உங்கள் கூந்தலைக் காப்பாற்றும் சமையல் சோடா ஷாம்பூவை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Written By: Hemalatha
Subscribe to Boldsky

தலை முடி உதிர்தல் என்பது 'தலை'யாய பிரச்சனை. மன அழுத்தம், வேலை அழுத்தம், மாசு, தூசு, ஆகியவைகளால் கூந்தல் பிரச்சனைகள் உருவாகிறது.

முக்கியமாய் ஆண்களுக்கு மரபு ரீதியாகவே பெண்களைக் காட்டிலும் எளிதில் முடி உதிர்ந்து சொட்டை ஆகிவிடும். இந்த பிரச்சனைகளிலிருந்து காப்பாற்ற, நீங்கள் உங்கள் கூந்தலை வாரம் தவறாமல் பராமரிக்க வேண்டும்.

Baking soda shampoo for long hair

உங்கள் சமையலறையில் இருக்கும் நிறைய பொருட்கள் உங்கள் அழகுக் குறிப்பில் இடம்பெற்றுள்ளது என்பது தெரிந்த விஷயம்தாமன். ஆனால் எதை எவ்வாறு உபயோகித்து பயன் பெறலாம் எனத் தெரிந்தால் ,உங்கள் அழகு உங்களை விட்டு எங்குமே போகாது.

சமையல் சோடா சரும மற்றும் கூந்தல் பராமரிப்பில் அற்புத பலன்களை தருகிறது. அவ்வகையில் இன்று சமையல் சோடாவினைக் கொண்டு செய்யும் ஷாம்புவைப் பற்றி காண்போம்.

இது தலையினில் ஏற்படும் முக்கிய பிரச்சனையான பொடுகினை கட்டுப்படுத்தும். மேலும் தலைமுடிக்கு போஷாக்கு அளித்து, மிளிரச் செய்யும். எப்படி செய்வது என பார்ப்போம்.

Baking soda shampoo for long hair

செய்முறை :

சமையல் சோடாவை நீருடன் 1:3 என்ர விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதாவது ஒரு டேபிள் ஸ்பூன் சமையல் சோடா எடுத்தால் அதனுடன் 3 டேபிள் ஸ்பூன் நீரை கலக்க வேண்டும்.

இது போல் உங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு 1:3 என்ற விகிதத்தில் சமையல் சோடவை நீருடன் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனுடன் 1 ஸ்பூன் கேஸ்டைல் நீர்த்த சோப்புவை கலக்க வேண்டும். கேஸ்டைல் நீர்த்த சோப் என்பது ஆலிவ் மற்றும் சில மூலிகைகளால் ஆன ஷாம்பு.இது நுரையை தரும்.

இப்போது இந்த கலவையை ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு விரும்பும் நேரத்தில் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இது கூந்தலை மின்னச் செய்யும். முடி உதிர்வதை தடுக்கும்.

Baking soda shampoo for long hair

பொடுகு தொல்லை நீங்க :

ஒரு ஸ்பூன் சமையல் சோடாவில் சிறிதளவு நீர் கலந்து கரைத்துக் கொள்ளுங்கள்.இதனை தலையில் ஸ்கால்பில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து தலை முடியை அலச வேண்டும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் இது போல் செய்யலாம். இது இயற்கையாய் தலையில் சுரக்கும் எண்ணெயை சுரக்கச் செய்கிறது. இதனால் தலைகளில் ஈரப்பதம் அளித்து பொடுகு வராமல் என்றுமே காக்கும்.

மிளிரும் கூந்தலுக்கு :

மூன்று முட்டையின் வெள்ளைக் கருவுடன் 1 ஸ்பூன் சமையல் சோடாவை கலந்து கொள்ளுங்கள். இதனை ஸ்கால்பில் தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை அலசினால் மிளிரும் கூந்தல் உங்களுக்கு கிடைக்கும்.

Baking soda shampoo for long hair

கூந்தல் ஆரோக்கியமாய் வளர :

தேவையானவை :

சமையல் சோடா -1டேபிள் ஸ்பூன்

முட்டை -1

வோட்கா - 2 டேபிள் ஸ்பூன்

மேலே சொன்னவற்றை நன்றாக கலந்து, தலையில் தடவவும். அரை மணி நேரம் கழித்து கூந்தலை வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்யலாம். இது கூந்தல் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கிறது. ஆரோக்கியமான கூந்தல் பெறலாம்.

Baking soda shampoo for long hair

பேக்கிங் சோடா கூந்தலில் இருக்கும் எண்ணெய், வறட்சி, போக்குகிறது. தலையில் ஏற்படும் பூஞ்சை ஈஸ்ட் தொற்றுக்களை வரவே விடாமல் செய்கிறது. கூந்தல் அடர்த்தியாக வளரச் செய்யும்.

பேக்கிங் சோடா கூந்தலுக்கு அற்புதமான பலனை தரும் என்பதை நீங்கள் உபயோகித்த பின் மற்றவர்களுக்கு சொல்வீர்கள். பேக்கிங் சோடா கூந்தலுக்கு அற்புதமான பலனை தரும் என்பதை நீங்கள் உபயோகித்த பின் மற்றவர்களுக்கு சொல்வீர்கள்.

English summary

Baking soda shampoo for long hair

Baking soda shampoo for long hair
Subscribe Newsletter