

• 15 துளிகள் டீ ட்ரீ அத்தியாவசிய எண்ணெய்

• 1 ஸ்பூன் வெந்தயத் தூள்

• BPA-அல்லாத பிளாஸ்டிக் பாட்டில்

செய்முறை

ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் காஸ்டில் சோப் ஆகியவற்றை சேர்க்கவும். இவை அனைத்தும் நன்றாக சேர்ந்தவுடன் அதில் தண்ணீர், ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா சேர்க்கவும்.

மேலும் இந்த கலவையில் ரோஸ்மேரி மற்றும் டீ ட்ரீ எண்ணெய் சேர்க்கவும். கடைசியாக இதில் வெந்தயத் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை ஒரு BPA அல்லாத பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Anti-Dandruff Shampoo with Coconut Milk

here we are giving one amazing home remedy (coconut milk) for dandruff.
Desktop Bottom Promotion