For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லாக்டவுன் காலத்தில் நம்ம நடிகைகள் என்ன செய்றாங்கன்னு கொஞ்சம் பாருங்களேன்..!

|

கொரோனா பரவலால் நாம் ஒரு மாதத்திற்கும் மேலாக வீடுகளிலேயே முடங்கி உள்ளோம். வீட்டில் 24 மணிநேரமும் நம்மால் சும்மா இருக்க முடியுமா? நிச்சயம் முடியாது. குறிப்பாக இளம் பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் அடிக்கடி தங்கள் அழகை மேம்படுத்த ஸ்பா, அழகு நிலையங்கள் செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களுக்கு தற்போது அழகு நிலையம் செல்வது என்பது முடியாத ஒன்றாகிவிட்டது. இதனால் பலரும் தங்கள் அழகை எப்படி வீட்டிலேயே பராமரிப்பது என்று யோசித்திருக்கவும் செய்வார்கள்.

சரி, சாதாரண பெண்களே இப்படி என்றால், நடிகைகள் என்ன செய்வார்கள்? நடிகைகள் மட்டும் என்ன விதிவிலக்கா, அவர்களும் அப்படித் தான். வீட்டிலேயே தங்கள் சருமம் மற்றும் முடிக்கு ஒருசில பராமரிப்புக்களைக் கொடுத்து வருகிறார்கள். அவற்றை தங்களின் சமூக வலைத்தள பக்கங்களிலும் வெளியிட்டுள்ளார்கள். இங்கு ஊரடங்கு காலத்தில் சில நடிகைகள் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொண்ட சில அழகு தந்திரங்கள் மற்றும் உதவிக் குறிப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தமன்னாவின் ஹேர் மாஸ்க்

தமன்னாவின் ஹேர் மாஸ்க்

தமன்னாவின் பட்டுப்போன்ற நீளமான கூந்தலின் ரகசியம் என்னவென்று தெரியுமா? அது தான் வெங்காயம். இந்த நடிகை வெங்காய ஜூஸில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தலைக்கு பயன்படுத்துவாராம். இந்த ஹேர் மாஸ்க் தலைமுடி உதிர்வதை எதிர்த்துப் போராடி பாதுகாப்பளிக்கும். இந்த வெங்காய ஹேர் மாஸ்க் நிச்சயம் ஒருவித நாற்றம் தலைமுடியில் இருந்து வீசும். இதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் காரணம். ஆனால் இந்த சல்பர் தான் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து, தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

அனன்யா பாண்டேவின் ஸ்பெஷல் ஃபேஸ் மாஸ்க்

அனன்யா பாண்டேவின் ஸ்பெஷல் ஃபேஸ் மாஸ்க்

லாக்டவுன் காலத்தில் சருமத்திற்கு நல்ல பராமரிப்பைக் கொடுக்க முடியும். நடிகை அனன்யா பாண்டே தன் தாய் சொல்லிக் கொடுத்த ஃபேஸ் மாஸ்க்கை பகிர்ந்துள்ளார். இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு தேவையான பொருட்களாவன தயிர், மஞ்சள் மற்றும் தேன். இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கில் சருமத்தில் மாயத்தை உண்டாக்கும் உட்பொருட்கள் உள்ளன. முக்கியமாக இந்த ஃபேஸ் மாஸ்க்கில் உள்ள மஞ்சள் முகப்பருக்கள் மற்றும் வடுக்களைப் போக்கி, சருமத்தில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்க உதவும். அதில் உள்ள தயிர் மற்றும் தேன் சருமத்திற்கு குளிர்ச்சி மற்றும் ஊட்டமளிக்கும்.

பிரியங்கா சோப்ராவின் ஹேர் மாஸ்க்

பிரியங்கா சோப்ராவின் ஹேர் மாஸ்க்

நடிகை பிரியங்கா சோப்ரா பெரும்பாலும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் அழகைப் பராமரிப்பாராம். இவர் ஆரோக்கியமான ஸ்கால்ப்பைப் பெற தனது தாய் சொல்லிக் கொடுத்த ஹேர் மாஸ்க்கை பகிர்ந்துள்ளார். இந்த மாஸ்க் செய்வதற்கு தேவையான பொருட்களாவன தயிர், தேன் மற்றும் ஒரு முட்டை. இந்த மூன்று பொருட்களும், ஸ்கால்ப் மற்றும் முடியில் மாயங்களை நிகழ்த்தும். இதில் உள்ள தயிர் ஸ்கால்ப்பில் உள்ள இறந்த செல்களை நீக்கி, ஸ்கால்ப்பை சுத்தம் செய்யும். இந்த மாஸ்க் வறட்சியான மற்றும் சிக்கு விழும் தலைமுடிக்கு சிறந்தது.

சோனம் கபூர்

சோனம் கபூர்

சோனம் கபூர் தனது கை, கால் விரல் நகங்களில் உள்ள ஜெல் நெயில் பெயிண்ட்டுகளை நீக்கும் எளிய இயற்கை வழியை பகிர்ந்துள்ளார். அதற்கு ஒரு பஞ்சுருண்டையை அசிட்டோன் திரவத்தில் நனைத்து, விரல் நகங்களின் மீது வைத்து, அதன் மேல் அலுமினியத் தாள் கொண்டு சுற்றி சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேய்க்க வேண்டும். இதை அவர் செய்து, அந்த போட்டோவை இணைய பக்கத்திலும் வெளியிட்டிருந்தார்.

மலாய்கா அரோராவின் அழகு ரகசியம்

மலாய்கா அரோராவின் அழகு ரகசியம்

நடிகை மலாய்கா அரோரா காலையில் எழுந்ததும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பானமான சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பாராம். அதுமட்டுமின்றி, சருமத்திற்கு தினந்தோறும் கற்றாழை ஜெல்லைத் தடவி ஊற வைத்து கழுவுவாரம். இதனால் கற்றாழை சருமத்தில் பருக்கள் வராமல் தடுக்கும், சருமத்திற்கு நீர்ச்சத்தை வழங்கும் மற்றும் சருமத்தில் உள்ள வெட்டுக் காயங்கள் மற்றும் கீறல்களை விரைவில் சரிசெய்யும்.

தீபிகா படுகோனேவின் அழகு தந்திரம்

தீபிகா படுகோனேவின் அழகு தந்திரம்

நடிகை தீபிகா படுகோனே, தனது அழகு ரசகியமாக பியூட்டி ரோலரைப் பகிர்ந்துள்ளார். பியூட்டி ரோலர் சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், கண் வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் சருமத்தை கூலாக வைத்துக் கொள்ளும். மேலும் மற்ற அழகு சாதனப் பொருட்களை விட மிகவும் சிறந்தது. பியூட்டி ரோலரின் முழு நன்மையையும் பெற அவற்றை குளிர வைத்துப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது மற்றும் இதை எப்போதும் மேல் நோக்கியவாறு தான் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

From Tamannah Bhatia to Priyanka Chopra: Celebrities Share Their Quarantine Beauty Secrets

Here are some celebrities, who share their beauty tricks and tips during the quaratine. From a hair mask to removing gel manicure, take inspiration from these celebs.
Story first published: Tuesday, April 28, 2020, 14:00 [IST]