தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க இஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உங்களுக்கு முடி வளரவே மாட்டீங்குதா? இதற்காக எத்தனையோ எண்ணெய்கள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். கெமிக்கல் கலந்த செயற்கை மருந்துகளின் மூலம் தலைமுடியை வளர்க்க நினைத்தால் முடியுமா? இயற்கை வழியை நாடுங்கள், இதனால் நிச்சயம் தலைமுடி நன்கு நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

Ginger Hair Mask Recipe To Fasten Your Hair Growth!

இதுவரை நாம் பூண்டு, கறிவேப்பிலை போன்றவற்றை எப்படி பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, முடி நன்கு வளரும் என்று பார்த்தோம். இப்போது இஞ்சியை எப்படி பயன்படுத்தினால் தலைமுடி வளரும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெப் #1

ஸ்டெப் #1

முதலில் இஞ்சியை சிறிது எடுத்து தோலுரித்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி சாறு எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2

ஸ்டெப் #2

பின் அவகேடோ பழ எண்ணெயை 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, இஞ்சி சாற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #3

ஸ்டெப் #3

பின்பு அத்துடன் 1/2 கப் தேங்காய் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனால் தேங்காய் பாலில் உள்ள லாரிக் அமிலம் பாதிக்கப்பட்ட முடியின் முனைகளை சரிசெய்யும், ஸ்கால்ப்பை சுத்தம் செய்யும் மற்றும் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும்.

ஸ்டெப் #4

ஸ்டெப் #4

பின் அதில் 10 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி, ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்களை நீக்கி சுத்தம் செய்யும்.

ஸ்டெப் #5

ஸ்டெப் #5

அடுத்து தலைமுடியில் உள்ள தேவையற்ற சிக்கை சீப்பு கொண்டு எடுத்துவிட வேண்டும்.

ஸ்டெப் #6

ஸ்டெப் #6

பின் தயாரித்து வைத்துள்ள கலவையை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 5-10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

ஸ்டெப் #7

ஸ்டெப் #7

45 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு போட்டு, தலைமுடியை அலச வேண்டும்.

ஸ்டெப் #8

ஸ்டெப் #8

இறுதியில் துணியால் தலையில் உள்ள அதிகப்படியான நீரை எடுக்க வேண்டும். முக்கியமாக அப்படி செய்யும் போது துணியால் தலைமுடியைத் தேய்க்கக் கூடாது. அது தலைமுடியில் வெடிப்பை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ginger Hair Mask Recipe To Fasten Your Hair Growth!

Make your hair twice as thicker and stronger with this ginger hair mask. Here is a step-by-step method to to use ginger for hair growth.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter