முடி உதிர்வை தடுத்து நன்றாக வளரப் பயன்படும் 8 எண்ணெய்கள் எவை எனத் தெரியுமா!!

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

இப்பொழுது எல்லாம் நிறைய ஹேர் காஸ்மெட்டிக்ஸ் மற்றும் ஹேர் பியூட்டி பொருட்கள் போன்றவை உள்ளன. இருப்பினும் நாம் நமது பள்ளிப் பருவத்தில் பயன்படுத்திய கூந்தலுக்கான பாரம்பரிய பொருள் கூந்தல் எண்ணெய் ஆகும். எண்ணெய் உள்ள கூந்தல் இப்பொழுது உள்ள பெண்களால் விரும்பப்படுவதில்லை எனவே அவர்கள் தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பதையே நிறுத்தி விட்டனர்.

தலைமுடி உதிர்வதை நிறுத்த நெல்லிக்காயை எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?

இதனால் தான் அந்தப் பெண்களுக்கு நிறைய கூந்தல் பிரச்சினைகள் ஏற்பட்டு வேதனைக்குள்ளாக்குகிறது. ஹேர் ஆயிலிங் என்பது உங்கள் தலைமுடியை பராமரிப்பதற்கான முதல் படியாகும். இந்த முறையை எந்த ஒரு ஹேர் பியூட்டி பொருட்களாலும் ஈடுகட்டவே முடியாது.

8 Different Oils That Promise Healthy And Happy Hair

உங்களது ஹேர் காஸ்மெட்டிக்ஸ் அளவுக்கு இப்பொழுது நிறைய புதுவிதமான கூந்தல் எண்ணெய்கள் உள்ளன. நிறைய வகையான எண்ணெய்கள் உங்கள் கூந்தல் பராமரிப்புக்கு உள்ளன இதில் உங்களுக்கு தகுந்த எண்ணெய்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

நீங்கள் ஆபிஸ் செல்பவராக இருந்தால் இரவே ஆயிலை தலைக்கு தடவி விட்டு காலையில் எழுந்து தலைக்கு குளித்து விட்டு சென்றால் உங்கள் முடி எண்ணெய் பரப்பு இல்லாமலும் நல்ல ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சரி வாங்க இப்போ வெவ்வேறு வகையான கூந்தல் எண்ணெய்களை பற்றியும் அதன் பயன்பாட்டை பற்றியும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.பாம் ஆயில்

1.பாம் ஆயில்

முடி உதிர்தல் உங்களுக்கு முதன்மையான பிரச்சினையாக இருந்தால் பாம் ஆயிலை பயன்படுத்தவும். பாம் ஆயிலில் உள்ள கரோட்டினாய்டு பொருட்களான விட்டமின் ஏ உங்கள் முடியின் வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.

எனவே புது முடி வளர்ச்சிக்கும் பழைய முடி வலிமை பெறுவதற்கும் உதவுகிறது. தலைக்கு ஷாம்பு போட்டு குளிப்பதற்கு முன்னால் இந்த ஆயிலை தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் இதை செய்தால் உங்கள் முடி உதிர்தல் பிரச்சினை தீர்ந்து அடர்த்தியாக வளரும்.

 2.ஆலிவ் ஆயில்

2.ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் இன்றைய பெண்களுடையே இரண்டு பிரச்சினைகளை சரி செய்கிறது. சிக்கலான சுருட்ட முடி களையும் மற்றும் முடிகளின் நுனி பிளவு பட்டதையும் சரி பண்ணுகிறது.

உடனடியான பயன் வேண்டுமென்றால் இந்த ஆயிலை லேசாக சூடாக்கி தலைக்கு குளிப்பதற்கு முன்னால் பயன்படுத்தவும். உங்கள்ளுக்கு சிறிது நேரம் மட்டுமே இருந்தால் அதற்கு சிறந்த வழி ஆலிவ் ஆயில் ஹேர் பேக்கை பயன்படுத்தி பலன் பெறலாம் .

இதற்கு தேவையாக 1 முட்டையின் வெள்ளைகரு, 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் தேன் இவற்றை நன்றாக கலந்து தலைமுடிக்கு பேக் போட்டு சிறிது நேரம் கழித்து பிறகு குளிக்க வேண்டும்

3 . விளக்கெண்ணெய்

3 . விளக்கெண்ணெய்

உங்கள் கனவு அழகான நீண்ட கூந்தல் வேண்டும் என்றால் அதற்கு இந்த எண்ணெய் பயன்படுகிறது. நிறைய எண்ணெய்கள் இருப்பினும் இது தான் முடியின் நீளம் மற்றும் அடர்த்திக்கு பயன்படுகிறது.

இது இயற்கையாகவே ஒட்டும் தன்மை கொண்டு இருப்பதால் தலைக்கு குளித்த பிறகு இதை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இந்த எண்ணெய்யை நேரடியாக பயன்படுத்தினால் உடனடியாக பலனை தருகிறது.

இதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்றவற்றை சேர்த்தும் பயன்படுத்தலாம். இதனால் உங்கள் முடி நீளமாக கருகருவென்று வளரும்.

4 . பாதாம் எண்ணெய்

4 . பாதாம் எண்ணெய்

இனிப்பு சுவையுடைய பாதாம் எண்ணெய் முடிக்கு மிகவும் சிறந்தது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புரோட்டீன்கள், விட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்றவை பொடுகு, பிளவுபட்ட கூந்தல் நுனிகளில் உள்ள பிளவு, முரடான கூந்தல் போன்றவற்றை சரியாக்குகிறது.

நிறைய பெண்களுக்கு இதன் பயன் கிடைக்காமல் போவதற்கு காரணம் தலைக்கு குளிப்பதற்கு முன் இந்த ஆயிலை பயன்படுத்துவது தான்.

இந்த ஆயிலின் முழுமையான பலன் கிடைக்க இதை தலைக்கு குளித்த பிறகு தான் பயன்படுத்த வேண்டும். தலைமுடி ஈரமாக இருக்கும் போது இந்த ஆயிலை தடவ வேண்டும்.

அப்பொழுது தான் ஈரமான கூந்தலில் ஏற்படும் கூந்தல் மடிப்புகளை சரிசெய்து அழகான மடிப்புகள் இல்லாத நீண்ட கூந்தலை தரும்.

5 . தேங்காய் எண்ணெய்

5 . தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் உங்கள் கூந்தலுக்கு முடிவே இல்லாத பயனை தருகிறது. இதை நிறைய முறைகளில் பயன்படுத்தலாம். நீங்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆயிலை பயன்படுத்தவும்.

மேலும் உருகிய நிலையில் உள்ள தேங்காய் எண்ணெய்யை தான் உங்கள் கூந்தலுக்கு பயன்படுத்த வேண்டும். நன்றாக உங்கள் தலையில் எல்லா இடங்களிலும் படும் படி மசாஜ் செய்து பிறகு சீப்பை கொண்டு தலை வாரிக் கொள்ளுங்கள்.

இதை தினந்தோறும் செய்தால் சிக்கில்லாத அழகான கூந்தலை நீங்கள் பெறலாம்.

6. கடுகு எண்ணெய்

6. கடுகு எண்ணெய்

இந்த வெஜிடபிள் ஆயில் கடுகு விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.முடி வளர்ச்சியை தூண்டுதல், முடிக்கு அடர்ந்த கருப்பு நிறம் கொடுத்தல், இள நரையை தடுத்தல் போன்றவற்றை செய்கிறது. இந்த ஆயிலுடன் சில சமையல் பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் அதிகமான பலன்கள் உங்கள் தலைமுடிக்கு கிடைக்கும்.

7.சூரிய காந்தி எண்ணெய்

7.சூரிய காந்தி எண்ணெய்

உங்கள் கிச்சனில் பயன்படுத்தப்படும் சூரிய காந்தி எண்ணெய்யை ஒரு பாட்டில் உங்கள் பாத் ரூமுக்கு கொண்டு செல்லுங்கள். ஏனெனில் இதன் பயன்கள் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது.

இது கூந்தலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நல்ல தடினமான முடியையும் தருகிறது. ஒரு க்ளாஸ் பெளலில் சூரிய காந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து மைக்ரோ வேவ் ஓவனில் வைத்து சூடுபடுத்தி தலைக்கு தேய்த்தால் நல்ல பலனை காணலாம்.

8.திராட்சை விதை எண்ணெய்

8.திராட்சை விதை எண்ணெய்

திராட்சை விதை எண்ணெய் உங்கள் தலைமுடியில் உள்ள பொடுகுக்கு பயன்படுகிறது. மேலும் இது முடி உதிர்தல் மற்றும் முடி இழப்பு பிரச்சினையை சரி செய்கிறது.

இதை தொடர்ந்து பயன்படுத்தினால் நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல பலன்கள் கிடைக்கும். நிறைய பேர் தவறாக புரிந்து கொள்ளவது என்னவென்றால் திராட்சை விதை ஆயில் என்பது திராட்சை விதை எக்ஸ்ட்ராக் என்பது தான்.

ஆனால் அது முற்றிலும் தவறானது நீங்கள் மார்க்கெட்டில் திராட்சை விதை எண்ணெய் என்று கேட்டு வாங்கி பயன்படுத்த வேண்டும்.

என்னங்க இந்த 8 எண்ணெய்களில் உங்களுக்கு தகுந்த எண்ணெய்யை தேர்ந்தெடுத்து பயன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Different Oils That Promise Healthy And Happy Hair

8 Different Oils That Promise Healthy And Happy Hair
Story first published: Friday, July 7, 2017, 9:00 [IST]