For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் தங்கள் தலைமுடிக்கு செய்யும் 7 மோசமான விஷயங்கள்!

By Maha
|

பலரும் தினமும் வருத்தப்படும் ஓர் விஷயங்களில் ஒன்றாக தலைமுடி உள்ளது. ஆம், நிறைய மக்கள் தங்களது தலைமுடியைக் குறித்து அதிக வருத்தத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக இன்றைய ஆண்கள் பெண்களை விட அதிக அளவில் தலைமுடியில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையானது ஆண்கள் தங்கள் தலைமுடிக்கும் செய்யும் சில மோசமான விஷயங்கள் தான். மேலும் ஆண்களுக்கு விரைவில் வழுக்கை தலை ஏற்படுவதற்கும் இவையே காரணமும் கூட.

இங்கு ஆண்கள் தங்கள் தலைமுடிக்கு செய்யும் 7 மோசமான விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து திருத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறு #1

தவறு #1

நிறைய ஆண்கள் சீக்கிரம் குளிக்கிறேன் என்ற பெயரில், தலைக்கு ஷாம்பு போட்டு நீரில் சரியாக அலசாமல், நுரை போகும் அளவில் மட்டும் தலையை அலசிவிட்டு வருவார்கள். இப்பழக்கம் இப்படியே நீடித்தால், ஷாம்புவில் உள்ள கெமிக்கல் முடி மற்றும் ஸ்கால்ப்பில் படிந்து, ஆரோக்கியத்தைப் பாதித்து, முடி உதிர வழி செய்யும்.

தவறு #2

தவறு #2

பல முறை ஆண்கள் தலைக்கு குளித்த பின், தலைமுடி காய்வதற்கு முன்பே ஹேர் ஸ்டைலிங் ஜெல்லைத் தடவுகின்றனர். இப்படி ஈரமான முடியில் ஜெல்லைத் தடவினால், உலர்ந்த பின் அது உங்களுக்கு மோசமான தோற்றத்தைத் தரும்.

தவறு #3

தவறு #3

தற்போது ஆண்கள் தங்களது வழுக்கைத் தலையை தலையில் உள்ள இதர முடியைக் கொண்டு மறைக்க முயலுகின்றனர். இப்படி செய்வதால் ஆண்களின் தோற்றம் மேன்மேலும் தான் மோசமாக காட்சியளிக்கும்.

தவறு #4

தவறு #4

சில நேரங்களில் ஆண்கள், ட்ரெண்டிங் ஹேர் ஸ்டைல் என்று தங்களுக்கு பொருத்தமில்லாத ஹேர் ஸ்டைலைப் பின்பற்றுவார்கள். இப்படி ஒருவர் தங்களுக்கு பொருத்தமில்லாத ஹேர் ஸ்டைலைப் பின்பற்றினால், அது அவரது ஒட்டுமொத்த அழகையும் மோசமாக வெளிக்காட்டும்.

தவறு #5

தவறு #5

சில ஆண்கள் தலைமுடிக்கு அதிகமான அளவில் கெமிக்கல் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். இப்படி கெமிக்கல் பொருட்களை அதிகமாக பயன்படுத்துவதால், தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, தலைமுடி உதிர்ந்து வழுக்கைத் தலையைப் பரிசாகப் பெறக்கூடும். எனவே இச்செயலை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.

தவறு #6

தவறு #6

ஆண்கள் தங்களுக்கு முடி சிறியதாக இருப்பதால், விரைவில் உலர்ந்துவிடும் என்று தினமும் தலைக்கு குளிப்பார்கள். ஆனால் இப்படி தலைக்கு தினமும் குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள ஈரப்பசை முற்றிலும் வெளியேறி, முடி அதிகம் வறட்சியடையக்கூடும்.

தவறு #7

தவறு #7

ஆண்கள் தலைக்கு குளித்த பின் மற்றும் தலைக்கு குளிக்கும் போது, அழுக்கு போக வேண்டுமென்று விரலால் நன்கு தேய்ப்பார்கள். இப்படி ஈரமான முடியை கடினமாக தேய்த்தால், மயிர்கால்கள் பாதிக்கப்பட்டு, அதனால் முடி உதிர்வை சந்திக்கக்கூடும். எனவே எப்போதும் ஈரமான முடியை கடினமாக தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Worst Things Men Can Do To Their Hair

If you are a man who wants to know about the best hair care tips for a well-groomed look, then do not make these hair mistakes...
Story first published: Friday, May 20, 2016, 12:01 [IST]
Desktop Bottom Promotion