தலைமுடியை அடர்த்தியாக வளரச் செய்யும் ஆளிவிதை ஜெல்!! ஒரு அற்புத தீர்வு!!

Posted By:
Subscribe to Boldsky

தலை முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை என பலவித பாதிப்புகள் வருவது சகஜம். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் விடும்போது முடி பலவீனப்பட்டு உதிர்ந்துவிடுகிறது.

ஆளி விதை முடி உதிர்தலை தடுக்கிறது. கூந்தல் அடர்த்தியை இருமடங்கு அதிகரிக்கச் செய்கின்றது. அதனை தொடர்ச்சியாக நீங்கள் பயன்படுத்தும்போது அதன் அற்புதமான பலனை உங்கள் கூந்தலுக்கு பெறலாம். ஆளிவிதையை எப்படி பயன்படுத்துவது எனக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆளி விதை எண்ணெய் மசாஜ் :

ஆளி விதை எண்ணெய் மசாஜ் :

இது மிக எளிதானது. ஆளி விதை எண்ணெயை எடுத்து லேசாக சூடு செய்து தலை முடிக்கு மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசுங்கள். வாரம் 2

முறை செய்தாக வேண்டும். அப்போதுதான் அதன் பலன் தரும். சில வாரங்களில் முடி அடர்த்தியாவை காண்பீர்கள்.

ஆளிவிதை ஜெல் :

ஆளிவிதை ஜெல் :

தேவையானவை :

ஆளி விதை எண்ணெய் - 1/4 கப்

நீர் - 2 கப்

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

செய்முறை :

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் நீரையும், ஆளிவிதை எண்ணெயையும் கலந்து சூடுபடுத்துங்கள். அது கெட்டியாக ஆகும் வரை கலக்கியபடி சூடு படுத்தவும். பின்னர் எலுமிச்சை சாறு கலக்குங்கள். அது கெட்டியான ஜெல் பதத்திற்கு வரும் வரை அடுப்பில் சிம்மில் வைக்கவும்.

பின்னர் அடுப்பை அணைத்து ஆற வையுங்கள்.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

இந்த ஜெல்லை இரவில் தினமும் படுக்கும்போது தடவி மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்வதால் கூந்தல் வளர்ச்சி தூண்டப்படுகிறது. பாதிப்படைந்த கூந்தல்; குணமாகி முடி அடர்த்தியாவை காணலாம்.

ஆளி விதைப் பொடி :

ஆளி விதைப் பொடி :

ஆளி விதையை வெயிலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை தயிரில் கலந்து தலைமுடிக்கு பேக்காக போடவும். தலைமுடிக்கால்களில் நன்றாக படும்படி தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். வாரம் இருமுறை செய்தால் முடி அடர்த்தி பெறும்.

டயட்டில் எப்படி எடுத்துக் கொள்வது :

டயட்டில் எப்படி எடுத்துக் கொள்வது :

தலைக்கு போஷாக்கு தருவது போல் டயட்டிலும் ஆளி விதையை சேர்த்துக் கொண்டால் வேகமாக முடி வளர்ச்சியை காண்பீர்கள். நீங்கள்ம் சாப்பிடும் உணவிற்கும், முடி வளர்ச்சியில் அதிக பங்கு இருக்கின்றது.

ஆளிவிதை எண்ணெய் :

ஆளிவிதை எண்ணெய் :

ஆளி விதை எண்ணெயை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள். தோசை, குழம்பு போன்றவற்றிற்கு உபயோகப்படுத்தலாம்.

ஆளிவிதைப் பொடி :

ஆளிவிதைப் பொடி :

ஆளிவிதையை பொடியை சூப் செய்து அதனை குடிக்கலாம். அல்லது ஆள்விதைப் பொடியை யோகர்ட்டில் கலந்து சாப்பிடலாம். இவை இரண்டுமே நல்ல பலன்களை தரும் ஆளி விதையை ஊற வைத்து அவித்து சுண்டல் போல் சாப்பிட்டால் உடல் மற்றும் கூந்தல் இரண்டுக்குமே அருமையான பலன்களை தரும்.

ஏன் ஆளிவிதை நல்லது?

ஏன் ஆளிவிதை நல்லது?

விட்டமின் ஈ நிறைந்தது :

கூந்தல் வளர்ச்சிக்கு புரதம் போலவே விட்டமின் ஈ யும் முக்கியம். இது ஈரபதத்தை தக்க வைப்பதால் பொடுகு, அரிப்பிலிருந்து காப்பாற்றுகிறது. அதோடு ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. இந்த விட்டமின் ஈ ஆளி விதையில் அதிகம் உள்ளது.

பிஹெச் சமன் செய்கிறது :

பிஹெச் சமன் செய்கிறது :

கூந்தல் மற்றும் சருமத்திற்கு அமில காரத்தன்மை சம நிலை பெற்று இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கும். அமிலத் தன்மை அதிகம் இருந்தாலோ அல்லது காரத்தன்மை அதிகம் இருந்தாலோ கூந்தல் வளர்ச்சியில் இடையூறுகள் வரும். அந்த பாதிப்பை வராமல் தடுக்க ஆளி விதை உதவி செய்கிறது.

 போஷாக்கு அளிக்கும் :

போஷாக்கு அளிக்கும் :

கூந்தலுக்கு போஷாக்கு அளிக்கிறது. ஊட்டம் இல்லாத கூந்தலே முடி உதிர்வை சந்திக்கின்றது. தினமும் ஆளி விதை எண்ணெயை பயன்படுத்தினால் உங்கள் கூந்தல் நல்ல அடர்த்தியாக வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகமில்லை.

கண்டிஷனராக இருக்கிறது :

கண்டிஷனராக இருக்கிறது :

கூந்தலுக்கு கண்டிஷனர் மிக முக்கியம். அதாவது வெளிப்புற பாதிப்புகளிலிருந்து கூந்தலுக்கு பாதுகாப்பு வளையமாக செயலப்டுவது கண்டிஷனர்தான். அவ்வகையில் ஆளி விதை கண்டிஷனராக செயபடுகிறது. சீகைக்காய், அரப்பு போல் ஆளி விதையும் மிக நல்ல கண்டிஷனர்.

ஸ்கால்ப்பிற்கு நன்மை :

ஸ்கால்ப்பிற்கு நன்மை :

கூந்தலின் சருமப் பகுதி அதாவது ஸ்கால்ப் ஆரோக்கியமாக இருந்தாலே நல்ல கூந்தல் வளர்ச்சி உண்டாகும். ஸ்கால்ப்பிற்கு தேவையான ஊட்டத்தை ஆளி விதை தருகின்றது. இதனால் அரிப்பு, வெள்ளை செதில் உருவாதல், பொடுகு போன்றவற்றை வரவிடாமல் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to use Flax seed oil for long and strong hair

How to use Flax seed oil for long and strong hair