For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்கள் மறந்து போன சில சுவாரசியமான வழிமுறைகள் என்னென்னனு தெரியுமா..?

|

கால மாற்றங்கள் ஏற்படுவதற்கு ஏற்ப நாமும் மாற்றம் பெறுகின்றோம். மாற்றங்கள் நமக்கும் நம்மை சுற்றி இருக்கும் சமூகத்துக்கும் நன்மை ஏற்படுத்தினால் அது வரவேற்க தக்கதே. ஆனால், அவை நம்மை தவறான பாதையில் அழைத்து சென்றால் நமக்கு நன்மையை தராது. அந்த வகையில் நாம் பல சிறந்த விஷயங்களை மறந்து விட்டோம்.

இந்தியர்கள் மறந்து போன சில சுவாரசியமான வழிமுறைகள் என்னென்னனு தெரியுமா..?

பழங்காலத்தில் நாம் பயன்படுத்திய பல பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகள் இன்று முற்றிலும் மாறி உள்ளது. இதில் நாம் பயன்படுத்திய ஒரு சில குறிப்புகளும் சேரும். இந்த குறிப்புகள் நமக்கு மிகவும் பக்க பலமாக இருந்தவை. அவை என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நம் தேசம் இந்தியா..!

நம் தேசம் இந்தியா..!

நமக்கு எதை பற்றி பேசினாலும் ஒரு வித உணர்வு பூர்வமான நினைவுகள் வராது. ஆனால், "இந்தியா" என்ற ஒற்றை வார்த்தை கேட்டதுமே நம் அனைவருக்கும் நிச்சயம் உள்ளுக்குள் ஒரு ஆழ்ந்த உணர்வு இருக்க தான் செய்யும். இது தான் நாட்டு பற்று என கருதப்படுகிறது.

மறக்கப்பட்டவை ஏராளம்..!

மறக்கப்பட்டவை ஏராளம்..!

காலப்போக்கில் நாம் பல வகையான பழக்க வழக்கங்கள், செயல்பாடுகள், குறிப்புகள் போன்றவற்றை மறந்தே விட்டோம். அதற்கு பதிலாக இன்றைய வேதியியல் பொருட்களையும், செயற்கை உலகிலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதில் நாம் மறக்கப்பட்ட குறிப்புகள் தான் அதிகம்.

வேப்பிலை குளியல் தெரியுமா..?

வேப்பிலை குளியல் தெரியுமா..?

இன்று நாம் நமது முடியை பாதுகாக்க என்னென்னமோ செய்கின்றோம். ஆனால், அவை எல்லாம் எந்த விதத்திலும் நமது முடியை பாதுகாக்க போவதில்லை. முடி கொட்டும் பிரச்சினைக்காக பழங்கால இந்தியர்கள் வேப்பிலை குளியலை மேற்கொண்டனர். இவை தலையின் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வை தடுக்கும்.

கற்றாழை கண்டிஷ்னரா..?

கற்றாழை கண்டிஷ்னரா..?

மிக அற்புதமான மூலிகைகளில் இந்த கற்றாழையும் ஒன்று. இவற்றை நாம் முன்பெல்லாம் கண்டிஷ்னராக பயன்படுத்தி வந்துள்ளோம். ஆனால், இன்று கண்ட கெமிக்கல்ஸ் கொண்ட ஷாம்பூக்களை தலைக்கு தேய்த்து குளித்து வருகின்றோம். இதனால், முடி பாழாகிறதே தவிர முடி பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

MOST READ: உடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்..!

எவ்வாறு தயாரிப்பது..?

எவ்வாறு தயாரிப்பது..?

முதலில் கற்றாழையில் உள்ள ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். இதனை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம். இறுதியாக இதனை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு, முடி உதிர்வு, வறண்ட தலை ஆகியவை குணமாகும்.

பச்சை தண்ணி குளியாலா..?

பச்சை தண்ணி குளியாலா..?

இப்போதுதான் ஹீட்டர், கெய்சர் என்றெல்லாம் வித விதமான முறையில் நீரை சூடுபடுத்தி பயன்படுத்துகின்றோம். ஆனால், உண்மை என்னவென்றால் நாம் நமது தலைக்கு சூடு நீரை பயன்படுத்த கூடாது. முன்பெல்லாம், இந்தியர்கள் குளிர்ந்த நீரையே தலைக்கு பயன்படுத்தி வந்தனர்.

தினமும் தேங்காய் எண்ணெய்..!

தினமும் தேங்காய் எண்ணெய்..!

நாம் நமது பள்ளி பருவத்தில் இது போன்ற அளவில் முடி உதிர்வோ, வெள்ளை முடியோ, பொடுகோ இருந்ததில்லை. ஆனால், இப்போதெல்லாம் முடி சார்ந்த பிரச்சினைகள் அதிகமாகி விட்டது. காரணம், தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தலே. அதுவும், தேங்காய் எண்ணெயை நாம் தினமும் தலைக்கு தேய்த்து வந்தாலே முடி பிரச்சினை அனைத்தும் தீர்ந்து விடும்.

நெல்லிக்கனி மாஸ்க் தெரியுமா..?

நெல்லிக்கனி மாஸ்க் தெரியுமா..?

முடி பிரச்சினையை அன்று தீர்த்து வைத்ததில் இந்த நெல்லிக்கனிக்கு முக்கிய பங்கு உள்ளது. குறிப்பாக நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி தான் முடியின் வளர்ச்சிக்கும், முடி சார்ந்த பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளியாக இருந்தது.

MOST READ: முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..? தவறா..? அப்படி வைத்தால் என்ன நடக்கும்..?

எவ்வாறு பயன்படுத்துவது..?

எவ்வாறு பயன்படுத்துவது..?

நெல்லிக்கனியை சாப்பிட்டால் சரி அல்லது தலைக்கு நேரடியாக பயன்படுத்தினாலும் சரி, எல்லா விதத்திலும் இது நன்மையே தரும். நெல்லி பொடியை எடுத்து கொண்டு சிறிது நீர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைத்து விடும்.

இனி நமது பாரம்பரிய முறையை பின்பற்றி அழகுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வோம். மேலும், இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Forgotten Indian Beauty Secrets For Healthy Hair

Follow these easy and simple beauty tips for hair to get marvellous beauty.
Desktop Bottom Promotion