For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தயிரை தலைக்கு பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனத் தெரியுமா?

தயிரை தலைக்கு போடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று பலர் சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனத் தெரியாது. இங்கு அந்த நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

உடல் ஆரோக்கியத்திற்கு தயிர் மிகவும் நல்லது என்பது அனைவருக்குமே தெரியும். அத்தகைய தயிர் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, அழகை மேம்படுத்தவும் உதவும். குறிப்பாக தயிர் தலைமுடிக்கு ஊட்டத்தை வழங்கி, முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

Things You Need To Know Before Using Yogurt On Your Hair

தயிரை தலைக்கு போடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று பலர் சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனத் தெரியாது. இங்கு தயிரை தலைக்கு பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, தலைக்கு தயிரை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் நன்மைகள் கிட்டும் எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்டிஷனர்

கண்டிஷனர்

தயிர் மிகவும் சிறப்பான கண்டிஷனர். அதற்கு தயிரை தலையில் தடவி, ஷவர் கேப்பை தலைக்கு போட்டு, 30 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்வதால், தலைமுடி வறட்சியின்றி கண்டிஷனர் பயன்படுத்தியது போன்று இருக்கும்.

மென்மையான தலைமுடி

மென்மையான தலைமுடி

தயிருடன் சிறிது தேன் கலந்து, தலையில் தடவி 15-20 நிமிடம் ஊறு வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இதனால் தலைமுடி மென்மையாக இருக்கும்.

மின்னும் தலைமுடி

மின்னும் தலைமுடி

தலைமுடி மின்ன வேண்டுமானால், தயிருடன் மயோனைஸ் சேர்த்து கலந்து, தலைமுடியின் முனை வரை நன்கு தடவி, 1/2 மணிநேரம் கழித்து நீரில் அலச வேண்டும்.

முடி வெடிப்புக்களைத் தடுக்கும்

முடி வெடிப்புக்களைத் தடுக்கும்

முடி வெடிப்புக்கள் அதிகம் இருந்தால், அது முடியின் வளர்ச்சியைத் தடுக்கும். ஆனால் தயிரை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடியில் வெடிப்புக்கள் இல்லாமல், முடி நன்கு வலிமையுடன் இருக்கும்.

பொடுகைப் போக்கும்

பொடுகைப் போக்கும்

தலையில் பொடுகு அதிகம் உள்ளதா? அப்படியெனில் தயிருடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து அலசுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

தலைமுடி உதிர்வது குறையும்

தலைமுடி உதிர்வது குறையும்

தயிருடன் சிறிது கறிவேப்பிலையை அரைத்து கலந்து, தலைக்கு தடவ, தலைமுடி உதிர்வது முற்றிலும் குறையும்.

தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்

தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்

சிறிது தயிருடன் தேங்காய் எண்ணெய் மற்றும் செம்பருத்திப் பூவின் இதழ்களை சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 1-2 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Need To Know Before Using Yogurt On Your Hair

Yogurt not only makes your food delectable, but also makes your hair lustrous. Here are some things you need to know before you start using yogurt on your hair.
Desktop Bottom Promotion