நரைமுடியை கருப்பாக மாற்றும் அற்புத மூலிகை கற்பூர வல்லி!! ட்ரை பண்ணுங்க!! அப்றம் சொல்லுங்க!!

Posted By:
Subscribe to Boldsky

ரசாயனங்களால் நரைமுடியை கருமையாக்க முடியுமென்றால், நமது இயற்கை மூலப்பொருட்களாலும் முடியும். ஆனால் நமக்குதான் பொறுமை இருப்பதில்லை.

நரைமுடிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மிக முக்கிய காரணம் உபயோகப்படுத்தும் ரசாயன ஷாம்புக்கள்ள், ஸ்ட்ரெஸ் போன்றவைகளை கூறலாம்.

Best treatments for grey hair that are really work out

நரைமுடி வந்துவிட்டதே என கவலைக் கொள்வதை விட, அதனை உடண்டியாக மறைக்க வேண்டுமே என கெமிக்கல் டைக்களை தேடிப் போகாதீர்கள். உங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி இதுவாக இருக்கும்.

ஆயுர்வேதத்தில் நரைமுடிக்கான தீர்வுகளுக்காக ஆராய்ச்சிகள் இன்றும் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் மிகவும் பலனளிக்கும் குறிப்புகளை இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. பயன்படுத்தி வெற்றியும் காணுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோஸ்மெரி மற்றும் கற்பூர வல்லி :

ரோஸ்மெரி மற்றும் கற்பூர வல்லி :

தேவையானவை :

நீர் - 2 கப்

ரோஸ்மெரி - 5 டேபிள் ஸ்பூன்

கற்பூரவல்லி - 5 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

நீரை நன்றாக கொதிக்க வையுங்கள். கொதிக்கும்போது, ரோஸ்மெரி இலை மற்றும் கற்பூரவல்லி இலைகளை போடவும். 2 நிமிடங்களில் நன்றாக கொதி வந்த பின் அடுப்பை அணைக்கவும். இந்த நீரை 2-3 மணி நேரம் அப்படியே விடவும்.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

இந்த நீரை உங்கள் முடி முழுவதும் தடவவும். 2 மணி நேரம் கழித்து விருப்பமிருந்தால் தலைக்கு குளிக்கலாம். இல்லையென்றால் அப்படியே விட்டுவிடலாம். இந்த முறையை வாரம் 3 முறை பயன்படுத்துங்கள். நல்ல பலன் தரும். நரை முடிக்கு மட்டுமல்லா முடி உதிர்விற்கும் நல்ல பலன்களை தரும்.

 வால் நட் இலை டை :

வால் நட் இலை டை :

வால் நட் இலைகள் அழகு சாதன துறையில் டை மற்றும் ஷாம்பூ தயாரிக்க பயன்படுகிறது. இந்த இலைகளிலுள்ள ஜக்லோன் என்ற மூலப் பொருள் டையாக பயன்படுகிறது.

தேவையானவை :

நீர் - 11/2 கப்

வால் நட் இலைகள் - 6 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

நீரை கொதிக்கவிடுங்கள். பின்னர் வால் நட் இலைகளை போடவேண்டும். 2-3 நிமிடங்கள் சிம்மில் வைத்திவிட வேண்டும். பின்னர் அணைத்து 4 மணி நேரம் அப்படியே மூடி

வைக்க வேண்டும். அதன் பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

இந்த நீரை உங்கள் முடி முழுவதும் தடவவும். 2 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். தினமும் செய்தல நல்ல ரெசல்ட் கிடைக்கும்.

 ஆவாரம் பூ, கரிசலாங்கண்ணி :

ஆவாரம் பூ, கரிசலாங்கண்ணி :

ஆவாரம்பூ, இலை - கைப்பிடி அளவு

வெட்டி வேர் - சிறிது அளவு.

மஞ்சள் கரிசலாங்கண்ணி - 1 கைப்பிடி

மருதாணி இலை - 1 கைப்பிடி

ஆவாரம்பூ - அரை கைப்பிடி

தேங்காய் எண்ணெய் - அரை லிட்டர்

 தயாரிக்கும் முறை

தயாரிக்கும் முறை

ஆவாரம் பூ மற்றும் இலை இவற்றை நிழலில் காயவைத்துக்கொள்ளுங்கள். இத்துடன் கரும் வெட்டிவேர் இவற்றை தேங்காய் எண்ணெயில் ஊற விடுங்கள். 3 நாட்கள்

அப்படியே இருக்க வேண்டும்.

பின் மஞ்சள் கரிசலங்கண்ணி மருதாணி இலை, ஆவாரம் பூ இலை, வல்லாரை இரண்டு கைப்பிடி அளவு, இவைகளை நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது ஊற வைத்த தேங்காய் எண்ணெயில் இந்த பேஸ்ட் கலவை கலந்து எண்ணெய் சட்டியில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து காய்ச்சுங்கள். சலசலப்பு அடங்கியவுடன் அணைத்துவிடுங்கள்.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

இந்த எண்ணெயை இரவு தூங்கும்போது தலையில் தடவிக் கொண்டு படுங்கள். நிச்சயம் பலன் தரும். நரைமுடியும் மறையும். கூந்தலும் நீண்டு வளரும்.

 காபிப் பொடி டை :

காபிப் பொடி டை :

காபிக் கொட்டைகள் இயற்கையாக கூந்தலுக்கு நிறம் தரும். கடைகளில் வெறும் காபிக் கொட்டைகளை வாங்கி ஃப்ரெஷாக அரைத்து பயன்படுத்துங்கள்.

தேவையானவை :

நீர் - 2 கப்

காபித் தூள் - 6 டேபிள் ஸ்பூன்.

எலுமிச்சை சாறு - 1 மூடி

 தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

நீரை நன்றாக கொதிக்க வைத்து அவற்றில் காபிப் பொடியை போட்டு திக்கான நிடாஷன் தயாரித்துக் கொள்ளுங்கள். அதனை ஆற வைத்து அதில் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

இந்த டிகாஷனை உங்கள் முடி முழுவதும் தடவவும். ஒரு ஷவர் கேப் போட்டுக் கொள்ளுங்கள். 3 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். வாரம் 3 முறை செய்து பாருங்கள்.

 கருவேப்பிலை :

கருவேப்பிலை :

கருவேப்பிலைதானே ரிசல்ட் தருமா என யோசிக்காதீர்கள். இந்த முறையில் பயன்படுத்திப் பாருங்கள். கருவேப்பிலை தொடர்ந்து பயன்படுத்தினால் நரைமுடி வளர்ச்சி தாமதமாகும்.

 தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

நீரை கொதிக்க வைத்து அதில் கருவேப்பிலைகளை போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். அதனை பின் மூடி வைத்து குளிர்ச்சியாகும் வரை வைத்திடுங்கள். பின்னர் அதனை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

 பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

இந்த நீரை உங்கள் முடி முழுவதும் தடவவும். அப்படியே விட்டு விடலாம். தலைக்கு குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தினமும் செய்தால் நல்ல ரெசல்ட் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best treatments for grey hair that are really work out

Best treatments for grey hair that are really work out
Story first published: Monday, November 6, 2017, 8:45 [IST]
Subscribe Newsletter