For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பியூட்டி பார்லர் போகாமலே உங்கள் கூந்தல் ஸ்ட்ரெய்ட்டனிங்க் செய்ய வேண்டுமா? இத படிங்க!

By Hemalatha
|

சுருட்டை முடி, வளைந்த முடி, அலை போல முடி ஆகியவைகள் அழகாக இருந்தாலும், சில சமயங்களில் நேராய் குதிரை வால் போல் நீண்டு இருந்தால் அது தனி அழகை கொடுக்கும் என்பது உண்மைதான்.

Excellent tips for natural hair straightening

ப்யூட்டி பார்லரில் போனால் சில ஆயிரங்களை செலவழிக்காமல் இதை சாத்தியமாக்க முடியாது. ஆனால் வீட்டிலேயே பைசா இல்லாமல், உங்களால் உங்கள் முடியை அற்புதமாக நேர்படுத்திக் கொள்ளமுடியும் உங்களுக்கு தெரியுமா?

இங்கே சொல்லும் சில குறிப்புகளை கொஞ்சம் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு உபயோகமானதாய் இருக்கும்.

பப்பாளி வாழைப்பழ பேக் :

பழங்களைக் கொண்டு உபயோகப்படுத்தும் இந்த பேக் இயற்கையான ஸ்ட்ரெயிட்டனிங்க்கு மிக அருமையான வழி என்பது தெரியுமா?

தேவையானவை :

வாழைபழம் மசித்தது -அரைக் கப்
பப்பாளி- அரைக் கப்
தேன் - அரை ஸ்பூன்

பழங்கள் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதில் அரை ஸ்பூன் தேனை சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளுங்கள். இப்போது இவற்றை தலையில் ஸ்கால்ப்பிலிருந்து நுனி வரை முழுவதும் தடவி மாஸ்க் போல் போட்டுக் கொள்ளுங்கள்.

நன்றாக 2 மணி நேரம் காய விடுங்கள். பிறகு ஷாம்புவை போட்டு அலசவும்.
உங்கள் முடியை நேர்படுத்த மிக அருமையான வழி உபயோகப்படுத்திப் பாருங்கள்.

தேன் கரைசல் :

பால் - ஒரு கப்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
ஸ்ட்ரா பெர்ரி பழம் மசித்தது - சில

பால் தேன் ஆகியவற்றை கலந்து அவற்றில் மசித்த ஸ்ட்ரா பெர்ரி பழங்களையும் சேருங்கள். இப்போது நன்றாக மூன்றையும் கலந்து, தலையின் வேர்கால்களிலிருந்து, கூந்தலைன் நுனி வரை தடவுங்கள்.

இப்போது 2 மணி நேரம் அப்படியே காய விடுங்கள். பிறகு மைல்டான ஷாம்புவை போட்டு குளியுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் கூந்தல் அழகாய் பட்டுப் போல், நேராக இருக்கும்.

எண்ணெய் கலவை :

ஆலிவ் எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை நன்றாக கலந்து, சூடு படுத்தவும். பிறகு சூடான எண்ணெயை தலையின் உச்சியிலிருந்து, நுனி வரை கூந்தலில் தடவி விடுங்கள். ஒரு நாள் முழுவதும் அப்படியே விடவேண்டும்.

எண்ணெய் உங்கள் கூந்தலில் நன்றாக உறிஞ்சி, ஒட்டிக் கொள்ளும். பின் செறிவு குரைந்த ஷாம்புவைப் போட்டு குளிக்கவும். இவை கூந்தலுக்கு தேவையான போஷாக்கு அளிப்பதோடு, நேர் செய்யும். கூந்தலும் அழகாய் இருக்கும்.

சோற்றுக் கற்றாழை பேக் :

இது மிகச் சிறந்த ஸ்ட்ரெயிட்டனர்.சோற்றுக் கற்றாழையின் சதைப் பகுதியை அரைக் கப் ஆலிவ் எண்ணையுடன் கலந்து கொள்ளுங்கள்.இதனை தலையின் ஸ்கால்ல்பிலிருந்து கூந்தலின் நுனி வரை தடவி நன்றாக காய விடுங்கள்.

இரண்டு மணி நேரத்திற்கு பின், தலையை சிறிது ஷாம்பு உபயோகப்படுத்தி அலாசுங்கள். சோற்றுக்கற்றாழை உங்கள் கூந்தலுக்கு மிகச் சிறந்த தோழி. பொடுகு, தொற்று, முடி உதிர்தல் ஆகியவ்ற்றிலிருந்து பாதுகாக்கும்.

மேலும் இது முடியை நேர்படுத்தும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை. இதனை உபயோகப்படுத்தி பாருங்கள். நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்.

கூந்தலை நேர்படுத்த உதவும் ஹேர்அயர்ன் மற்றும் பார்லரில் செயும் ஸ்ட்ரெயிட்டனிங்க் இரண்டுமே நல்லதல்ல. கூந்தலை பாதிப்பதோடு, வேர்க்கால்களின் உள்ளே சென்று அங்கேயே முடிகளை பலமிழக்கச் செய்யும்.

கொத்து கொத்தாக முடிகள் உதிரும். சருமத்தை நிச்சயம் பாதிக்கச் செய்யும். சிலருக்கு முடி வளர்வது கூட நின்று போய்விடும்.

ஆனால் இயற்கை வழியை பின்பற்றினால், நாளுக்கு நாள் கூந்தல் பலம் பெற்று, போஷாக்கான பட்டு போன்ற நேர்த்தியான கூந்தல் கிடைப்பது உறுதி. நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

English summary

Excellent tips for natural hair straightening

Excellent tips for natural hair straightening
Desktop Bottom Promotion