நரை முடி இருக்கா? எளிய முறையில் கருப்பாக மாற்றும் பாட்டி வைத்தியங்கள்!!

Written By:
Subscribe to Boldsky

பொதுவாகவே, தலைக்கு அடிக்கடி கலரிங் பண்ணுகிறவர்களுக்கும் ஹேர்டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு, வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பல பிரச்னைகள் ஏற்படும். இந்த கூந்தல் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு உண்டு.

Effective Granny remedies to get rid of Grey hair

கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் முடி இயல்பு நிலைக்கு வரவேண்டும் அதற்கான சிகிச்சை இது. முடி உதிர்தல் நின்று கருமையாகவும் வளர் இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடுக்காய் மற்றும் தே நீர் :

கடுக்காய் மற்றும் தே நீர் :

டீ தூளில் கடுக்காய் தோலை சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள். பின் அதன் டிகாஷனை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள். முதல் தடவை டிகாஷனை மட்டும் தேய்த்துக் குளியுங்கள்.

இதுபோல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையாகவும் மாறும். டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள்.

இயற்கை கலரிங் முறை:

இயற்கை கலரிங் முறை:

சீகைக்காயுடன் ஒரு பீட்ரூட்டின் சாறை கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள். இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து பாருங்கள். மூன்றே மாதத்துக்குள் உங்கள் கூந்தல் மினுமினுப்பதை உணர்வீர்கள். அதன் பிறகு ஹேர்டையோ, கலரிங்கோ செய்ய வேண்டிய அவசியமே வராது.

வெள்ளை மிளகு :

வெள்ளை மிளகு :

தேங்காய்க் கீற்று 2

வெள்ளைமிளகு 1 டீஸ்பூன்

இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லை

 கூந்தல் கருகருவென்று வளருவதற்கு:

கூந்தல் கருகருவென்று வளருவதற்கு:

இளம் மருதாணி இலை 50 கிராம்

நெல்லிக்காய் கால் கிலோ

வேப்பங்கொழுந்து 2 கிராம்

செய்முறை :

செய்முறை :

மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்த தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் கருகருவென வளரத் தொடங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Effective Granny remedies to get rid of Grey hair

Effective Granny remedies to get rid of Grey hair
Please Wait while comments are loading...
Subscribe Newsletter