கூந்தல் வேகமாய் வளர என்ன செய்ய வேண்டும்??

Posted By: Hemalatha V
Subscribe to Boldsky

ஆறடி கூந்தல் பெண்களுக்கு அழகு. ஆனால் இப்போதெல்லாம் ஒரு அடிக் கூட வளரவில்லை என்று புலம்புவர்கள் ஏராளம். காரணம் மாசுப்பட்ட சுற்றுச் சூழ் நிலை, நீர், உணவு, மன அழுத்தம், கெமிக்கல் கலந்த ஷாம்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.

Useful tips to grow hair faster

முந்தைய தலைமுறை போல பராமரிப்பது இப்போது குறைவாகிவிட்டது. அடர்த்தி குறைந்து, நரை முடி அதிகரித்து, வறண்ட கூந்தலாகி போக சரியான பராமரிப்பே இல்லாதது காரணம். கூந்தல் வேகமாக வளர என்னென்ன செய்ய வேண்டும் என இங்கே குறிப்பிட்டுள்ளது. பாருங்கள்.

கூந்தல் ட்ரிம் செய்ய வேண்டும் :

அதிகப்படியான மாசினாலும் ,கடினத்தன்மை கொண்ட நீரினாலும், கூந்தலின் நுனி வறண்டு பிளவு படும். பின்னர் வேகமாய் முடி உதிர்ந்துவிடும். இதுவே கூந்தல் அடர்த்தியில்லாமல் போவதற்கு காரணம். 6 மாதங்களுக்கு ஒரு முறை கூந்தலின் நுனியை ட்ரிம் செய்தால் முடி உதிர்தலை தடுக்கலாம்.

Useful tips to grow hair faster

சீப்பினால் அழுந்த சீவுங்கள் :

தினமும் இரு வேளை சீப்பினால் ஸ்காலிப்பில் அழுந்த சீவ வேண்டும். இது கூந்தலின் வேரிலுள்ள செல்களை தூண்டும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். புதிதான மயிர்கால்கள் வளரும்.

அதேபோல் கூந்தல் ஈரமாக இருக்கும்போது, வலுவிழந்து இருக்கும். அந்த சமயங்களில் சீப்பினால் வாரக்கூடாது. இதனால் கூந்தல் வேகமாய் உதிரும்.

Useful tips to grow hair faster

சத்து நிறைந்த உணவு சாப்பிட வேண்டும் :

சரியான நேரத்திற்கு எல்லா ஊட்டச் சத்தும் நிறைந்த உணவினை சாப்பிட வேண்டும். புரொட்டின் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதால் கூந்தலுக்கு போஷாக்கு வேகமாய் கிடைக்கும்.

Useful tips to grow hair faster

ஹேர் ட்ரையர் உபயோகிப்பது கூடாது :

அதிக வெப்பம் தரும் ஹேர் ட்ரையர் கூந்தலை வேகமாக பலமிழக்கச் செய்யும். கூந்தல் உதிரும். இயற்கை முறையில் கூந்தலை காய வைப்பதே நல்லது.

Useful tips to grow hair faster

நிறைய நீர் குடிக்க வேண்டும் :

உடலில் நீர்சத்து குறைவாக இருக்கும்போது, கூந்தல் உதிரும். தேவையான அளவு நீர் குடித்தால், கூந்தலை பாதுகாக்கும் எண்ணெய் சுரப்பி நன்றாக வேலை செய்யும். இதனால் தொற்றுக்கள் கூந்தலில் ஏற்படாமல் இருக்கும்.

கூந்தலுக்கு போஷாக்கு :

கூந்தலுக்கு தேவையான சம சத்துக் கொண்ட உணவினை உண்பது போல, வெளியிருந்தும் போஷாக்கினை தர வேண்டும். முட்டை, தேன், பால் தயிர் ஆகியவை கூந்தலுக்கு வளம் சேர்ப்பவை. இவற்றை வாரம் ஒரு முறை உபயோகித்தால் மின்னும் கூந்தல் கிடைக்கும்.

Useful tips to grow hair faster

ஆயில் மசாஜ் :

Useful tips to grow hair faster

இது மிகவும் முக்கியம். வாரம் இருமுறை எண்ணெயால் மசாஜ் செய்வதால் கூந்தலின் வேர்க்கால்கள் தூண்டப்படுகின்றன. ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை தலைபகுதியில் குளிர்ச்சியை ஏற்படுத்தி, கூந்தல் வளர உதவிபுரிகின்றன.

English summary

Useful tips to grow hair faster

Useful tips to grow hair faster
Story first published: Wednesday, June 22, 2016, 9:38 [IST]
Subscribe Newsletter