ஒயின் தலையில தேய்ச்சா உங்க கூந்தலும் இப்படி ஆகிடும்... ஆனா இப்படிதான் தேய்க்கணும்...

Posted By: suganthi rajalingam
Subscribe to Boldsky

நாம் எல்லாரும் ராபுன்ஷல் கார்டூன் கதாபாத்திரம் மாதிரி நீண்ட அலைபாயும் கூந்தலைத் தான் விரும்புவோம். இந்த நீண்ட கூந்தலைக் கொண்டு உலகத்தையே கட்டி போட்டு விட வேண்டும் என்பதே நமது ஆசையாக இருக்கும். ஆனால் அப்படி ஒரு அலைபாயும் கூந்தல் சாத்தியமா?

benefits of red wine for hair growth

நிறைய கெமிக்கல் பொருட்கள், கூந்தல் பராமரிப்பு பொருட்கள், வீட்டு முறைகள், எண்ணெய் மசாஜ் இப்படி ஒன்னையும் நாம் விட்டு வைக்க மாட்டோம். ஆனால் இதனால் தீர்வு கிடைப்பதை விட பக்க விளைவுகள் தான் அதிகமாக இருக்கும். சரி அப்போ என்ன தான் செய்வது என்று யோசிக்கிறீர்களா? கவலையை விடுங்க. இருக்கவே இருக்கு ரெட் வொயின்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரெட் ஒயின்

ரெட் ஒயின்

ஆமாங்க இந்த ரெட் ஒயினில் உள்ள புரோட்டீன் பாதிக்கப்பட்ட முடிகளை சரி செய்து விரைவான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே ஒரு நாளைக்கு 1/2 கிளாஸ் ரெட் ஒயின் தினமும் குடித்து வந்தாலே போதும் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து கூந்தல் வளர்ச்சி, முடி உதிர்தல், பொடுகு, அரிப்பு, வறண்ட சருமம் இப்படி ஒட்டுமொத்த நன்மைகளையும் அள்ளிக் கொடுத்து விடுகிறது. சரி வாங்க இந்த ரெட் ஒயினை கொண்டு எப்படி கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

ரெட் ஒயின் மற்றும் முட்டை

ரெட் ஒயின் மற்றும் முட்டை

தேவையான பொருட்கள்

1/2 கப் ரெட் ஒயின்

1 முட்டை

1 டீ ஸ்பூன் அவகேடா ஆயில்

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் ரெட் ஒயின் மற்றும் முட்டையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு 1 டீ ஸ்பூன் அவகேடா ஆயில் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை தலை மற்றும் கூந்தல், மயிர்கால்களில் நன்றாக தடவி மசாஜ் செய்யவும். பிறகு ஷவர் கேப் கொண்டு தலையை கவர் பண்ணி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு அலசவும். வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் உங்கள் கூந்தல் வளர்ச்சி மேம்படும்.

ரெட் வொயின் மற்றும் தேன்

ரெட் வொயின் மற்றும் தேன்

தேவையான பொருட்கள்

1/2 கப் ரெட் ஒயின்

1 டீ ஸ்பூன் தேன்

1 முட்டை கரு

1 வாழைப்பழம்

பயன்படுத்தும் முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து கெட்டியாக பேஸ்ட் மாதிரி ஆக்கி கொள்ளவும். கூந்தலை இரண்டு பாகங்களாக பிரித்து மயிர்கால்கள் முதல் கூந்தலின் நுனி வரை தடவவும். ஷவர் கேப் கொண்டு மூடி 1-2 மணி நேரம் அப்படியே வைத்து இருக்கவும்

பிறகு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு அலசவும். வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் உங்கள் கூந்தல் பட்டு போன்று மென்மையாக இருக்கும்.

ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் ரெட் வொயின்

ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் ரெட் வொயின்

தேவையான பொருட்கள்

1/4 கப் ஆப்பிள் சிடார் வினிகர்

1 கப் ரெட் ஒயின்

பயன்படுத்தும் முறை

இரவில் கொஞ்சம் நேரம் ரெட் ஒயினை தடவி விட்டு விடுங்கள். பிறகு ரெட் வொயின் கலவையுடன் 1/4 கப் ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து வைத்து கொள்ளுங்கள். முதலில் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு கூந்தலை அலசி கொள்ளுங்கள். பிறகு வினிகர் கலவையை தலை மற்றும் கூந்தலில் தேய்த்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

ரெட் வொயின் ஷாம்பு

ரெட் வொயின் ஷாம்பு

தேவையான பொருட்கள்

11/2 கப் ரெட் ஒயின்

1 கப் சாம்பு

பயன்படுத்தும் முறை

ஒரு பாத்திரத்தில் 15 நிமிடங்கள் ரெட் ஒயின் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு ஆறியதும் அதனுடன் 1 கப் ஷாம்பு சேர்க்கவும். இதை வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு மாதிரி தலைக்கு பயன்படுத்தி வரவும். பிறகு குளிர்ந்த நீரில் அலசிக் கொள்ளுங்கள்

உங்கள் கூந்தல் அலைபாயும்.

ரெட் ஒயின் மற்றும் ஸ்ட்ரா பெர்ரி ஹேர் மாஸ்க்

ரெட் ஒயின் மற்றும் ஸ்ட்ரா பெர்ரி ஹேர் மாஸ்க்

தேவையான பொருட்கள்

1 கப் ரெட் ஒயின்

3-4 பழுத்த ஸ்ட்ரா பெர்ரி

பயன்படுத்தும் முறை

ஸ்ட்ராபெர்ரியை நன்றாக மசித்து 1 கப் ரெட் ஒயின் கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு அலசிக் கொள்ளவும். வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

புற ஊதாக் கதிர்கள்

புற ஊதாக் கதிர்கள்

இந்த ரெட் ஒயின் கொண்டு கூந்தலை அலசுவதால் சூரியனின் புற ஊதாக் கதிர்களினால் கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம். அதனால் கூந்தலின் நுனிப்பகுதி உடையாமல் இருக்கவும் செய்யும். கூந்தல் வறட்சியைத் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hair Care Benefits Of Red Wine

Apart from an alcohol, there are several other ways in which red wine can be used for hair care. It contains proteins that help repair the damaged hair and restore its structure. Drinking about a half a glass of red wine a day can help with the circulation of your blood, making sure your scalp gets proper circulation. This makes sure that your head is healthy and designed to offer the best growth to your hair. Red wine with egg, red wine with honey, red wine shampoo these are described here.
Story first published: Wednesday, April 11, 2018, 13:40 [IST]