For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி உதிர்தலை தடுக்கனும்னா இந்த 7 விஷயங்களை நீங்க வாரம் ஒருமுறை செஞ்சே ஆகனும்!!

ஆரோக்கியமான கூந்தல் கிடைக்க நீங்கள் வாரம் ஒருமுறை கட்டாயம் செய்ய வேண்டிய 8 விஷயங்களை இங்கே தரப்பட்டுள்ளது.

|

முடி வளரனும்னு ஆசை. ஆனா பராமரிக்க மாட்டீங்க. அதுவே வளரனும். உதிரக் கூடாது. அடர்த்தி வளரனும் பொடுகு வரக் கூடாது என்பது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற கதைதான்.

How to reduce hair loss in 8 easy ways

கூந்தல் உதிர்வது இயற்கை என்றாலும் அளவுக்கு அதிகமாக உதிர்வது நமது அஜாக்கிரதையால்தான். கூந்தலை சரியாக கவனிக்காமல் இருக்கும்போது மெல்ல மெல்ல அதனால் உருவாகும் பாதிப்புகள்தான் சொட்டை விழுவது, பொடுகு ஏற்படுவது, முடி மெலிவது என பலப் பிரச்சனைகளை தருகிறது.

முடி உதிர்தலை தவிர்த்தாலே கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் அதற்கு இந்த 8 விஷயங்களை எந்தவித சமரசமின்றி நீங்கள் செய்தாக வேண்டும். . அவை எவையென பார்ப்போமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலைமுடி மசாஜ் :

தலைமுடி மசாஜ் :

மூன்று நாட்களுக்கு ஒருமுறை , நேரமில்லையென்றால் வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு எண்ணெயில் மசாஜ் செய்தாக வேண்டும். இதனால் ஊடம் பெற்றி செல்கள் தூண்டப்படும். முடி உதிர்தல் குறையும்.

கூந்தலுக்கு மாஸ்க்

கூந்தலுக்கு மாஸ்க்

கூந்தலுக்கு ஊட்டம் அளிக்க முட்டை, தேன்,செம்பருத்தி, ஹென்னா தயிர் என ஊட்டமளிக்கும் பொருட்களால் மாஸ்க் போடுதல் அவசியம். வாரம் ஒருமுறை இதனை செய்தால் கூந்தல் அடர்த்தியாவை கண்கூடாக காண்பீர்கள்.

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

க்ரீன் டீ தயார் செய்து கூந்தலுக்கு போடுவதால் கூந்தலுக்கு தேவையான போஷாக்கு கிடைக்கும். கூந்தல் பளபளப்பை பெறுவதால் ஆரொகியமான கூந்தல் கற்றைகளாக திகழும். வாரம் 2இருமுறை செய்தால் மிக அருமையான பலன் கிடைக்கும்.

தூங்கும்போது கொண்டை :

தூங்கும்போது கொண்டை :

தூங்கும்போது கூந்தலை விரித்தபடி தூங்காதீர்கள். இதனால் சிக்கு உண்டாகி விரைவில் கூந்தல் சேதமடையும். தளர்வாக கொண்டை அல்லது சடை போட்டுக் கொள்வதால் கூந்தல் பாதுகாப்பாக இருக்கும் .

பாலயம் என்ற அக்குபஞ்சர் முறை :

பாலயம் என்ற அக்குபஞ்சர் முறை :

சிலருக்கு என்ன செய்தாலும் கூந்தல் வராது . அத்தகைய சமயத்தில் அக்குபஞ்சர் உதவ்யாக இருக்கும். அவற்றால் குறிப்பிட்ட புள்ளிகள் தூண்டப்பட்டு, முடி உதிர்தலை தடுக்க முடியும். முயற்சித்துப் பாருங்கள்.

முதலில் சம்மனம் போட்டு அமர்ந்து இரு உள்ளங்கைகளையும் ஒன்றையொன்று பார்க்கும்படி வையுங்கள். இரு கட்டை விரல்களையும் விட்டுவிட்டு, மற்ற விரல்களை ஹார்டின்போல் மடக்கி, நகங்கள் ஒன்றியயொன்று உரசுங்கள். நல்ல பலனை தரும்.

ரசாயனம் :

ரசாயனம் :

ரசாயன ஷாம்புக்கள், மற்றும் டைகளின் பக்கம் கூட தலைவைத்துப் படுக்காதீர்கள். ஹெர்பலுக்கு மாறினால் உங்கள் கூந்தல் நரைமுடி இல்லாமல் நீண்ட காலம் காப்பாற்றலாம்.

சுடு நீரில் குளித்தல் :

சுடு நீரில் குளித்தல் :

சுடு நீரில் குளிப்பதால் கூந்தல் வேகமாக உதிரும். வறட்சியும் அடையும். இதனால் பலபாதிப்புகள் கூந்தலுக்கு உண்டாகும். ஆகவே சுடு நீரில் குளிப்பதை தவிருங்கள்.

நல்ல உண்வு :

நல்ல உண்வு :

நல்ல உணவுகளும் உங்கள் கூந்தலுக்கு ஊட்டம் தரும். புரத அதிகமுள்ள பாதாம், போன்ற நட்ஸ் வகைகள். பழங்கள் மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் அருமையான கூந்தல் வளத்தை பெறுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to reduce hair loss in 8 easy ways

Tips to reduce hair loss in 8 easy ways
Desktop Bottom Promotion