முடி வளர்ச்சியை தூண்டும் கரிசலாங்கன்னி! எளிய முறையில் எப்படி பயன்படுத்தலாம்?

Written By:
Subscribe to Boldsky

கரிசலாங்கன்னி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவது தலைமுடிக்கும், முகப்பொழிவிற்கும் மிக மிக சிறந்தது. இது தங்கம் போன்று மின்னக்கூடிய முகத்தை தரவல்லது. வாரத்தில் குறைந்தது ஒரு முறையாவது இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக ஆரோக்கியமும் அழகும் மேம்படுகிறது.

இந்த பகுதியில் கரிசலாங்கன்னி கீரையை கொண்டு எப்படி இயற்கையான ஹேர் பேக் போடுவது என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொன்னாங்கன்னியின் மகத்துவம் :

பொன்னாங்கன்னியின் மகத்துவம் :

பொன்னாங்கன்னி கீரை முடியின் வேர் பகுதியை உறுதியாக்க உதவுகிறது. இது இயற்கையாகவே முடியை வலிமையடைய செய்கிறது. இது முடி வளர்ச்சியை தூண்டுவதில் முக்கிய பங்குவகிக்கிறது.

நெல்லிக்காய் மற்றும் பொன்னாங்கன்னி :

நெல்லிக்காய் மற்றும் பொன்னாங்கன்னி :

நெல்லிக்காய் முடிக்கும், வேர்ப்பகுதிக்கும் சிறந்த ஒரு மருந்தாக இருக்கிறது. நெல்லிக்காய் சாறு அல்லது நெல்லிக்காய் பவுடரை, ஒரு கைப்பிடி அளவு அல்லது உங்களது கூந்தலுக்கு தேவையான அளவு பொன்னாங்கன்னி இலைகளுடன் சேர்த்து அரைத்து, முடியின் வேர்ப்பகுதிக்கும், முடிக்கும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் தலையை அலச வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை, ரோஸ்மேரி

கற்றாழை, ரோஸ்மேரி

கற்றாழை ஜெல் இரண்டு டீஸ்பூன், பொன்னாங்கன்னி பொடி 3 டீஸ்பூன், 2 சொட்டு ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலைக்கு மாஸ்க் போட்டு ஒரு மணி நேரம் கழித்து, தண்ணீரில் முடியை நன்றாக அலசிக்கொள்ளுங்கள். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வர வேண்டும்.

பயன்கள்

பயன்கள்

கற்றாழை தலையில் உள்ள பொடுகுகளை போக்க உதவுகிறது. இது முடி வளர்ச்சியை தூண்டவும் உதவுகிறது. இதனுடன் பொன்னாங்கன்னியும் சேர்வதால், முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது.

அர்னிகா எண்ணெய் (arnica oil)

அர்னிகா எண்ணெய் (arnica oil)

ஒரு டீஸ்பூன் அர்னிகா எண்ணெய்யை நான்கு டீஸ்பூன் டீஸ்பூன் பொன்னாங்கன்னி சாறுடன் கலந்து தலைக்கு மாஸ்க் போட்டால் முடி மிக நன்றாக வளரும். இது முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to use Bhringraj for Hair Growth

How to use Bhringraj for Hair Growth
Story first published: Thursday, August 17, 2017, 11:02 [IST]
Subscribe Newsletter