மாம்பழத்தை கூந்தலுக்கு தேய்த்து குளித்தால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?

Posted By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

உங்களது கூந்தல் பராமரிப்பு முறைகளில் வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை மாம்பழத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஆரோக்கியமான, அழகான தோற்றத்தை அளிக்கும் கூந்தலாக உங்கள் கூந்தல் மாறுவதை நீங்களே பார்த்து ஆச்சரியப்படுவீர்கள்.

10 Amazing Benefits Of Using Mango On Hair!

வெறும் மாம்பழத்தை மசித்தோ அல்லது மாம்பழத்தோடு வேறுசில இயற்கைப் பொருள்களுடன் (உதாரணத்திற்கு தேன், கற்றாழை போன்றவை) சேர்த்தோ ஸ்கால்ப் மற்றும் முடியில் தேய்க்க வேண்டும்.

குறைந்தது ஒரு மாதத்தில் நீங்கள் வித்தியாசத்தை கண் கூடாக பார்க்கலாம். நீங்கள் இதை ட்ரை செய்து பார்த்துவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் நிச்சயம் பரிந்துரைக்க வேண்டும் என்று உங்களுக்கே தோன்றும் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலிமையான முடி

வலிமையான முடி

மாம்பழத்தை ஸ்கால்ப்பில் தேய்ப்பதால் கூந்தலுக்கு புத்துயிர் கிடைக்கும். மாம்பழத்தில் உள்ள ஆன்டிஆன்ஸ்டன்ட்கள் முடிக்கும் ஸ்கால்ப்பிற்கும் ஊட்டமளித்து சிறந்த பொலிவையும் வலிமையையும் கொடுக்கும். இதனால் அழகான கூந்தல் சீக்கிரம் கிடைக்கும்.

 முடி வளரும்

முடி வளரும்

நீளமான மற்றும் பளபளக்கும் கூந்தல் வேண்டும் என்று நினைப்பவர்கள் மாம்பழத்தை ஸ்கால்ப்பிலும் முடியிலும் தேய்த்தால் நன்கு முடி வளரும். மேலும் கூந்தலை வலுவாக்கி முடி கொட்டுவதையும் தடுத்துவிடும். வீட்டில் இருந்தபடியே செய்யும் இந்த ஹேர் மாஸ்க் நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும்.

பொடுகுத் தொல்லை

பொடுகுத் தொல்லை

மாம்பழக் கூழை மற்ற சில இயற்கைப் பொருட்களை சேர்த்து கலந்து ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி விட்டால் பொடுகுத் தொல்லை போய்விடும். மேலும், பொடுகுத் தொல்லை ஏற்படாமல் தடுத்து விடும்.

 இளநரை

இளநரை

மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி இளநரை ஏற்படுவதைத் தடுக்கும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்யதால் முடியை ஆரோக்கியமாகவும், இளமைப் பொலிவுடனும் மாற்றலாம். மற்ற செயற்கை நிறமிகளை போல் இல்லாமல் இயற்கையான தோற்றத்தைத் தரும்.

பொலிவான கூந்தல்

பொலிவான கூந்தல்

மந்தமான கூந்தலால் அவதிப்படுபவர்களுக்கு மாம்பழத்தில் உள்ள முக்கியமான வைட்டமின்கள் உபயோகமாக இருக்கும். முடிகளுக்கு இயற்கையான அழகையும், அடர்த்தியையும் கொடுக்கும். செயற்கை மருத்துவத்தை விட இது நல்ல பலனை நிச்சசயம் தரும்.

சேதமடைந்த கூந்தல்

சேதமடைந்த கூந்தல்

சுற்றுசூழல் மாசு காரணமாகவும், தீங்கு விளைவிக்கும் சூரியக் கதிர்களின் தாக்கத்தாலும் பலரது கூந்தல் வலுவிழந்துள்ளது. மாம்பழ ஹேர் பேக் உபயோகிப்பதால் சேதமடைந்த கூந்தலுக்கு வலிமை சேரும் மற்றும் முடி வளர உதவும்.

மெல்லிய கூந்தல்

மெல்லிய கூந்தல்

மெல்லிய கூந்தல் எப்போதும் வலிமை இல்லாமல், உடையக் கூடிய கூந்தல் போல் காட்சியளிக்கும். அப்படிப்பட்ட கூந்தல் பலருக்கு தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும். இந்த நிலை மாற வேண்டும் என்றால், மாம்பழத்தை மசித்து ஸ்கால்ப்பில் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி செய்தால் கூந்தல் மெலிந்து போகாமல் தடுத்து அடர்த்தியாக வளரச் செய்யலாம்.

வெடிப்பு ஏற்பட்ட முடிகள்

வெடிப்பு ஏற்பட்ட முடிகள்

மாம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் வெடித்த முடிகளை சரிசெய்ய சிறந்தது. மாதத்திற்கு ஒரு முறை மாம்பழத்தை கூந்தலுக்குப் தேய்த்து வருவதால் வேர்க்கால்கள் வலிமை பெற்று அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.

மாதத்திற்கு ஒரு முறை முடி வெட்டுவதை விட மாதத்திற்கு ஒரு முறை மாம்பழத்தை முடிக்கு தேய்த்துப் பாருங்கள் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

 சுருட்டை முடி

சுருட்டை முடி

சுருட்டை முடியை சமாளிப்பதே பெரும்பாடு தான். மாம்பழத்தை மசித்து முடிக்கு தேய்த்து வந்தால் முடி நன்கு அடங்கி அதிகமாக சிக்கு ஏற்படாமல் தடுக்கலாம்.

இதனால் முடி உதிர்வையும் தடுக்க முடியும். மாம்பழத்தை கூந்தலுக்கு தேய்ப்பதால் கூந்தல் எப்போதும் சீராக இருக்கும். உபயோகிக்க ஆரம்பித்த சில வாரங்களிலேயே நீங்கள் மாற்றத்தை உணர்வீர்கள்.

உடைந்த முடி

உடைந்த முடி

முடி உடைவதை தடுக்க உதவும் சிறந்த வழி மாம்பழம் உபயோகிப்பது தான். வீட்டு வைத்தியமானாலும் இது சிறப்பாக செயல்படும். மாம்பழம் உபயோகித்துப் பார்த்து நீங்களே வித்தியாசத்தை உணருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Amazing Benefits Of Using Mango On Hair!

10 Amazing Benefits Of Using Mango On Hair
Story first published: Thursday, May 18, 2017, 21:00 [IST]